Thursday, July 10, 2014

தூபம் போல் என் மன்றாட்டு

திபா 137ம், திபா 139ம் அர்த்தம் நிறைந்த பாடல்கள். அவைகளைப் பற்றி நாம் கடந்த ஆண்டே எழுதியாயிற்று. ஆகையால் திரும்பவும் அரைத்ததை அரைக்க வேண்டாம்.

திபா 140 முதல் திபா 150 வரை உள்ள பாடல்கள் புகழ்ச்சிப் பாடல்கள்.
ஆண்டவரின் பேரன்பையும், அவரின் மீட்புச் செயலையும் நினைத்துப் பாடப்பட்ட பாடல்கள்.

இந்த 150 திருப்பாடல்கள் வழியாக நீங்களும் என்னோடு உடன் வந்தீர்கள்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.

இன்றோடு திருப்பாடல்களை நாம் நிறைவு செய்வோம்.

இன்று என் தந்தை விண்ணில் பிறந்த 7ஆம் ஆண்டு விழா.

அவருக்காக, அவரோடு இறைவேண்டல் செய்து இன்றைய திருப்பாடலை நிறைவு செய்கிறேன்.

உங்களுக்காகவும், உங்களோடும் செபிக்கிறேன். நீங்களும் எனக்காக செபியுங்கள்.

'தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக!
மாலைப் பலிபோல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக!'
(திபா 141:2)

'அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லேலூயா!' (150:6)

1 comment:

  1. இந்த 150 திருப்பாடல்கள் வழியாக எங்களையும் ஓரளவு இறைவனின் சந்நிதானத்திற்கு அழைத்துச்சென்ற தங்களுக்கு எத்துணை 'நன்றி' சொன்னாலும் தகும்.தங்கள் அன்புத்தந்தை விண்ணிலிருந்து 'தன் நேசகுமாரனைப்' பார்த்துப் பெருமிதம் அடைவார்.எங்களது வாழ்த்தும் செபங்களும் என்றென்றும் தங்களுக்காகத் தொடரும்.இறைவன் தங்களை ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete