Wednesday, September 23, 2015

எதற்காக கோவில் கட்ட வேண்டும்?

நாளைய முதல் வாசகத்தில் (ஆகாய் 1:1-8) நாம் காணும் ஆகாய் இறைவாக்கினர் எருசலேம்வாழ் மக்களிடம் ஆண்டவரின் ஆலயத்தை மீண்டும் கட்ட அழைப்பு விடுக்கின்றார். அவர் விடுக்கும் அழைப்பு ஆச்சர்யமாக இருக்கிறது.

எதற்காக கோவில் கட்ட வேண்டும்?

இரண்டு காரணங்கள்:

1. நீங்கள் மாட மாளிகையில் வசித்துக்கொண்டிருக்க, உங்கள் கடவுள் பாழடைந்த இடத்தில் வசிக்கலாமா?

2. ஆண்டவரின் அருள் இல்லாவிட்டால், 'நீங்கள் விதைப்பது மிகுதி. அறுப்பது குறைவு. நீங்கள் உண்பீர்கள். ஆனால் வயிறு நிரம்பாது. குடிப்பீர்கள். ஆனால் தாகம் அடங்காது. ஆடை அணிவீர்கள். ஆனால் குளிர் நீங்காது. கூலியை வாங்கி பையில் போட்டாலும், அது ஓட்டை வழியாக நழுவி ஓடிவிடும்!'

இரண்டாவது உருவகம் ஆண்டவரின் பிரசன்னம் எந்த அளவிற்கு தேவை என்பதை உணர்த்துகிறது.

இரண்டாம் ஏற்பாட்டு புரிதலின்படி ஒவ்வொரு மனிதரும் ஆலயம். ஆக, ஒவ்வொரு மனிதரும் நிறைவைக் கண்டால்தான் நமக்கு வாழ்வில் நிறைவு கிடைக்கும்.

இல்லையா?

2 comments:

  1. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒரு பதிவு. என்னதான் நாம் மனத்தளவில் இறைவனைப் பூஜித்தாலும் நம்அன்றாடத்தேவைகளையும்,கவலைகளையும் மறந்து இறைவனை வழிபட ஒரு ஆலயத்தை நோக்கியே செல்கிறோம். அந்த ஆலயம் எப்ப்டிப்பட்டதொன்றாக இருக்க வேண்டும்? ஆண்டவனுக்குப் போக மிச்சமே நமக்கு எனும் மனமிருக்குமெனில் " நாம் விதைப்பதற்கும் மேலாக அறுவடை செய்யவும்,வயிறு நிரம்புமளவுக்கு உண்ணவும், தாகம் தணியும் அளவுக்குக் குடிக்கவும், குளிர் நீங்குமளவுக்கு ஆடை அணியவும்,சட்டைப்பை நிரம்பி வழியும் அளவுக்குக் கூலி பெறவும் ஆண்டவனின் அருள் நமக்கு வழிசெய்யும்.நாம் ஒவ்வொருவருமே பரிசுத்த ஆவி உறையும் ஆலயம் என்பது உண்மையானால் இந்தப்புற ஆலயம் நிறைவு பெறும்போது மட்டுமே நமக்கு வாழ்வில் நிறைவு கிடைக்கும்.நிறைவு பெறும் வழியை சொல்லித் தந்த தந்தைக்கு என் மன நிறைவுடன் கூடிய வாழ்த்துக்களும்,பாராட்டும்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.தாங்களின் "எதற்காக கோவில் கட்ட வேண்டும்"? என்ற அழகான பதிவிற்கு நன்றி.ஒவ்வொரு மனிதரும் ஆலயம். ஆக, ஒவ்வொரு மனிதரும் நிறைவைக் கண்டால்தான் நமக்கு வாழ்வில் நிறைவு கிடைக்கும் இந்த அருமையான வரிகளுக்கும்,சிந்திக்க வைத்த உங்கள் பதிவிற்கும் நன்றி.கடவுளின் வார்த்தைகளை படித்து பார்த்தோம் என்றால் நிறைய நேரம் நிறைவையும், நிறை வாழ்வை பற்றியும் அதிகமாக கூறப்பட்டிருக்கும்.நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஆலயமாக விளங்குவதும் ,வாழ்வதும் நம் கையில் தான் உள்ளது. முதலில் நம்மில் நிறைவை காண்போம் பிறரும் நிறைவுள்ளவர்கள் தான் என்பதை உணர்வோம்.இவைகளை கண்டாலே நாம் அனைவரும் இறைவன் வாழும் ஆலயமே!தந்தையே உங்களின் அற்புதமான பதிவிற்கு எனது பாராட்டுகள்!.....
    மன்றாடுவோம்: நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். நான் உம்மை அற்புதங்களும், அருளடையாளங்களுக்காக மட்டும் தேடாமல், உமது சீடனாக வாழவும், உம் அருள்மொழிகளைப் பின்பற்றி நடக்கவும் விரும்பி உம்மைத் தேடுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

    ReplyDelete