Wednesday, June 20, 2018

அவர்கள் நினைக்கிறார்கள்!

நாளைய (21 ஜூன் 2018) நற்செய்தி (மத் 6:7-15)

கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்!

'எல்லாம் நினைப்புதான்,' 'நினைப்பு பொழப்ப கெடுக்கும்' என்று சொலவடைகள் நாம் கேட்டதுண்டு.

இப்படிப்பட்ட ஒரு நினைப்பைப் பற்றி இயேசு நாளைய நற்செய்தி வாசகத்தில் பேசுகின்றார்.

'நினைப்பு' என்பது 'நிறைவேறாத ஒரு சொற்கோர்வை.'

புறவினத்தார் எப்படிப்பட்ட ஒரு நினைப்பு வைத்திருக்கிறார்களாம்?

'மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் செபம் கேட்கப்படும்'

ஆக, சொற்களுக்கும் செபத்திற்கும் தொடர்பில்லை என்கிறார் இயேசு.

இயேசுவின் செபத்திலும் நிறைய சொற்கள் இருக்கின்றனவே? என்று நாம் சொல்லலாம்.

ஆனால், இங்கே அவைகள் சொற்களாகத் தெரிந்தாலும் அவைகள் எல்லாம் செயல்களே.

ஆக, சுருங்கச் சொல்லி நிறையச் செய்தலே செபம்.

இல்லையா?

2 comments:

  1. " சொற்கள் எல்லாம் செயல்களாக மாறுவதே செபம்" ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால் ஒருவரின் செபமோ,அவர் செபம் செய்யும் முறையோ இறைவனுக்கும்,அவருக்குமுள்ள தனிப்பட்ட விஷயம்.மூடிய கதவிற்குள் முக்காடு போட்டு செய்வதுவே " செபம்" எனில் எத்தனை பேருக்கு அது சாத்தியம்? அடுத்தவருக்குப் புரியாத குழந்தையின் பிதற்றல் பெற்ற தாய்க்கு கோடி இன்பம் தருவதில்லையா? அன்று வானத்தை அண்ணாந்து கூடப் பார்க்க முடியாமல் கூசிக்குறுகி கண்ணீரோடு ஆயக்காரன் செய்தது செபமில்லையா?
    ஒருவனின் பிதற்றலே அவனுக்கு செபமெனில் அவன் பிதற்றிவிட்டுப் போகட்டுமே! யாருக்கு என்ன நஷ்டம்? ஒருவரின் செபம் செய்யும் முறையை வைத்து அவரைப்பலர் எடைபோடுவதைப் பார்த்ததன் கோபம் எனக்கு நிறைய உண்டு. அதன் விளைவு தான் இந்த என்றுடைய பிதற்றல்.என் செபம் எனக்கும்,என்னைப்படைத்தவருக்கும் புரிந்தால் போதும்.ஆகவே தந்தையே! என் நினைப்பு நல்லதுதான்! அது என் பிழைப்பை மட்டுமல்ல... என்னைச்சேர்ந்தவரின் பிழைப்பையும் காக்கும்; கெடுக்காது.. ஆனாலும்" சுருங்கச் சொல்லி நிறைய செய்தலே செபம்." தந்தையின் கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியமா என்ன? வாழ்த்துக்கள்,!!!

    ReplyDelete