கிரகம் க்ரீன் எழுதிய 'தி என்ட் ஆஃப் தி அஃப்ஃபயர்' என்ற புதினத்தை வாசித்து முடித்தேன்.
கத்தோலிக்க எழுத்தாளர்.
தான் காதலித்த ஒரு பெண் (தன்னைக் காதலித்த ஒரு பெண்) தன் நண்பனுக்கு வாழ்க்கைத் துணையாகிவிட, தன் நண்பன்மேல் வெறுப்பும், தன் காதலி மேல் பொறாமையும் கொள்ளும் ஒருவனின் உள்மனப் போராட்டமே நாவலின் ஒற்றைவரி.
போகிற போக்கில் பாவம், காமம், காதல், செபம், நரகம், மோட்சம், கடவுள், அன்பு, வெறுப்பு, பொறாமை என அனைத்தையும் வரையறுக்கிறார் ஆசிரியர்.
இந்த நாவலில் நான் கோடிட்ட சில வரிகளை தமிழாக்கம் செய்கிறேன் இங்கே:
'உன்னை உன் பெற்றோர் அல்லது கடவுள் தவிர வேறு யாரும் அன்பு செய்ய முடியாது என்ற ஒரு நிலையில் நீ மற்ற ஒருவரால் அன்பு செய்யப்படுவதைக் கண்டு கொள்வது ஒரு ஆச்சர்யமான அனுபவம்.'
'கதைக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. நாமாக ஒன்றை எடுத்துக்கொண்டு இதுதான் தொடக்கம், இதுதான் முடிவு என நினைத்துக்கொள்கிறோம்.'
'நான் உன்னை என் கைகளால் தொட வேண்டும். நான் உன்னை என் நாக்கால் சுவைக்க வேண்டும். அன்பும் செய்யும் ஒருவனால் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க முடியாது.'
'நான் உன்னை வெறுக்கிறேன், கடவுளே. நீ இருப்பது போல நினைத்து!'
'பாதுகாப்பற்ற நிலைதான் காதலர்கள் உணரும் கொடுமையான உணர்வு. ஆசையே இல்லாத திருமணம்கூட சில நேரங்களில் நல்லது எனத் தோன்றுகிறது. பாதுகாப்பற்ற உணர்வு வாழ்வின் அர்த்தத்தை திரித்து, நம்பிக்கையை விஷமாக்கிவிடுகிறது.'
'என் பொறாமையின் அளவைக் கொண்டே நான் என் அன்பின் அளவைக் கணிக்கிறேன்.'
'வலியை எளிதாக எழுதிவிட முடியும். ஏனெனில் வலியில்தான் நான் யார் என்று உணர்கிறேன். ஆனால் மகிழ்ச்சியை பற்றியை ஒருவர் எப்படி எழுத முடியும்?'
'உன்னை என் தோழியாக நான் ஒருபோதும் எண்ணியதில்லை. ஏனெனில் தோழி இல்லாமல் ஒருவனால் இருக்க முடியும்!'
'நீ பயப்பட வேண்டாம். காதல் முடிவதில்லை. நாம் காணாமல் இருக்கிறோம் என்பதற்காக!'
'அவளோடு பேசுவதற்கு அடுத்த நல்ல செயல் அவளைப் பற்றிப் பேசுவது.'
'ஒருவர் துன்பப்படும்வரைதான் அவர் வாழ்கிறார்.'
'நாம் நம் மனத்தால்தான் அன்பு செய்கிறோம். மனத்தால் மட்டுமா? அன்பு தன்னை விரித்துக் கொண்டே போகிறது. எந்த உணர்வுமற்ற நகத்தில் கூட நாம் அன்பை உணர முடியும். நாம் உடையால்கூட நாம் ஒருவரை அன்பு செய்ய முடியும்.'
'இறுதியாக, நாம் அனைவரும் மனிதர்களே. அன்பே, அன்பே அனைத்தையும் குணப்படுத்தும் என்ற மாயையில் வாழும் மனிதர்கள்.'
'நான் அவளை அதிகம் நினைத்துப் பார்க்கவில்லை. அவள் இல்லாத பொழுதுகள்கூட அவளைப்பற்றியே நிறைந்திருந்தன.'
'நீ வைத்திராத ஒன்றை உன்னால் இழக்க முடியாது. உன்னுடையது அல்லாத ஒன்றை நீ வைத்திருக்க முடியாது. உன்னோடு நிலைக்காத ஒன்றை நீ பிடித்திருக்க முடியாது.'
'எனக்குச் சொந்தமாகாத ஒன்றை நான் இழந்து விட்டேன்.'
இந்த நாவலை வாசிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. கதையின் சில இடங்கள் குழப்பமாக உள்ளன. கதையில் பேசுவது யார் என்பது தெளிவில்லை. ஆங்கில பதங்களும் கொஞ்சம் பழமையானவை. கதை நடக்கும் காலம் 1929 முதல் 1944ஆம் ஆண்டு முடிய.
ஆசிரியரின் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான் இது என்பது விக்கிபீடியாவின் கருத்து.
அன்பின் மற்ற பரிமாணத்தை அழகுற எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

தான் பார்த்த,படித்த அனுபவங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கமுள்ள தந்தை இங்கும் தான் படித்த " தி என்ட் ஆஃப் தி அஃப்ஃபயர்" எனும் புதினத்தின் சாராம்சத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.ஒரே புதினம் அதைப்படிக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான கருத்தைச்சொல்வதில்லை. படிப்பவரின் கோணத்தைப்பொறுத்து அது மாறுபடுகிறது.தந்தை இங்கு கோடுகாட்டியுள்ள விஷயங்களில் என் மனத்தைத்தொட்ட வரிகள்....1." உன்னை உன் பெற்றோர் அல்லது கடவுள் தவிர வேறு யாரும் அன்பு செய்ய முடியாது என்ற நிலையில் நீ மற்ற ஒருவரால் அன்பு செய்யப்படுவதைக்கண்டு கொள்வது ஆச்சரியமான அனுபவம்.2.உன்னை என் தோழியாக ஒருபோதும் எண்ணியதில்லை.ஏனெனில் தோழி இல்லாமல் ஒருவனால் இருக்க முடியும்.3. இறுதியாக நாம் அனைவரும் மனிதர்களே.அன்பே,அன்பே அனைத்தையும் குணப்படுத்தும் என்ற மாயையில் வாழும் மனிதர்கள்." உண்மைதான்...அனைத்தையும் தாங்கிக்கொள்ளக்கூடிய,அனைத்தையும் சகித்துக்கொள்ளக்கூடிய இந்த 'அன்பு' என்ற ஒன்று இல்லையெனில் நாம் வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.ஆகவே அன்பை நேசிக்கப்பழகுவோம்...அது எந்த உருவத்தில் இருப்பினும். தந்தைக்கும்,அனைவருக்கும் " ஞாயிறு" வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteGITA - New York
ReplyDeleteDear Fr. YESU:
Even as you are a scholar of Scripture, I love the way you maintain familiarity with other areas.
Expertise in a single field at times makes the expert a blind man reg. other aspects of life.
What struck as you read through Graham Greene seems great.
The fact that Mr Greene writes impressive lines and observations is one thing.
The other fact is equally important: it takes a smart reader to look out for "pearls of great value" and pick them to line up for us...
You say Graham Greene is a Catholic Novelist.
Where are such notable novelists - Catholic ones - in Tamilnadu?
Is the Church in Tamilnadu a sort of "widow" in a sense - unable to birth poets, novelists and writers?