நாளைய (28 ஜூன் 2018) நற்செய்தி (மத் 7:21-29)
இருவகை அடித்தளங்கள்
இயேசுவின் மலைப்பொழிவு நாளைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவுபெறுகிறது.
தன் மலைப்பொழிவை இரு உருவகங்களோடு முடிக்கின்றார் இயேசு.
'பாறை மீது கட்டிய வீடா?' அல்லது 'மணல் மீது கட்டிய வீடா?'
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நாம் தெரிவுசெய்ய வேண்டும்.
முதல்வகை நபரை அறிவாளி என்றும், இரண்டாம் வகை நபரை அறிவிலி என்றும் சொல்கிறார் இயேசு.
மணல்மீது வீடு கட்டுவது மிக எளிதானது. வானம் தோண்டுவது முதல் கம்பி ஊன்றுவதுவரை வேலை எளிதாக முடியும். ஆனால் பாறைமீது வீடு கட்டுவது மிகவும் கடினமானது.
இயேசுவின் மலைப்பொழிவு எளிதாக வாழக்கூடிய ஒன்றன்று. அதை வாழ்வாக்க நிறைய துன்பங்களை சீடர் ஏற்க வேண்டும். ஆனால், அப்படி அந்தச் சீடர் ஏற்கத் தொடங்கியவுடன் அழகிய மாளிகை அங்கே உருவாகும்.

மலைப்பொழிவு! அண்ணல் காந்திக்கு மிகவும் பிடித்த மலைப்பொழிவு! அப்படி என்ன இருக்கிறது இந்த மலைப்பொழிவில்?அழகிய மாளிகை கட்டுவதற்கான அடித்தளம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் தருகிறார் இயேசு. மணல் மீது வீடு கட்ட யார் ஆசைப்படுவர்? எல்லோருக்கும் பாறைமீது கட்டப்படும் வீட்டைப்பற்றிய கனவுதான்.ஆனால் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே ! என்ன செய்ய? பெரும் மழைக்கும்,கொடும் புயலுக்கும் பலியாக முடியாத பாறை மீது வீடு கட்ட நிறையத் துன்பங்கள் பட வேண்டும் என்கிறார் தந்தை.நான் 'அறிவாளியா?'இல்லை 'அறிவிலியா?' யோசிக்கும் நேரமிது. யோசிக்கத்தூண்டிய தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete