Wednesday, July 2, 2014

உம் வாக்கே விளக்கு!

"என் காலடிக்கே உம் வாக்கே விளக்கு. என் பாதைக்கு ஒளியும் அதுவே."

விவிலியத்திலேயே அதிகமான வசனங்களைக் கொண்ட அதிகாரம் திருப்பாடல் 119. மொத்தம் 176 வசனங்கள். இந்த அதிகாரம் முழுவதும் ஆண்டவரின் திருச்சட்டத்தை மையமாக வைத்து அமைந்திருக்கிறது.

ஆண்டவரின் திருச்சட்டத்தை அறிந்திருத்தலும், அதன்படி வாழ்தலும், அதை அல்லும் பகலும் தியானித்தலும் ஒவ்வொரு இஸ்ரயேலரின் கடமையாக இருந்தது.

ஆண்டவரின் வாக்கு அனைத்துமே சட்டம்தான்.

ஆண்டவரின் வாக்கு இன்றும் நம் உள்ளத்தில் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

அதுவே நம் வாழ்வுக்கு விளக்கானால் நாமும் நிறைவு பெறுவோம்.

அதற்குத் தேவையானதெல்லாம் உறுதியான உள்ளமே!

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வைகறைப்பொழுது தொடங்கி சாமவேளை வரைக்கும் இறைவனின் நியமங்களையும் கட்டளைகளையும் கடைபிடிப்போரை அவரது வாக்குறுதிக்கேற்ப காத்துக்கொள்வாரெனில் நாம் அதில் தாமதம் காட்ட வேண்டும்?இந்த 119ம் திருப்பாடலின் விட என்னைக் கவர்ந்தது தங்களின் சித்திரம்.ஒவ்வொரு நாளுமே தாங்கள் தேர்ந்தெடுத்துப்போடும் சித்தரங்களைப் பார்த்துக் புருவங்களை உயர்த்தும் நான் இன்று உறைந்து போனேன்.அதெப்படி காலும் கையும் ஒரே சம் தளத்தில்??இருவருக்குச் சொந்தமாக இருக்கலாம்.இருப்பினும்...!!??வியப்பலிருந்து மீளவில்லை.பாராட்டுக்கள்...

      Delete