Wednesday, September 24, 2014

ஓடிக்கொண்டே இராதீர்கள்!

'நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள். அங்கிருந்தே புறப்படுங்கள்' (லூக்கா 9:4)

நாளைய நற்செய்தியில் இயேசு பன்னிரு திருத்தூதர்களை பணிக்கு அனுப்பும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

இயேசுவின் சீடர்களின் பணி அவரோடு இருப்பதற்கு மட்டுமல்ல, அனுப்பப்படுவதற்கே! அழைக்கப்படுதலும், அனுப்பப்படுதலும் சீடத்துவம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

அவர்களைப் பணிக்கு அனுப்பும்போது அவர் கொடுக்கும் 'யூஸர் மேனுவலே' இந்த நற்செய்திப் பகுதி.

தங்கியிருங்கள்! இதுதான் அறிவுரையின் மையம்.

'ஓடிக்கொண்டே இராதீர்கள்!'

இன்று நம் வாழ்வில் நமக்கு பெரிய போராட்டமாக இருப்பது இந்தந் தங்கியிருத்தல் தான். ஒரு இடத்தில் மனதையும், உடலையும் வைத்திருப்பது பெரிய போராட்டமாக இருக்கின்றது. இன்று இணையம் மற்றும் அலைபேசி வழியாக நாம் அதிகமாக விரிந்திருக்கிறோம். அதிகமாக வெளியே புறப்பட்டுப்போகின்றோம். நமக்கு நாமே தங்கியிருக்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி!

பறக்கத் துடிக்கும் பறவை சற்று அமர்ந்தால் தானே மீண்டும் பறக்க முடியும்!


1 comment:

  1. உழைப்பவனுக்கும்,ஓடுபவனுக்கும் கண்டிப்பாக ஒரு' வேகத்தடை' தேவைப்படுகிறது.இந்த வேகத்தடை அவனுக்கு ஓய்வை மட்டும்ல, தன்னைப்பற்றி,தன்னைச்சுற்றியிருப்பவர் பற்றி,தான் செய்த, செய்யப்போகும் செயல்பாடு பற்றிய ஒரு சுய சிந்தனையையும் தருகிறது.இதை சாத்தியமாக்குவது 'தங்குதல்'..உடல், உள்ளம் இரண்டுக்குமே.ஆகவே 'தங்குவோம்'; நம் சீடத்துவத்தைத் தாங்கிப் பிடிப்போம்....அனைவருக்கும் காலை வணக்கம்...

    ReplyDelete