யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். (1 கொரிந்தியர் 1:22-24)
நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ஆர்க்கிமெடீஸ் ஒருநாள் என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தப் பால்வெளியில் நான் நிற்கக் கொஞ்சம் இடமும், நீண்ட நெம்புகோலும் கொடுங்கள். நான் இந்தப் பூமியின் இருப்பிடத்தை நகர்த்திக் காட்டுகிறேன்'. ஆனால் அன்று அதை அவருக்குக் கொடுப்பார் யாருமில்லை.
கல்வாரி என்ற இடத்தில் நின்று கொண்டு, சிலுவை என்ற நெம்புகோலால் அன்பை நோக்கி, மன்னிப்பை நோக்கி, தியாகத்தை நோக்கி பூமிப்பந்தை மாற்றிப் போட்டார் இயேசு.
நாளை திருச்சிலுவையின் மகிமை பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
எதற்காக தன் மகன் இயேசுவை கடவுள் சிலுவையில் அறையப்பட்டு இறக்க வேண்டும் என நினைத்தார்? ஒரு தந்தை எப்படி தன் மகனையே பலியாகக் கேட்டார்? சிலுவையில் இயேசு இறந்ததால் நம் பாவம் அழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? சிலுவையில் இயேசு அறையப்பட்டபோது அங்கே அவர் கடவுளாக இறந்தாரா? அல்லது மனிதராக இறந்தாரா? கடவுளாக இறந்தார் எனில் அந்த நாளில் கடவுளின் முழுமைக்குக் குறைவு வருமே? மனிதராக இறந்தார் எனில் அவரோடு இறந்த மற்ற மனிதர்களைப் போலத்தானே அந்த இறப்பும் இருந்திருக்க வேண்டும்? இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு ஆலயம் சம்பந்தப்பட்டது. ஆலயம் சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு கல்லெறியே தண்டனை. பின் ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்? - இவைகள் எல்லாம் விடைதெரியா மில்லியன் டாலர் கேள்விகள்.
சிலுவை என்ற ஒரு எதார்த்தத்தை இறையியலாக மாற்றியவர் தூய பவுலடியார். யூதர்கள் வலுவின்மை எனவும், கிரேக்கர்கள் மடமை எனவும் நினைத்ததை கடவுளின் வல்லமை என்றும், கடவுளின் ஞானம் என்றும் எதிர்ப்பதங்களின் வாயிலாக சிலுவை இறையியலுக்கு அடித்தளமிடுகின்றார். பவுலடியாரின் இறையியில் பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2ஆம் அதிகாரத்தில் நிறைவு பெறுகிறது. 'கெனோசிஸ்' (வெறுமை) என்ற கிரேக்க வார்த்தையை மையமாக வைத்து இயேசுவின் வாழ்விற்கு சிலுவையின் வழியாக ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார்.
இன்று நாம் வாழும் உலகம் 'ஐக்கன்களின்' உலகம். ஒவ்வொன்றையும் குறிக்க, அடையாளப்படுத்த நாம் 'ஐக்கன்களை' வைத்திருக்கிறோம். 'எஃப்' என்றால் ஃபேஸ்புக், 'டி' என்றால் டுவிட்டர், 'கடித்த ஆப்பிள்' என்றால் ஆப்பிள் தயாரிப்புகள், 'நான்கு ஜன்னல்கள்' என்றால் விண்டோஸ், 'கை உயர்த்தும் பச்சை மனிதன்' என்றால் ஆண்ட்ராய்ட், 'எம்' என்றால் மோட்டோரோலா, 'எம்' என்றால் மேக்டொனால்ட்ஸ் என ஐக்கன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அந்த வகையில் 'கிராஸ்' என்பதும் இன்று ஒரு ஐக்கன். மருத்துவமனையில், ஆம்புலன்சுகளில், முதலுதவிப் பெட்டிகளில், பள்ளிகளில், ஆலயங்களில், கொடிக்கம்பங்களில், கால்குலேட்டர்களில், பெண்களின் சங்குக் கழுத்துக்களில், மோதிர விரல்களில் என எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அதிகமாக நாம் பார்த்து அதன் பொருளை மறந்துவிட்ட ஒரு ஐக்கன் தான் 'கிராஸ்'.
சிலுவைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்க முடியும். சிலுவை என்றால் இணைப்பு, சிலுவை என்றால் பிறரன்பு மற்றும் இறையன்பின் பிணைப்பு, சிலுவை என்றால் துன்பம், சிலுவை என்றால் கூட்டல் என தனிநபரைப் பொறுத்தே அர்த்தம் இருக்கின்றது.
இன்று திருச்சிலுவையின் மகிமை என்று சொல்லும் போது கூட்டத்தோடு சேர்ந்து நாமும் அதே போல சொல்லிவிட்டு வருவதற்குப் பதிலாக, 'இந்தச் சிலுவை என்றால் என்ன?' 'இந்தச் சிலுவை அடையாளம் எனக்குக் கற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது எனக்கு என்ன அர்த்தம் கொடுக்கும்?' 'சிலுவை என்றால் என்ன?' என்று இன்று நம்மை யாராவது கேட்டால் நாம் என்ன சொல்வோம்?'
சிலுவை அன்றும், இன்றும், என்றும் மறைபொருளாகவே இருக்கும்.

மோசே வெண்கலச் சிலுவையைத் தூக்கிக் காட்டியபோது அதை நிமிர்ந்து பார்த்தவரெல்லாம் உயிர்பிழைத்தார்கள் எனக்கூறுகிறது விடுதலைப்பயண நூல்.'ஐக்கான்கள்' இன்று ஒரு அர்த்தம் தரலாம்; அது நாளை வேறாக இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.ஆனால் 'சிலுவை' என்பது என்றுமே 'வாழ்க்கை' 'உயிர்ப்பு', 'மேன்மை' ...இவைதான் கிறிஸ்துவை அறிந்தவனுக்கு.ஒருவேளை சிலுவை அடையாளம் நமக்குக் கற்றுத்தரப்படாமல் இருந்திருந்தால்..!? அதனாலென்ன? 'மறைபொருளாகவே' இருந்திருக்கலாம்..நமக்கு அறிவிக்கப்படாத எதற்குமே 'மவுசு' அதிகம் தானே! அனைவருக்கும் 'திருச்சிலுவைத்' திருநாள் வாழ்த்துக்கள்...
ReplyDelete