Friday, May 22, 2015

மலரச்செய்யும்

'தூயதோர் உள்ளத்தை என்னகத்தே உருவாக்கும்.
உறுதிதரும் ஆவியை என்னுள் மலரச்செய்யும்.'
(திபா 51:10)

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை செபத்திலும் தரப்பட்டுள்ள முதல் பாடல் திபா 51. உரியாவின் மனைவி பெத்சபாவுடன் செய்த பாவத்தை நாத்தான் இறைவாக்கினர் வழியாக யாவே இறைவன் சுட்டிக்காட்ட, மனந்திரும்பி தாவீது பாடிய பாடல்தான் திபா 51.

தூய அகுஸ்தினார், 'மனிதருக்குள் இருக்கும் பாவத்தை நோக்கிய ஆசை(!) தாயின் வயிற்றிலிருந்தே வருகிறது' என்று தன் 'மனக்கிடக்கைகள்' நூலில் சொல்லக் காரணமும் இந்தத் திருப்பாடல்தான்.

ஒவ்வொரு முறை திபா 51ஐ வாசிக்கும்போது மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் கொஞ்ச நேரம் பொறுமையாக வாசிப்பேன்.

தூயதோர் உள்ளம் - உறுதிதரும் ஆவி!

வருகின்ற ஞாயிறு தூய ஆவியானவர் பெருவிழாவை நாம் கொண்டாடவிருக்கின்றோம்.

தூய ஆவியானவர் குடியிருக்கும் உள்ளம்தான் தூயதோர் உள்ளம். அல்லது தூயதோர் உள்ளத்தில்தான் தூய ஆவியானவர் குடியிருக்க முடியும்.

தூய்மை என்பது தனிநபர் சார்ந்தது. எனக்கு தூய்மை என்று தெரிவது உங்களுக்கு அழுக்காக தெரியலாம். உங்களுக்கு தூய்மை எனத் தெரிவது எனக்கு ஒருவேளை அழுக்காக தெரியலாம். ஆனால், தனிநபருக்கு தூய்மை என்றால் என்ன என்பதை உணர்த்துபவர் இந்தத் தூய ஆவியானவர்தான்.

மிக முக்கியமானது தூய்மையான உள்ளம் அல்ல. மாறாக உறுதிதரும் ஆவி.

'உறுதிதரும் ஆவி' என்று தாவீது குறிப்பிடுவது என்னவென்றால், 'நான் ஒருநாள் தூய்மையாயிருப்பதை மட்டும் விரும்பவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் தூய்மையாயிருப்பதையே விரும்புகிறேன்!' என்கிறார்.

ஆக, வருகின்ற தூய ஆவியானவர் பெருவிழாவில் நாம் இந்த இரண்டு வரங்களைக் கேட்கலாமே:

அ. நான் நல்லவனாக இருக்க வேண்டும்.

ஆ. நான் ஒவ்வொரு நாளும் நல்லவனாக இருக்க வேண்டும்.


3 comments:

  1. அழகான பதிவு.தாவீதின் பாவத்தை யாவே இறைவன் இறைவாக்கினர் வழியே சுட்டிக்காட்டியது போல நாம் தவறிவிழும் நேரங்களிலும் பலர் நம்மைத் தூய்மைப்படுத்தப்படுத்த வருகின்றனர் தூய ஆவியின் துணையோடு.இந்தத் தூய்மை நம்மில் தொடர்ந்து இருக்கவேண்டுமெனில் தூய ஆவியானவர் நம்மில் தொடர்ந்து வாசம் செய்ய வேண்டும்.அதன் பயனாக நமக்குக் கிடைக்கும் கொடைதான் " நாம் ஒவ்வொரு நாளும் நல்லவனாய் இருப்பது". முயன்றுதான் பார்ப்போமே!!!

    ReplyDelete
  2. Anonymous5/23/2015

    Hi Yesu good morning. How are you. Today's reflection is so nice. I have been reading through email Yesu. So I didn't write comments on your writing. Call me when you are free. Have a nice day. Take care of your health

    ReplyDelete
  3. Anonymous5/23/2015

    Hi Yesu good morning. How are you. Today's reflection is so nice. I have been reading through email Yesu. So I didn't write comments on your writing. Call me when you are free. Have a nice day. Take care of your health

    ReplyDelete