Sunday, September 21, 2014

ஏனென்று கேட்க முடிகிறதா நம்மால்?

அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, 'தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். (காண் 20:1-16அ)

இயேசு சொல்லும் உவமைகளில் பல கேள்விகளை எழுப்பும் உவமை தான் நாளை நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்க இருப்பது. எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களும், ஒரு மணி நேரம் வேலை பார்த்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'இது அநீதி!' என்று கொடிபிடிக்கின்றனர். 'ஆனா தம்பி! நீ ஒத்துக்கிட்டதைத் தான் நான் கொடுத்துவிட்டேனே!' என்கிறார் தோட்ட உரிமையாளர்.

வாழ்க்கையின் அளவு கோல் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

ஒரு சிலரை வாழ்க்கை கழுத்தை நெரிக்கிறது.
ஒரு சிலரை மடியில் போட்டு வீசி விடுகிறது.
ஏனென்று கேட்க முடிகிறதா நம்மால்?


2 comments:

  1. " என் எண்ணம் உங்கள் எண்ணம் போல் இருப்பதில்லை" என்கிறது விவிலியம். சரிதான்.. எட்டுமணி நேரம் வேலை பார்த்தவர்களுக்கு ஒத்துக்கொண்ட கூலியைக் கொடுத்துவிட்டார் தோட்ட உரிமையாளர் ...அதுவும் சரிதான்.இன்று இதை மேற்கோள்காட்டி யாரேனும் நடைமுறைப்படுத்த இயலுமா? இதற்கும் தங்களின் பதில்'சரி' எனில் 'பாரபட்சம்' எனும் வார்த்தைக்குப் பொருள் என்னவென்று கூற இயலுமா தங்களால்? அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விஷயங்களை ஏன்,எதற்கு என்று கேட்க முடிவதில்லை; கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை.அதற்காக அவையெல்லாம் சரி என்று ஒத்துக்கொள்ள முடியுமா தந்தையே? ஒரு பாமரனாக்க் கேட்கிறேன்..தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்...நன்றி...

    ReplyDelete