இன்றுடன் ஜெர்மனியில் கால்பதித்து 11 நாட்கள் நகர்ந்துவிட்டன!
காலண்டர் - கடிகாரம் - பரபரப்பு - ஜெர்மனி!
இவர் இத்தனை மணிக்கு இங்குதான் இருப்பார்!
அல்லது
இவர் இத்தனை மணிக்க இங்கு தான் இருக்க வேண்டும்!
7:25, 7:30, 7:45, 8:00 என பேருந்துகளின் நேரத்தைப் பார்த்துப் பழகிய எனக்கு
7:21, 7:23, 7:46, 8:01 என பேருந்துகளின் நேரம் பார்க்க வித்தியாசமாக இருந்தது. அவ்வளவு நுணுக்கமாக பேருந்துகளும் நேரத்தைக் கடைப்பிடிக்கின்றன.
எங்க ஊர்ல ஏழரைக்கு வர்ற பஸ்சைப் பிடிக்க ஏழே காலுக்கே நிறுத்தத்திற்குச் சென்றுவிட வேண்டும். சில நேரங்களில் ஏழு இருபதுக்கு வரும். சில நேரங்களில் ஏழு நாற்பதுக்கு வரும்.
'நேரம் என்பது வாழ்க்கை!' என்பதுதான் ஜெர்மனி தரும் பாடம். இந்தக் கால ஓட்டத்தில் என் பஸ்ஸின் ஓரத்திலேயே சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்த ஒரு நங்கை தான் நடீன். சொந்த ஊர் வியன்னா (ஆஸ்திரியா! - ஆஸ்திரேலியா அல்ல!). அதிக ஆண்டுகள் இருந்தது சுவீடன் நாட்டில். அம்மா மட்டும் தான். ஐயோ பாவம் என்று சொல்லாதீர்கள்! அம்மா திருமணம் செய்து கொள்ளவில்லை. பின் எப்படி நடீன்? இதெல்லாம் இங்கே சாதரணமப்பா!
எப்படியும் ஒரு மாதத்தில் ஜெர்மன் நங்கை ஒருத்தியைத் தோழியாக்குவேன் என்று எனக்கு நானே விட்ட சவாலில் மூன்றாம் நாளே ஜெயித்தேன்.
நான் படிக்கும் மொழிப்பள்ளியின் பக்கத்து அறை மாணவி. நீங்க இந்தியாவா! இதுதான் அவளின் முதல் கேள்வி.
'ஓ...இந்தியா! ஐ நோ...என் கூட சில இண்டியன் ஸ்டூடன்ஸ் படிச்சாங்க. ஐ லைக் இண்டியன் கல்ச்சர். உங்க கல்ச்சர் ரொம்ப ரிச் கல்ச்சர்! என்றாள்.
'ஒரு சாதாரண ஃபிகர் கிடைக்கவே பல நாள் பல போரட்டம் நடத்த வேண்டிய இண்டியன் கல்ச்சரில் லைக் பண்ண என்ன இருக்கிறது!' என முழித்தேன் நான்.
'நீங்க உங்க குடும்பத்துக்கு ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுப்பீங்களாமே! அப்படியா?' ஆர்வத்துடன் கேட்டாள்.
'பிரதர் என்பதற்கு உங்கள் மொழியில் என்ன?' என்றாள்.
'சகோதரன்' என்றேன். என் வாய் சும்மாயிருக்குமா? எங்கள் தமிழ்மொழியில் மூத்த சகோதரன் என்பதற்கும், இளைய சகோதரன் என்பதற்கும் வேறு வார்த்தைகள் இருக்கின்றன என்றேன்.
'அண்ணன்' என்றால் மூத்தவன். 'தம்பி' என்றால் இளையவன்.
அன்று பற்றிக்கொண்டாள் இந்த அண்ணனை.
வெளிநாட்டுத் தங்கை உறவு நன்றாகத்தான் இருக்கிறது.
வகுப்பு 8 மணிக்கு என்றாலும் பங்ச்சுவலாக 7:45க்கெல்லாம் சென்று விடுகிறேன். ஒவ்வொரு பாடவேளையிலும் ஜெர்மன். ஒவ்வொரு பாட இடைவேளையிலும் தமிழ் என்று விடாமல் கற்கின்றாள் என் தங்கை.
அவளிடம் பிடித்த விஷயங்கள் மூன்று:
1. பிடிக்கும் என்றால் பிடிக்கும் என்பாள். பிடிக்காது என்றால் பிடிக்காது என்பாள். இது எல்லா ஜெர்மானியருக்கும் பொருந்தும். 'பிடிக்காது' என்று சொன்னால் அடுத்தவர் மனம் கஷ்டப்படும் என்றெல்லாம் சென்டிமெண்ட் கிடையாது. பிடிக்கும் என்பதை பிடிக்கும் எனவும், பிடிக்காது என்பதை பிடிக்காது எனவும் சொல்லக் கற்றுக்கொண்டேன் இவள் வழியாக.
2. நிமிடம் ஒன்றையும் வீணாக்க மாட்டாள். பிற்பகல் 1 மணி வரை வகுப்பு என்று வைத்து, ஆசிரியர் 12:45க்கு பாடத்தை நிறுத்தினாலும் 12:59 வரை படித்து விட்டுத்தான் வெளியே வருவாள். எப்படியும் பஸ் 1:05க்குத் தான் வரும். முன்னாலேயே போய் என்ன செய்வது? என்பாள். ஒவ்வொரு பொழுதையும் நாம் செய்வதை திருந்தச் செய்ய வேண்டும் என்பது இவளின் சித்தாந்தம். ஒவ்வொரு பொழுதையும் திரும்பச் செய்ய வேண்டும் என்பது என் சித்தாந்தம். நான் சீக்கிரம் மாறிவிடுவேன்.
3. சுறுசுறுப்பு. வெயில் அடிக்கும் அனைத்து நாட்களிலும் சைக்கிளில் வருவாள் தங்கை. இவள் சைக்கிள் ஓட்டும் ஸ்டைலே தனி. முழங்காலுக்கு ஸ்கர்ட். முழுநீள பனியன். வலது கையின் தோளுக்கு அருகில் சிறிய ஸ்டிராப்பில் தொங்கும் ஐஃபோன். அதிலிருந்து அவள் காதோடு இணைந்திருக்கும் இயர்ஃபோன். ஐஃபோனில்; பாட்டும் கேட்பாள். எத்தனை கிமீ சைக்கிள் ஓட்டினோம். எவ்வளவு கலோரி குறைந்தது. உடலின் பிரசர் எவ்வளவு - இவைகளையும் கணக்கிட்டுக் கொள்வாள். தோளில் தொங்கும் பிங் கலர் 'ஈஸ்ட்பேக்' பேக், கலைந்தும் கலையாத, கறுப்பா, பிரவுனா என்று சொல்ல முடியாத கேசமாக வந்து நுழைவாள். சைக்கிள் பங்சர், கல் தடுக்கியது என்ற என் சின்ன வயசு பொய்யெல்லாம் அவளிடம் இல்லை.
என் அன்பிற்குரிய வெளிநாட்டு தங்கச்சிக்கு! வணக்கம்! நன்றி!

No comments:
Post a Comment