Thursday, September 3, 2015

ஆயினும் உமது சொற்படியே

'ஆயினும் உமது சொற்படியே' என்று சொன்ன சீமோன் பேதுருக்கு இறைவனையும் தெரியும். இறைவார்த்தையையும் தெரியும். தொடக்கத்தில் கடவுள் உலகைப் படைத்தபோது, வார்த்தைகளைக் கொண்டே அவற்றைப் படைக்கின்றார். 'ஒளி உண்டாகட்டும்!' என்கிறார். 'ஒளி உண்டாகிறது!' ஆக, கடவுள் சொல்லும் ஒரு வார்த்தை அப்படியே அதன் சுடுபொருளாக உருவாகிறது.

'மீன்!' என்று இயேசு சொன்னால் 'மீன்' கிடைக்கும்.

இதுதான் பேதுருவின் நம்பிக்கை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக்கா 5:1-11)

'விடிய விடிய காத்திருந்தும் ஒன்னும் கிடைக்கலயே ப்ரதர்!' என்று சொல்லும் பேதுருவின் மனதில் ஒரு சின்ன தயக்கம்: 'தண்ணீரின் ஓட்டம் இந்த தச்சனுக்கு எப்படித் தெரியும்?'

இருந்தாலும் ஆழத்திற்குச் செல்கின்றார்.

மிகுதியான மீன்பாடு கிடைக்கிறது.

நம் வார்த்தைகளும் தாங்கள் சுட்டிக்காட்டுவதை அப்படியே விளைவாக ஏற்படுத்தினால் எத்துணை நலம்!


3 comments:

  1. சில சமயங்களில் ஓரிரு பக்கங்கள் சொல்வதைக்கூட ஒரே வார்த்தை நமக்குப் புரிய வைக்கிறது.அதுதான் ஒவ்வொன்றுமே 'சுடுபொருளாக' மாறும் கடவுளின் வார்த்தை.இரவெல்லாம் வலைவிரித்தும் கிடைக்காத மீன் 'இவர் சொல்லும் வார்த்தையால் கிடைத்துவிடுமா என்ன' என்ற ஐயப்பாடு தலைதூக்கினும், 'தண்ணீரின் ஓட்டம் இந்தத் தச்சனுக்கு எங்கே தெரியும்?' என்ற கேள்வி எழுந்தாலும் பேதுரு மரியாளின் வழியில் 'ஆயினும் உம் சொற்படியே' என்று வலையை விரிக்கிறார்.நம்மையும் கூட வாழ்வின் எதார்த்தங்கள் அச்சுறுத்தும் வேளையில் அவரின் வார்த்தைகள் வழி காட்டட்டும்.நமது வார்த்தைகளுமே வார்த்தைகளாக நின்றுவிடாமல் அவற்றிற்கு 'செயல் வடிவம் கொடுத்தால் எத்துணை நலம்' எனும் தந்தையின் வார்த்தைகளுக்கு இன்று வலு சேர்க்க முயற்சிப்போம்.நல்லதொரு பதிவு...தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும் . தந்தையே "ஆயினும் உமது சொற்படியே" தலைப்பே மிக அருமையாக இருக்கிறது .இதற்கு மேல் நாம் கடவுள் வார்த்தையை நம்புவதை தவிர வேற வழியில்லை.ஏனென்றால் பேதுருவின் நம்பிக்கை இன்று நம் கவனத்தைக் கவருகின்றது. இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்று சொல்லி வலைகளை வீசுகிறார். எண்ணிலடங்கா மீன்களை பிடிக்கின்றார். அவரது நம்பிக்கையும், அதன் செயல் வடிவமும் இன்று நம் வாழ்வைத் தூண்டட்டும்.நமது வாழ்விலும் சில வேளைகளில் பேதுருவைப் போலவே நாமும் சோர்வடைந்திருக்கலாம். எவ்வளவோ பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்னும் பேதுருவின் அனுபவம் நமக்கும் கிடைத்திருக்கலாம். இன்றும் அத்தகைய நிலை நம்மில் இருக்கலாம். நமக்குத் தேவை பேதுருவின் இறைநம்பிக்கையும், தொடர் செயல்பாடும். அவரைப் போலவே நாமும் இயேசுவின் சொற்படியே செய்வோம். இறைவனின் இரக்கத்தில்; நம்பிக்கை கொள்வோம். பேதுருவின் நம்பிக்கை அவரைத் தொடர் செயல்பாட்டுக்கு இட்டுச்சென்றது. வலையை மீண்டும் கடலுக்குள் போட்டார் அவர். நாமும் அவ்வாறே சோர்ந்துவிடாமல், பேதுருவைப் போல மீண்டும் நம் பணிகளில் ஈடுபடுவோம். இறைவன் பெருந்திரளான ஆசிர்வாதங்களை நம்மீது பொழிவார்.
    ”விழுவது தவறல்ல, விழுந்து எழாமல் இருப்பதுதான் தவறு” என்று பொதுவாக சொல்வார்கள். அதுபோல, தோற்பது தவறல்ல, தோற்றாலும் மீண்டும் முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு. இன்றைய நற்செய்தியில் பலமுறை வலைகளைப் போட்டும், மீன் ஒன்றும் கிடைக்காமல், இனிமேல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனது வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த, பேதுரு, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் முயற்சி செய்கிறார்.நாட்டில் நடக்கும் அறிவியல் அதிசயங்கள், அறிவுக்கு அப்பார்ப்பட்ட நிகழ்வுகள் இவற்றைப் பாரக்கும்போதெல்லாம் யாக்கோபு, யோவான் போல திகைப்படைகிறோம், பேதுரு போல கடவுளின் காலில் விழுந்து "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கிறோம். அந்த அளவுக்கு திகைப்பும் அச்சமும் அடைகிறோம்.ஆக ஏசு தந்தை தனது பதிவில் கூறியுள்ளவாறு இறை வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்து பேதுருவை போன்று திருச்சபையின் திறவுகோலை பெற நமது வலைகளை நம்பிக்கையோடு அகல விரிப்போம் .தந்தைக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ஜெபங்களும்!!

    ReplyDelete