நாளைய (22 ஜூன் 2018) முதல் வாசகம் (2 அர 11:1-4,9-18,20)
யோசேபா என்னும் குட்டி ஏஞ்சல்
நாளைய நற்செய்தி வாசகம் 'விண்ணுலகில் செல்வம்' சேர்த்து வைத்தலைப் பற்றிப் பேசுவதாலும், மண்ணுலக செல்வமும் இங்கே நிலையில்லாமல், விண்ணுலக செல்வமும் இங்கே உறுதியில்லாமல் இருப்பதால் அதை விட்டுவிட்டு, நாளைய முதல் வாசகத்தை எடுப்போம்.
இசபெல், ஆகாசு என அடுத்தடுத்த அரச குடும்பத்தார் கொல்லப்பட, அரச குடும்பத்தைச் சார்ந்த அத்தலியா என்ற தாயே தன் மகன்கள் மற்றும் மகள்களைக் கொல்லத் துணிகிறார். ஆக, அரசு தனக்குள்ளேயிருந்து விழ ஆரம்பிக்கிறது.
இப்படி எல்லாரும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்க அவ்வீட்டில் குட்டியாக வலம் வந்த பச்சைக் குழந்தை 'யோவாசை' யோசேபா என்னும் சித்தி தூக்கிக்கொண்டு போய் வேறிடத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாள். அப்படிக் காப்பாற்றியதோடல்லாமல் அவனுக்கு ஏழு வயது வந்தபோது அவனை அரசராக்கி அழகு பார்க்கிறாள். அந்தக் குழந்தையைக் கொல்ல குழந்தையின் அம்மாவே வரும்போது சித்தி தன் சாமர்த்தியத்தால் அந்த அநீத தாயைiயும் அவரைப் பின்பற்றுபவர்களையும் அழகிக்கின்றார்.
'யோவாசு ஏழு வயதில் அரசன் ஆனான்' - இப்படி நிறைவடைகிறது நாளைய முதல் வாசகம்.
அத்தலியா - யோசேபா
இந்த இரண்டு பெண்களை எடுத்துக்கொள்வோம்.
அத்தலியா தனக்கு வெளியே நடக்கின்ற நிகழ்வுகள்தாம் தன் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் காரணி என எண்ணி அனைத்தையும், அனைவரையும் அழிக்க முனைகின்றாள். ஆனால், அதுவே அவளது அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.
ஆனால், யோசேபாவோ தானே வெளிப்புற காரணிகளால் அநீதிக்கு உட்படுத்தப்பட்டாலும், இப்போது இருக்கின்ற சூழலில் அனைவருக்கும் நலமானதை எப்படிச் செய்ய முடியும் என யோசித்து அதன்படி நடக்கிறார். இவ்வாறாக, தன் வாழ்க்கையை தனக்கு வெளியே இருப்பவர்களிடமும், இருப்பவைகளிடமும் விற்றுவிடாமல் தன் வாழ்க்கை தன் கையில் என பொறுப்புணர்வோடு செயலாற்றுகிறாள்.
இந்தக் குட்டி ஏஞ்சலால் உயிர்பிழைக்கிறார் குட்டி அரசர்.

தன் வாழ்க்கையை மட்டுமல்ல; தன் மகிழ்ச்சியையும் தனக்கு வெளியே இருப்பவர்களிடம் தொலைத்து விட்டு அல்லாடும் மக்களுக்கு " தன் வாழ்க்கை தன் கையில்" எனப்பொறுப்புணர்வோடு செயலாற்றும் யோசேபா ஒரு மேல் வரிச்சட்டமாய் இருப்பாராக! "You'll always be my little Angel" என்று சொல்லக்கூடிய அளவுக்கு அனைவருக்கும் ஒரு குட்டி ஏஞ்சல் கிடைக்க வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஆமென்
ReplyDelete