'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.
கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்.
அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.'
(எசாயா 40:25-31)
டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆன்மா இறைவனில் நிலையான இளைப்பாற்றியைக் கண்டடைவதாக!
செல்வி. ஜெயா அவர்களுக்கு நாளைய முதல்வாசகப் பகுதி அழகாகப் பொருந்துகிறது.
தன் வாழ்நாள் முழுவதும் தன்னைத் தோல்விகள் விரட்டினாலும் ஓடினார். களைப்படையவில்லை. நடந்தார். சோர்வடையவில்லை.
ஆனால், அவரின் இறப்பு இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாவம்! தனிமை ஒன்றையே தன் வாழ்வின் துணையாக இறுதிவரை கொண்டிருந்தார்.
சின்ன உருவகம்.
என் கழுத்தில் பெரிய தங்க மாலை இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
நான் தனியாக நடந்து செல்கிறேன்.
என் தங்க மாலையைப் பார்த்த சிலர் என்னோடு சேர்ந்து நடக்கின்றனர்.
என்னோடு பேசுகின்றனர். சிரிக்கின்றனர். வழிநடக்கின்றனர்.
அவர்கள் என்னிடம் பேசுவது என் கழுத்தில் இருக்கும் தங்க மாலைக்குத்தான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இருந்தாலும், வழி தூரமாகவும், பயமாகவும் இருப்பதால் நான் அவர்களை என் துணைக்கு வைத்துக்கொள்கிறேன்.
சில நாட்களில் என்மேல் உள்ள அக்கறை மாறி என் தங்க மாலை பற்றியே அவர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள்.
நான் என்ன செய்வது என்று புலம்புவேன்.
அவர்களை வைத்துக்கொள்ளவும் முடியாமல், விடவும் முடியாமல் எத்தனிப்பேன்.
நிற்க.
இந்த நிலைதான் ஜெயாவுக்கு இறுதியில் இருந்தது.
'பகைவர்களை வென்றுவிட்டேன். ஆனால் நண்பர்களிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே!'
என்ற கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

Good morning Yesu. Our CM was indeed a grate Amma. May God grand her eternal bliss
ReplyDeleteGood morning Yesu. Our CM was indeed a grate Amma. May God grand her eternal bliss
ReplyDeleteஏசாயாவின் வரிகளை ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையோடு அலசியிருப்பது அழகான ஒப்புமை.வாட்ஸப்பில் கண்ட சில வரிகள்...."கணவனோடும்,குடும்பத்தோடும் பிரச்சனைகள் என்றாலே சிதைந்து போவதும்,செத்துப்போவதுமாய் இருக்கும் பெண்கள் மத்தியில் இறுதிவரை போர்க்களத்தில் நின்ற வீரமங்கை நம் முதல்வர்.வென்றாலும்,வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நின்று எல்லோரையும் அதிரவைத்த தைரியத்துக்குச் சொந்தக்காரர்." உண்மைதான்...வாழ்வில் தனியே நின்று போராடும் எந்தப்பெண்ணும் கற்றுக்கொள்ள இவரிடம் விஷயங்கள் நிறையவே உள்ளன. தந்தையின் அந்தத் தங்கமாலை பற்றிய உருவகமும், பதிவின் இறுதியில் வரும் கண்ணதாசனின் வரிகளும் நம் மறைந்த முதலமைச்சருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கின்றன.
ReplyDelete" அவரின் ஆன்மா இறைவனில் சாந்தி அடையட்டும்!"...
May her soul rest in peace... neatly written obituary...
ReplyDeleteGITA - New York
ReplyDeletea. Let me offer my prayers for the repose of Ms Jaya.
b. A democratically elected official shouldn't paralyze his or her State by his or her demise.
c. It is pretty "sickening" to watch men [MPs, MLAs and Party Cadres] bowing, bending, prostrating etc. while these persons would NOT respect their own primary AMMAS as their mothers, wives, daughters and other female relatives at home.
An expression of obeisance and an act of obedience in a public forum is totally hypocritical when the culture's home front lies disrespected and neglected...