'இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தது ஏன்?
இங்கு உணவுமில்லை. தண்ணீருமில்லை.
அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது.'
(காண். எண்ணிக்கை நூல் 21:4-9)
கடவுளின் பராமரிப்பு சில நேரங்களில் வெறுப்பையும், சலிப்பையும் உண்டாக்கிவிடலாம் என்பதை நாளைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.
இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு வழியில் மன்னாவும், காடையும் பொழிகின்றார்.
ஒரே மாதிரி சாப்பிட்ட அவர்களுக்கு உணவு 'bore' அடித்துவிட்டது.
நாளைய நற்செய்தியிலும் (காண். யோவான் 8:21-30) ஏறக்குறைய இதே நிலையைத்தான் வாசிக்கின்றோம்.
'நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என இயேசு சொல்ல, அதைக் கேட்ட யூதர்கள், 'ஒருவேளை தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ!' என கேலி பேசுகின்றனர்.
இயேசுவைப் பார்த்து பார்த்து சலித்துவிட்ட அவர்களுக்கு, அவர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
தன் மேல் மக்களுக்கு 'bore' அடித்ததால் அவர்கள் மேல் ஒரு சின்ன ட்ரிக் விளையாடுகிறார் கடவுள். விரியன் பாம்புகளை அவர்கள் மேல் ஏவி விடுகின்றார். தங்கள் தவற்றை உணர்ந்து மக்கள் கதறியபோது, விஷம் முறிக்கும் வழியையும் கற்றுக்கொடுக்கின்றார்.
கடவுள் நம் குற்றங்களுக்கு பழி வாங்குபவரா?
இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால், அவரைப் பற்றிய சலிப்பு அல்லது வெறுப்பு நம்மில் எழும்போது ஏதோ ஒரு வகையில் தன் இருப்பை நமக்கு உணர்த்திவிடுகின்றார்.

யார் பெரியவர்? என்பதைக் கண்டுபிடிக்க இறைவனும்,மக்களும் நீயா...நானா எனும் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள்.கொடுக்காதவன் மேல் ஒரே பழிச்சொல் என்றால்,கொடுக்கும் இறைவன் மீது ஏகப்பட்ட புகார்....வாங்கி,வாங்கி பழக்கப்பட்ட நம் மக்களுக்கு.இறைவனும் சளைக்காமல் தன் பிரசன்னத்தை உணர்த்துகிறார் அவர்கள் மீது கருணையையும்,கண்டிப்பையும் மாறி மாறிப் பொழிவதன் மூலம். கடவுள் நம்மை...நம் தீச்செயல்களுக்குப் பழிவாங்குகிறாரா? பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார் தந்தை.நோயில் வாடும் தன் பிள்ளைக்கு சங்கில் கசப்பு மருந்தை ஊட்டும் ஒரு தாயாக நம்மை மண்டையில் செல்லமாகத் தட்டி நல் வழிபடுத்துகிறார்...அவ்வளவே! நல்லதொரு பதிவுக்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!
ReplyDeleteYesu hats off to you. Good reflection
ReplyDeleteCongrats my dear thambi

ReplyDelete