இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி, 'நான் உமக்குச் சொல்கிறேன்.நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!' என்றார்.
... ... ...
இதைக்கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய் ... 'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று பேசிக்கொண்டார்கள்.
(காண். லூக் 5:17-26)
நான்கு பேர் அவரைத் தூக்கிவர அவர் அழைத்துவரப்படுகின்றார்.
குணம் அடைந்தவுடன் தன் கட்டிலையே தூக்கும் அளவிற்கு வலிமை பெறுகின்றார்.
அவர் தன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு சாலையில் போனபோது மக்கள் என்ன பேசியிருப்பார்கள்?
என் அறையின் நாற்காலியை அடுத்த அறைக்குத் தூக்கிக்கொண்டு போகவே எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஆனால் அந்த நபர் எப்படி கட்டிலை தலையில் தூக்கிக்கொண்டு தன் வீடு சென்றிருப்பார்?
அவரைத் தூக்கி வந்த அந்த நான்கு பேர் எங்கு சென்றார்கள்?
சின்ன வயசுல எங்க ஊருக்கு எந்த கார் வந்தாலும் அதன் பின்னாலே கொஞ்ச தூரத்துக்கு ஓடுவோம். எப்படியும் அந்தக் காரைத் துரத்தி தொட்டுவிட வேண்டும் என்ற ஒரு வீராப்பு இருக்கும் அன்று. காரில் செல்பவர்கள் கடிந்து கொண்டாலும் நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்.
இவர் கட்டிலைத் தூக்கிக்கொண்டு சென்றபோது அவரைச்சுற்றியும் சிறார் கூட்டம் ஓடியிருக்கும்.
அவர் அவர்களை அதட்டியிருப்பாரா?
அல்லது புன்னகை செய்திருப்பாரா?
'இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!' என்று மக்கள் சொல்கிறார்களே. அப்படி எதை அவர்கள் புதுமை என நினைத்தார்கள்?
எல்லாரையும் சார்ந்திருந்த ஒருவர் எவரையும் சாராத ஒரு கட்டின்மை அடைந்த நிலைக்கு கடந்து போகின்றார்.
அதுதான் புதுமை என நான் நினைக்கிறேன்.

" கட்டின்மை".. புதியதொரு வார்த்தை.அழகானதும் கூட.முடக்குவாதமுற்ற ஒருவன் இயேசுவின் கருணையால் சுகம் பெற்றதைக் கூறிவிட்டு இதில் மக்கள் எதைப் புதுமை என நினைத்தார்களென தந்தை ஒரு கேள்வியையும் கேட்டுப் பின் அவரே " எல்லாரையும் சார்ந்திருந்த ஒருவர் பின் எவரையும் சாராத ஒரு கட்டின்மை அடைந்த நிலைக்குக் கடந்து போவதுதான் புதுமை" என முடிக்கிறார்.உண்மைதான் நமக்குள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நடக்கும் ஆயிரமாயிரம் புதுமைகளை நாம் கண்டுகொள்ளாமல் நமக்கு வெளியே நடக்கும் புதுமைகளுக்காக்க் காத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.ஒரு சில தூறல் மழை விழுந்தாலும் கூட எங்கள் தெருக்களில் இறங்கி நடந்து, பின் பத்திரமாய் வீடு வந்து சேருவதும் ஒரு புதுமைதான்.அவ்வளவு ஏன்...நாம் வாயிலிட்ட உணவானது இரத்தத்துடன் சேர்ந்து நமக்குத் தேவையான சக்தியைக்கொடுப்பதும்,நம்மைச்சுற்றியுள்ள காற்றிலிருந்து நாசியானது நமக்குத்தேவையானதை மட்டுமே பிரித்தெடுத்து நம் உடலுக்குள் செலுத்தி நம்மை உயிருடன் வைத்திருக்கும் வித்தையும் ஒரு புதுமைதான். இந்த பொழுது எத்தனையோ பேர் மருத்துவமனைகளில் வலி,வேதனையுடன் போராடிக்கொண்டிருக்கையில் நாம் சுகமாக வீட்டில் அமர்ந்து காப்பியை சுவைப்பதும் கூட ஒரு புதுமைதான்.இவைகளை நினைத்துப் பார்க்க நமக்கு எங்கே நேரம்? நம்பிக்கையுடன் இறைவனிடம் ஒன்றைக்கேட்கையில் அவர் அதை நமக்குத்தருவதுமன்றி நம் பாவங்களையும் மன்னிக்கிறார் என்று கூறுகிறது விவிலியம். அன்றாடம் நாம் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் புதுமைகளுக்காக நன்றி கூறுவது மட்டுமின்றி நமது இந்த உடலின் நுணுக்கங்களையும் புரிந்து கொள்வோம்; அந்த உடலின் அவயவங்களைக் கரிசனையுடன் கவனித்துக்கொள்வோம். சிறிய வார்த்தைகளின் வழியே பெரிய விஷயங்களைப் போகிற போக்கில் அவிழ்த்துவிடும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteHi Yesu good evening. After the school I am sending the students as well as enjoying your write up
ReplyDeleteGITA - New York
ReplyDeleteJesus as healer of the paralytic...
When there is so much of paralysis in every sphere of life today, where is Jesus?
Or do Churches pray in laziness without embarking on active
healing?
Or, worse still, Is Christianity as practiced by the select few righteous disciples in certain quarters systematically paralyzing naturally active and able bodied women and men?