Friday, June 8, 2018

அன்னை மரியின் அமல இதயம்

நாளைய (9 ஜூன் 2018) நற்செய்தி (லூக் 2:41-52)

அன்னை மரியின் அமல இதயம்

இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை 'அன்னை மரியின் அமல இதயம்' கொண்டாடப்படுகிறது.

'உம் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும்' என்ற சிமியோனின் வார்த்தைகள்தாம் மரியாளின் அமல இதயத் திருநாள் கொண்டாட்டத்தின் பின்புலம். இயேசுவின் இதயத்தை ஈட்டி ஒன்று ஊடுருவியது போல அன்னையின் இதயத்தை வாள் ஊடுருவுகிறது.

நாளைய நற்செய்தி வாசகத்தில் சிறுவன் இயேசு எருசலேமில் காணாமல் போய் மீண்டும் கிடைக்கும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

'மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?' - இதுதான் மரியாள் இயேசுவைப் பார்த்த கேள்வி.

'நான் இப்படித்தான்மா செய்ய முடியும். வேற எப்படிச் செய்ய முடியும்?' - என்பதுதான் இயேசுவின் மனதில் எழுந்த விடையாக இருக்கலாம்.

'வானதூதர் உனக்கு மங்கள வார்த்தை அறிவித்த போது நீ ஏன் இப்படிச் செய்தாய்?' என்று தன் தாயைப் பார்த்தும்,

'வானதூதர் உனக்கு கனவில் அறிவுறுத்தியபோது நீ ஏன் இப்படிச் செய்தாய்?' என்று தன் தந்தையைப் பார்த்தும், சொல்ல நினைத்திருப்பார்.

ஆனால், 'நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்' என சுருக்கமாக விடை தருகின்றார்.

... ...
... ...

'அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்'

அன்னை மரியின் அமல இதயம் ஒரே நேரத்தில் கேள்வியும் கேட்டது, மௌனமாக உள்ளத்திலும் இருத்தியது.

கேள்வியும், மௌனமும் இதயத்தின் இரண்டு பகுதிகள்.

இரண்டு பகுதிகளில் இரண்டாம் பகுதியை நோக்கி நகர்வதே நம் பயணம். வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் கேள்விகளை விட மௌனமே விடையாகிறது.

1 comment:

  1. இயேசு,அவரின் தாய் மரியாள், தந்தை யோசேப்பு....இவர்கள் அனைவரும் ஒருவர் மற்றவரைப்பார்த்து கேட்கும் கேள்விகளின் பின்புலத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.அவர்கள் அனைவருமே ஒருவர் மற்றவரின் தேவைகளை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையை விட, விண்ணகத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள் என்பதுதான்.ஒரே நேரத்தில் கேள்வியும் கேட்டு, மௌனமாகவும் இருக்கக்கூடிய அன்னைமரியாளின் அமல இதயம் பற்றிக் குறிப்பிடும் தந்தை கேள்வியும்,மௌனமும் இதயத்தின் இரண்டு பகுதிகள் என்றும்,அதில் இரண்டாம் பகுதியை நோக்கி நகர்வது நம் பயணம் என்றும் கூறுகிறார்.உண்மைதான்....என் இத்தனை கால அனுபவத்தின் இறுதியில நான் கண்ட உண்மையும் கூட அதுதான்.பல நேரங்களில் நம் வார்த்தைகளை விட நம் மௌனத்தால் விஷயங்களை சாதிக்கலாம் மரியாளின் வழியில்.அழகானதொரு பதிவை அன்னைமரியாளின் அமல இதயத்திற்கு அர்ப்பணித்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!

    ReplyDelete