Saturday, July 5, 2014

கண்ணீரோடு விதை விதைப்பவர்கள்...

திபா 126 எழுதப்பட்டதன் பின்புலமாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுவர்:

அ. கிமு 700ஆம் ஆண்டு சென்னாகரிப் என்ற அசீரிய மன்னன் இஸ்ரயேல் மேல் படையெடுத்து வந்து அவர்களை அடிமைகளாகத் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றான். அந்த அடிமை நிலையிலிருந்து திரும்பிய இஸ்ரயேல் மக்கள் பாடிய பாடல் இது.

ஆ. கிமு 587ஆம் ஆண்டு பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் படையெடுத்து யூதா நாட்டு மக்களை நாடு கடத்தி, அவர்கள் சைரஸ் அரசன் வந்த பின் தங்கள் தாய்நாடு திரும்பிய போது பாடிய பாடல் என்பர் சிலர்.

இந்தப் பாடல் சொல்வது மூன்று:

அ. நம் வாழ்வின் வரும் அடிமை நிலையும், இருளும் நாம் கனவு காண்பது போல விரைவில் மாறி விடும். இரவில் நாம் கண்ட கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அது விடிந்தவுடன் நம் நினைவைவிட்டு மறைந்து விடுகிறது. அவ்வளவு வேகமாக நம் அடிமை நிலையையும், தாழ்நிலையையும் மாற்றக் கூடியவர் இறைவன்.

ஆ. ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார் என மற்றவர்கள் பேசிக்கொள்வார்கள். மற்றவர்களின் பார்வையில் இறைவன் நம்மை உயர்த்துகின்றார்.

இ. கண்ணீர் பெருமகிழ்ச்சியாக மாறும். நம் படிப்பிலும், வேலையிலும், உறவு நிலைகளிலும் அன்றாடம் நாம் கண்ணீர் வடிப்பது போலத் தெரிந்தாலும், அவற்றின் கனிகளை நாம் அறுக்கும் போது நாம் சிந்திய கண்ணீரும், வியர்வையும் காய்ந்து விடுகிறது. மகிழ்ச்சியால் நாம் நிறைந்து விடுகிறோம்.


1 comment:

  1. நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் துன்பமேகங்கள் சூழும்போது நாம் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் சொல்லக்கூடிய ஆறுதலான வசனம் "கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்" என்பது. எல்லாமே இயற்கையின் சுழற்சிக்குட்பட்டு மாறிவரும் இவ்வுலகில் 'மாறாதவர்', 'நிரந்தரமானவர்', நம் 'இறைவன்' மட்டுமே என்று நமக்கு உணர்த்தும் வரிகள்.யார் கைவிடினும் நம்மை அணைத்துக்கொள்ள 'ஒருவர்' உள்ளார் என்பது களிப்பூட்டும் விஷயம்தானே!

    ReplyDelete