Wednesday, December 7, 2016

அமல உற்பவி

நாளை அன்னை மரியாளின் அமல உற்பவத் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் நாளை விடுமுறை. நாளைய தினம்தான் வீடுகளில் குடில் அமைப்பார்கள். குடில் பொருள்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதும். நாளை முதல் இல்லங்களில் நட்சத்திரங்கள் மற்றும் ஒளி விளக்குகள் தொங்கவிடுவார்கள்.

அன்னை மரியின் அமல உற்பவம் ஒரு விசுவாசக் கோட்பாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவரின் தூய்மை மற்றும் மாசின்மை பற்றிய எண்ணங்கள் திருஅவையில் பரவலாக இருந்தன.

பவுலோ கோயலோ என்னும் நாவலாசிரியரும் தன் எல்லா புதினங்களையும்,

'அமல உற்பவியான மரியாளே,
உன்னை நாடிவரும் மக்களுக்கு அடைக்கலமாய் இரும்!'

என்றுதான் தொடங்குவார்.

'தூய்மை' என்பது ஒரு மேலான மதிப்பீடு.

சமூகவியல் கருத்தின்படி மனிதர்கள் தங்களில் காணப்படும் உயர்ந்த எண்ணங்களையும், மதிப்பீடுகளையும் அப்படியே உயர்த்தி அவற்றை கடவுளாக்கி விடுவார்கள். ஆக, கடவுள் என்பது நம் ஒட்டுமொத்த மேலான எண்ணங்களின் தொகுப்பு என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் கருத்து.

'தூய்மை' என்பது கடவுளுக்கு அடுத்த நிலை என்பது ஆங்கிலப் பழமொழி.

ஆடையில் தூய்மை, உணவில் தூய்மை, உறைவிடத்தில் தூய்மை என தூய்மையை நாம் பேணுகிறோம்.

'தூய்மை' என்பதை வைத்தே மனித இனத்தில் பிரிவுகளும் உண்டாகின.

ஆக, தூய்மை என்பது பல நேரங்களில் மக்களை பிரிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. 'தூய உணவு உண்பவர்கள்,' 'தீட்டு உணவு உண்பவர்கள்' என்ற பிரிவினை இன்றும் இருக்கிறது.

ஆனால், மரியாளின் தூய்மை நம்மை அவரிடமிருந்து பிரித்துவிடவில்லை.

'நான் தூய்மையற்றவர்,' 'மரியா தூய்மையானவர்' என்று மரியாவை அந்நியமாக்கும் அல்லது பிரித்துப்பார்க்கும் விழா அல்ல இது. மாறாக, அவரோடு நம்மையே ஒன்றித்துக்கொள்ளும், அவரின் தூய்மையில் பங்குகொள்ளும், அவரின் தூய்மை போல நம் தூய்மையை அமைத்துக்கொள்ளும் விழா.

நம் உள்ளமும், இல்லமும் தூய்மை பெற அந்த அமலி அருள்வாராக!

அனைத்து அமலன், அமலி, நிர்மலாக்களுக்கும் நாமவிழா வாழ்த்துக்கள்.

2 comments:

  1. டிசம்பர்8 ம்நாள். என்னால் மறக்க முடியாததொரு நாள். காரணம் " அமல உற்பவியான மரியாளின்" திருநாள் அல்ல...அது என்னுடைய 'புது நன்மை' தினம்.மரியாளைப்பற்றி சரியாகப் புரிந்து கொள்ளுமுன்னரே ஒரு ஏழு வயது சிறுமிக்கு கிளுகிளுப்பு தருவது அவள் புதுநன்மையாகத்தானே இருக்க முடியும்! வளர்ந்த பின்னரே இந்த அமல உற்பவம்,தூய்மை இதெல்லாம்! நாம் தூய்மையற்றவர்கள் எனும் எண்ணம் நம்மை நம் தாய் மரியாவிடமிருந்து பிரிக்காமல், அவரோடு நம்மையே ஒன்றித்துக்கொள்ளும்,அவரின் தூய்மையில் பங்கு கொள்ளும்,அவரின் தூய்மை போல நம் தூய்மையையும் அமைத்துக் கொள்ளும் விழா! அழகான விளக்கம் தருகிறார் தந்தை.ஊரெல்லாம் ' அம்மா'வை இழந்த சோகத்தில் முகாரி பாடிக்கொண்டிருக்கும் இந்நேரம் " உண்மையான" "அம்மா"... இவள்தான் என்று இனம் கண்டு கொள்வோம்.அவளின் மடி தான் நம் உலகம் என்பதை நம்புவோம்.அன்னைக்கு அழகானதொரு ' பூபாளம்' இசைத்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. GITA - New York

    Tamilnadu is one area in India that exhibits enormous devotion to Blessed Mother Mary.

    Pilgrim Centers, Multiple Devotions, CD Music Production and Distribution...Oh, things really fascinate me.

    However,

    a. Do the Christian Society permit, honor and celebrate women writers and women lyricists and women composers to come to light in general?

    b. In over 60 years of Tamil Cinema, how many Women Directors, Producers, Lyric Composers and Music Directors have we acknowledged?
    Don't we have any?
    Or do we black them out?

    c. While honoring Blessed Mother at the Altar of piety and devotion, what do we do with our household Blessed Mothers?
    And her myriad incarnations?

    ReplyDelete