Sunday, June 30, 2013

வாட் இஸ் தட்?

நான் அடிக்கடி ரசித்துப் பார்க்கும் ஒரு குறும்படம் 'வாட் இஸ் தட்?' கான்ஸ்டான்டின் பிளாவியுஸ் இயக்கி 2007ஆம் ஆண்டு வெளியான கிரேக்க மொழித்திரைப்படம் இது. வெறும் 5:30 மணித்துளிகள் ஓடக்கூடிய இக்குறும்படத்தின் நடிகர்கள் மூன்றே பேர்தான். ஒரு வயதான தந்தை. அவரது இளவயது மகன். பறந்து திரியும் ஒரு சிட்டுக்குருவி.

தந்தையும் மகனும் தங்கள் வீட்டையொட்டியிருக்கின்ற தோட்டத்திலுள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கின்றனர். தந்தை அமைதியாக அமர்ந்திருக்கின்றார். மகன் அமைதியாக நியூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறான்.

இவர்களின் அமைதியைக் குலைப்பதற்காக(!) பறந்து வருகிறது ஒரு சிட்டுக்குருவி.

தந்தை மகனைப் பார்த்துக் கேட்கின்றார்: 'வாட் இஸ் தட்?' (அது என்ன?) மகனும் நியூஸ்பேப்பரை விலக்கிப் பார்த்துவிட்டு 'சிட்டுக்குருவி' என்கிறான். தந்தையும் அதை மௌனமாக ஆமோதிக்கின்றார்.

ஐந்து செகண்டுகள் கழித்து மறுபடியும், 'அது என்ன?' எனக் கேட்கின்றார். 'நான்தான் சொன்னேன்ல அப்பா! அது ஒரு சிட்டுக்குருவி!,' தான் தொந்தரவு செய்யப்பட்ட எரிச்சலில் விடைதருகின்றான் மகன்.

அங்குமிங்கும் பறக்கும் சிட்டுக்குருவி சற்றுத் தள்ளிச் சென்று அமர்கிறது. அதை உற்றுப்பார்க்கின்ற தந்தை மறுபடியும் தன் மகனிடம், 'அது என்ன?' எனக் கேட்கின்றார். 'எத்தனை தடவை சொல்வது...சிட்டுக்குருவி...பாருங்க சிட்டுக்குருவி...சி...ட்...டு...க்...கு...ரு...வி...' என்கிறான் கோபமாக.

'அது என்ன?' மீண்டும் கேட்கின்றார் தந்தை. மகன் கோபத்தில் வெடிக்கிறான்: 'எத்தனை தடவை சொல்றது ... அது ஒரு சிட்டுக்குருவி ... ஏன் இப்படிப் பண்றீங்க?!'

தந்தை பெஞ்சிலிருந்து எழுகின்றார். 'எங்கே போறீங்க?' கேட்கின்றான் மகன். மௌனமாகத் தன் வீட்டிற்குள் செல்கின்ற தந்தை ஒரு பழைய டைரியுடன் வெளியே வந்து மீண்டும் பெஞ்சில் அமர்கின்றார்.

டைரியின் ஒரு பக்கத்தை மகனிடம் நீட்டி, 'படி, சத்தமாகப் படி!' என்கிறார்.

மகன் டைரியின் பக்கத்தைச் சத்தமாக வாசிக்கின்றான்: 'இன்று நானும் மூன்று வயது நிரம்பிய என் மகனும் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தோம். அப்போது எங்களுக்கு முன்னே ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது. 'அது என்ன?' என்று மகன் 21 முறை என்னிடம் கேட்டான். நானும் 21 முறையும் 'அது ஒரு சிட்டுக்குருவி' எனப் பதில் சொன்னேன். ஒவ்வொரு முறை அவன் அதே கேள்வியைக் கேட்டபோதும் அவனை மீண்டும் மீண்டும் கட்டித் தழுவிக்கொண்டேன் - எரிச்சல்படாமல் அவனது குழந்தையுள்ளத்தை எண்ணி அவனை அன்போடு தழுவிக்கொண்டேன்.'

மௌனம்.

டைரியை மூடிவிட்டு மகன் தன் தந்தையை அணைத்து முத்தமிடுகிறான்.

'வாட் இஸ் தட்?' என்ற கேள்வியோடு முடிகிறது குறும்படம்.

இந்தக் குறும்படம் பல கேள்விகளை என்னுள் எழுப்புகின்றது:

1) 'அது என்ன?' எனும் கேள்வி. குழந்தைப்பருவத்தில் நாம் நம் பெற்றோரிடம் கேட்ட முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். 'அது என்ன?' 'அவர் யார்?' என நாம் உலகத்தையும், உறவுகளையும் அறியத்தொடங்கினோம். சின்னக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது இன்னும் நடக்கும்: 'அது என்ன?' 'இது என்ன?' 'ஏன் செடி பச்சையா இருக்கு?' 'ஏன் நாய் நடக்குது?' 'ஏன் கோவிலுக்குப் போகணும்?' என அவர்கள் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். வயது ஆக ஆக நாம் கேள்வி கேட்பதை குறைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நிறுத்தியும் விடுகிறோம். மைக்கேல் ஸ்டீவன்ஸ் என்ற அமெரிக்கக் கல்வியியல் ஆராய்ச்சியாளர் கேள்விகள் மூலமே நாம் குழந்தைகளுக்கு அறிவைப்புகட்ட முடியும் என்றும் நாம் கேட்கும் கேள்விகளே நம்மை புதிய கண்டுபிடிப்புக்களுக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறுகின்றார். அவர் கேட்கும் 13 கேள்விகளை நான் இங்கே தருகிறேன். நீங்கள் பதில் கண்டுபிடியுங்கள்.

1. நாம் பார்க்கும் வீடியோவின் எடை என்ன?
2. நாம் முகம் பார்க்கும் கண்ணாடியின் நிறம் என்ன?
3. ஐந்து செகண்ட் ரூல் உண்மையா?
4. எல்லாரும் ஒரே நேரத்தில் குதித்தால் என்ன ஆகும்?
5. நாம் ஏன் ஆடை அணிகிறோம்?
6. இசை என்றாவது முடிந்து போகுமா?
7. இப்பூமியில் மிக ஆபத்தான இடம் எது?
8. உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதா?
9. உலகில் மொத்தம் எவ்வளவு பணம் இருக்கும்?
10. நான் சொல்லும் சிகப்பும் நீ சொல்லும் சிகப்பும் ஒன்றா?
11. கோழி ஏன் ரோட்டைக் கடந்தது?
12. நமக்கு ஏன் இரண்டு மூக்குத் துவாரங்கள் உள்ளன?
13. ஏன் பொருட்களும் மனிதர்களும் அழகாக இருக்கின்றன?

நாம் இன்று கேள்வி கேட்பதில்லை. 'பதில் எனக்குத் தெரியும்' என நினைத்துக்கொள்கிறோம். அல்லது 'பதில் தெரிந்து என்ன?' என கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றோம். இது நம் அறிவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நம் உறவுகளில் மனிதர்களை புரிந்து கொள்ள மறுப்பதாகவும், தவறாகப் புரிந்து கொள்வதாகவும் மாறிவிடுகின்றது.

2) எரிச்சல். கோபத்தின் குழந்தை எரிச்சல். ஆனால் கோபத்தைவிட அதிக எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது இது. இது ஒரு எதிர்மறை உணர்வு என்பதைவிட மனம் தானாக உருவாக்கிக் கொள்ளும் 'டிஃபன்ஸ் மெக்கானிஸம்' என இதைச் சொல்லலாம். செல்ஃபோன் பேசும் போது, வேலை செய்யும் போது, வாக்கிங் செல்லும் போது, ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது என எப்போது வேண்டுமானாலும் எரிச்சல் வரலாம். நம் நண்பர், உறவினர், நாம் வளர்க்கும் செல்லப்பிராணி, டிராஃபிக் போலீஸ், வாட்ச்மேன், கிளைமேட் என யார்மேலும் எரிச்சல் வரலாம். எரிச்சல் ஒரு எமோஷனல் திரை. அடுத்தவர் சொல்ல வருவதை நாம் கேட்க முடியாமல் இது தடுத்து விடுகிறது. மனம் உடனே மௌனமாக அவரைப் பற்றிய ஒரு (தவறான) தீர்ப்பை எழுதிமுடித்துவிடுகின்றது.

3) 'நமக்கொரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாயம்.' 'நாம் பேசும்போது அனைவரும் கேட்க வேண்டும்', என நினைக்கிற நாம் 'அடுத்தவர்கள் பேசும்போதும் நாம் கேட்க வேண்டும்' என்று பல நேரங்களில் நினைப்பதில்லை. பேசுபவருக்கும், கேட்பவருக்கும் இடையில் உரையாடல் இரண்டு திசைகளில் இருக்கும்போதுதான் அது அன்பின் உரையாடலாக மாறுகின்றது. அப்படியில்லையென்றால் அது வெறும் கிளாஸ்ரூம் லெக்சர் போலவோ, எப்.எம். ப்ரோகிராம் போலவோ மாறிவிடும். 'மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்வதில்லை' என்று புலம்புவதிற்குப் பதில் நாம் மற்றவர்களைப் புரிந்துகொள்கிறோமா எனக் கேட்கலாமே?

இன்று யாராவது நம்மைப் பார்த்து 'வாட் இஸ் தட்?' எனக் கேட்டால்...


['வாட் இஸ் தட்?' குறும்படத்தைப் பார்க்க: What is That? ... மைக்கேல் ஸ்டீவன்ஸின் '13 கேள்விகள்' காணொளியைப் பார்க்க: 13 Questions]


Saturday, June 29, 2013

கழுகின் இளமையென


சிட்டுக்குருவியைப் போன்ற சின்னப் பறவையினத்தைப் பற்றிப் பேசுகின்ற பைபிள் பறவையினத்தின் அரசனாம் கழுகைப் பற்றியும் பேசுகின்றது (மொத்தம் 7 இடங்கள்: திபா 103:5, எசா 40:31, நீமொ 23:5, இச 32:11-12, லேவி 11:13, எபி 1:1-14, திவெ 3:1-3).

இந்த 7 இடங்களில் 3 வாக்கியங்கள் கழுகின் குணம் பற்றிப் பேசுகின்றன. அந்தக் கழுகின் குணங்களை மட்டும் இன்று நாம் சிந்திக்கலாம்:

'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.' (எசா 40:31)

'அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார். உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்' (திபா 103:5)

'கழுகு தன் கூட்டின்மேல் அசைந்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல், ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்.' (இச 32:11-12)

கழுகு பற்றி இணையத்தில் நான் வாசித்த மூன்று குட்டிக்கதைகள் இவை:

1. கழுகும் புயலும்

புயல் வருகின்ற நேரமும் இடமும் கழுகிற்குத் தெரியுமாம். புயல் வருகின்ற சில நாட்களுக்கு முன்னேயே கழுகு உயரமான இடத்திற்குச் சென்றுவிடும். புயல் புறப்படும்போது அதன் காற்று தன்னை உயர்த்திச் செல்லுமாறு தன் இறக்கைகளை விரித்துக் காத்திருக்கும். புயல் தன்னை அடித்துச்செல்லும்போது அதன் வேகத்தைப் பயன்படுத்தி அக்காற்றைவிட உயரமாகப் பறந்து விடும். புயல் கீழே, கழுகு மேலே என்று வேகமாகப் பறந்து செல்லும். கழுகு புயலைப் பற்றி பயப்படுவதில்லை. புயலின் அபாயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னைக் காத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தன்னால் இன்னும் உயரமாகச் செல்லமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றது.

வாழ்க்கையில் நமக்குத் துன்பங்கள் வரவே கூடாது என நினைக்கிறோம். அதற்காக 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில் பல துன்பங்கள் பட்டு 'வந்துவிடும்' எனக் கற்பனை செய்யும் துன்பங்களை விட அதிகமாகவே துன்பப்படுகிறோம். அப்படியே ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதிலிருந்து எப்படித் தப்பி ஓடுவது என்பதில் நேரத்தைச் செலவிடுகிறோம். மாறாக வருகின்ற துன்பத்தைப் பயன்படுத்தி அதன் வழியாக இன்னும் அதிக உயரத்திற்குப் பறந்து செல்வது கழுகு நமக்குச் சொல்லும் பாடம்.

இதற்கு நமக்குத் தேவையானது நம்பிக்கை – நம் மேலும். கடவுள் மேலும். பறவைகள் கிளைகளில் அமர்ந்திருப்பது அந்தக் கிளைகள் வலிமையானவை என்ற நம்பிக்கையில் அல்ல, மாறாக, தங்கள் இறக்கைகள் வலிமையானவை என்ற நம்பிக்கையில்தாம். 'இவ்வளவு நாட்கள் காத்து வந்த இறைவன் இனியா கைவிடுவார்?' என்று நடந்த நிகழ்வுகள் நமக்கு இறைவன்மேல் நம்பிக்கை தந்தால் நடக்கவிருக்கின்ற எந்த நிகழ்வுகளையும் நாம் எளிதாக எதிர்கொள்ளலாம்.

'ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்'.

2. கழுகின் மறுபிறப்பு
தன் இனத்திலேயே அதிக வாழ்நாளைக் கொண்டது கழுகு. இதன் ஆயுட்காலம் ஏறக்குறைய 70 ஆண்டுகள். அந்த வயதை எட்ட அதன் 40 வயதில் அது ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டும். அதன் 40வது வயதில் அதன் நீளமான அலகு இரையைப் பிடிப்பதற்கும் உண்பதற்கும் பயனற்றதாகி விடும். அதன் அலகு வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து பறப்பதற்கு கனமாக மாறிவிடும். அந்த நேரத்தில்தான் கழுகின் முன் இரண்டு வாய்ப்புகள்: ஒன்று, இறந்து விடுவது. அல்லது மாற்றம் என்னும் வலிமிக்க நிகழ்விற்குத் தன்னையே உட்படுத்துவது. இந்த மாற்றம் நிகழ ஏறக்குறைய 150 நாட்கள் ஆகும். இந்த மாற்றத்தை அடைய வேண்டுமானால் உயர்ந்ததொரு மலைக்குப் பறந்து செல்ல வேண்டும். தன் கூட்டில் குடியிருக்கும் கழுகு அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அந்த அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்தபின் அதைக் கொண்ட தன் உடலில் இருக்கும் அனைத்து இறகுகளையும் தானே பிய்த்தெடுக்கும். 5 மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் எல்லாம் முளைக்க மீண்டும் தன் வழி செல்லும். இந்த மறுபிறப்பு அதை இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக்கும்.

கழுகின் மறுபிறப்பு நமக்கு வைக்கும் சவால் மாற்றம். நம் பழைய காயங்கள், அனுபவங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் இவற்றை அனுதினம் சுமந்த ஒட்டகக் கூன்களாய் நிற்கும் நாமும் மாற்றம் என்னும் வலிமிக்க நிகழ்விற்கு உட்படுத்தவேண்டும். 'மாற்றத்திற்கு உட்படாத எந்த உயிரினமும் அழிந்துவிடும்' என்பது டார்வினின் உயிரியல் பரிணாமக் கோட்பாடு. இருப்பது போலவே இருப்பது அல்ல வாழ்க்கை. மாறாக அன்றாடம் 'இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம்' என்ற அடிப்படையில் நம்மையே மாற்றத்திற்கு உட்படுத்தும்போது நாம் மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும் இளமையோடு இருக்கலாம். இதையே ஸ்டீபன் கோவே என்ற நிர்வாகவியல் அறிஞர், 'ரம்பத்தைக் கூர்மையாக்குவது' என அழைக்கிறார். உடல், மன, ஆன்ம, சிந்தனை புதுப்பித்தலுக்கு நம்மையே உட்படுத்தும்போது நாம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த மனிதர்களாக மாற முடியும்.

'உன் இளமை கழுகின் இளமையெனப் பொலிவுறும்!'

3. கழுகும் கோழிக்குஞ்சும்
விவசாயி ஒருவர் தன் தோட்டத்தில் கிடைத்த கழுகு முட்டையை எடுத்து தன் வீட்டில் அடைகாக்கும் கோழியின் முட்டைகளோடு வைக்கின்றார். கோழிக்குஞ்சுகளோடு இணைந்து கழுகுக்குஞ்சும் பிறக்கிறது. கோழிகளோடு மேயும் கழுகுக்குஞ்சு கோழியின் உணவுப்பழக்கம், நடை, ஓட்டம் அனைத்தையும் கற்றுக்கொள்கிறது. வானில் ஒய்யாரமாய் வட்டமிடும் கழுகை ஏறிட்டுப் பார்க்கும் கழுகுக்குஞ்சு மற்ற கோழிக்குஞ்சுகளைப் பார்த்து, 'அங்கே தூரத்தில் பறக்கும் பறவை என்ன?' எனக் கேட்கிறது. 'அதுதான் பறவைகளின் அரசன் கழுகு, நம்மால் அப்படியெல்லாம் பறக்க முடியாது' என வருத்தப்பட்டுக்கொள்கின்றன கோழிக்குஞ்சுகள். 'தன்னாலும் பறக்க முடியாது' என்று நினைத்தே இறந்து விடுகிறது கழுகுக்குஞ்சு.

தான் யார் என்பதை அறியாத கழுகு தன்னைச் சுற்றியிருக்கும் கோழிக்குஞ்சுகள் போலவே தன்னை நினைத்துக்கொள்கிறது. அந்த நினைப்பே ஒரு சின்ன நூற்கண்டாய் அதைச் சிறைப்படுத்திவிடுகிறது. நாம் வாழ்வில் தோற்க காரணங்கள் இரண்டு: ஒன்று, நாம் யார் என்பதை நாம் இறுதிவரை அடையாளம் காண மெனக்கெடுவதேயில்லை. நமக்கென்று உள்ள தனித்தன்மை, நம் திறன்கள், நம் ஆற்றல்கள் அனைத்தையும் அடையாளம் காணாமலே விட்டுவிடுகிறோம். இரண்டு, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைவும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. 'ஊரோடு ஒத்துப்போக வேண்டும்' என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொண்டு எதிர்நீச்சல் போட மறுத்துவிடுகின்றோம்.

'கழுகைப்போல ஆண்டவர் ஒருவரே வழிநடத்தினார்!'

***

[4:10 மணித்துளிகள் ஓடும் இந்தக் காணொளி கடவுள் நம்மை இறக்கைகளுக்குள் வைத்துப் பாதுகாப்பதை நினைவுபடுத்துகின்றது: On Eagle's Wings]



Friday, June 28, 2013

நீங்கள் சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்!



பைபிளில வர்ற இயேசுநாதரின் போதனைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்: 'நீங்கள் சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள்!'

இதுல என்னங்க இருக்கு? இத சொல்றதுக்கு இயேசுநாதருதான் வேணுமா? எல்.கே.ஜி குழந்தைக்குக் கூடத் தெரியும். பறவைகள், விலங்குகளை விட மனிதருக்கு பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு இருக்குன்னு. நேச்சுரலி நாமதான் மேலானவர்கள்! 'நாம மேலானவங்க' அப்படிங்கறது நம்ம மூளைக்குத் தெரிஞ்ச அளவுக்கு நம்ம மனசுக்குத் தெரியலயே? அதத்தான் இயேசு சொல்ல வர்றாரு.

இயேசு இதைச் சொல்லும்போது அவர் காலத்தில இருந்த யூத பப்ளிக் மார்க்கெட்டில இருந்த ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். 'காசுக்கு இரண்டு குருவிகள் விற்பதில்லையா?' 'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?'

இங்க அடுத்த பிரச்சனை. இயேசுவுக்கு கணக்கு தெரியல. ஒரு காசுக்கு இரண்டு குருவினா, இரண்டு காசுக்கு எத்தனை குருவிகள்? நான்கு. ஆனா இயேசு ஐந்துன்னு சொல்றாரே. அது வேறு ஒன்னுமில்லை. ஐந்தாவது குருவிதான நம்ம ஊர்ல காய்கறிக்கடையில நாம வாங்குற கறிவேப்பில மாதிரியான கொசுறு - இலவசம். அந்தக் காலத்தில நாம் 2 கிலோ, 5 கிலோன்னு தக்காளி வாங்கினோம். கடைக்காரரும் ரெண்டு அல்லது மூணு தக்காளி கொசுறுன்னு குடுத்தாரு. இப்ப இருக்குற விலைவாசியில நாம வாங்குதே ரெண்டு அல்லது மூணு தக்காளிதான. இதுல கொசுறு எப்படி வரும்?

ஜவுளி கடையில நாம கேட்டு வாங்குற 'கட்டப்பை', நகைக் கடையில நாம நின்னு வாங்குற 'மணி பர்ஸ்,' ஹோட்டல்ல பில் கட்டிட்டு 'இவ்வளவு ரூபா ஆயிடுச்சேனு' முணங்கிக்கொண்டே தேடி எடுக்கும் 'சீரகம்' இவை எல்லாமே கொசுறுதான். ஏன் நம்ம போட்ட ஓட்டுக்கு நாம வாங்குற டிவி, மிக்சி, கிரைண்டர், லேப்டாப் கூட கொசுறுதான்.

நாம வாங்குற பொருளுக்கும், கொசுறுக்கும் வித்தியாசம் என்னன்னா இந்தக் கொசுறுக்கு ஏதாவது ஆச்சுன்னா நாம கவலைப்படவே மாட்டோம். துணியப் பத்திரப்படுத்தும் அளவுக்கு 'கட்டப்பையையோ', நகையைப் பத்திரப்படுத்தும் அளவுக்கு 'மணி பர்ஸையோ' (எம்ப்டி) பற்றி நாம கவலைப்படறது இல்ல. அது காணாமற்போனால் கூட அதைத் தேடி எடுக்க நாம் மெனக்கெடுவதில்லை.

ஐந்தாவது குருவியோடு நிலைமை அதுதான். நான்கு குருவிக்குத்தான காசு கொடுத்தோம். அவை பத்திரமா இருந்தா போதும். அஞ்சாவது இருந்தா என்ன? பறந்தா என்ன? இயேசு வைக்கிற டுவிஸ்ட் அதுதான். கொசுறா வந்த குருவின்னு நினைக்காம பத்திரமா பாதுகாப்பவர்தான் நம்ம கடவுள்.

ஒரு நிமிஷம் நினைச்சுப்பாருங்களேன். அந்தக் கொசுறா வந்த குருவி மனசுல என்ன நினைக்கும்? 'எனக்குத் தண்ணி வைக்க மாட்றான். அரிசி போட மாட்றான். கூண்டப் பத்தி கவலப்பட மாட்றான். என்ன இருந்தாலும் நான் கொசுறா வந்தவ தான!'னு கண்டிப்பா புலம்பும். நம்ம உறவுகளிலேயே பல நேரங்களில் நம்மிடம் வர்ற உறவுகளையும், நட்பையும் கொசுறாத்தான பார்க்கிறோம். 'அவ இருந்தா என்ன! போனா என்ன? நமக்கு என்ன செலவா? வரவா?' ன்னு நம்மள அறியாமலே நம்முடைய செயல்களால காட்டிவிடுகிறோம்.

திருமண உறவுல இது எப்படி இருக்கும்னா, நம்மள நம்பிதான வந்திருக்கான்(ள்). இனி எங்க போவான்(ள்)? குடுக்குற சாப்பாட சாப்பிட்டுட்டு, குடுக்குற வேலையைச் செய்யட்டும் என நினைக்கிறது. முற்றிலும் துறந்த துறவு வாழ்வில (என்னைப் போன்ற) வாழ்வில எப்படி வெளிப்படும்னா, நான் எதுக்கு இந்த மக்களைப் பற்றி கவலைப்படணும்? இந்த இடம் இல்லைன்னா இன்னொரு இடம்! என்ற ஏனோதானோ மனநிலை மற்றும் இதிலிருந்து வெளிப்படும் அதிகாரம். எனக்குக் கீழ் இருக்கிற மக்களை நான் கொசுறுக் குருவிகளாக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிடுவேன்.

நம்மள இந்த உலகம் கொசுறு போல நினைத்தாலும் நம்ம கடவுள் நம்மள ஒருபோதும் அப்படி நினைப்பதே கிடையாது. அவரோட கண்ணின் கருவிழிகள் நாம். நம்ம உடம்ப பாருங்களேன். அத வெளியில செய்ற செயல்களத்தான் நாம பார்க்கிறோம். கண் பார்க்குது. காது கேட்குது. கை டைப் அடிக்குது. கால் நடக்குது. ஆனா உள்ளுக்குள்ள அதே நேரம் எவ்வளவு வேலைகள் நடக்குது? இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், உணவு செரிமானம், சுவாசம், எண்ண ஓட்டம், மூளையில நடக்குற வேலைகள், கணயம், கிட்னி, குடல் என எல்லாம் எவ்வளவு நேர்த்தியா வேலை செய்கின்றன. உள்ள ஒரு சின்ன பிராப்ளம் ஏற்பட்டு சுவாசம் நுரையீரலுக்குப் பதிலாக இதயத்திற்கோ, உணவு இரைப்பைக்குப் பதிலாக நுரையீரலுக்கோ போனா என்ன ஆகும்? நாம காய்கறி வெட்டிக்கிட்டு இருக்கும்போது காயை வெட்டுங்குற கமாண்டுக்குப் பதிலா மூளை கையை வெட்டுன்னு கமாண்ட் கொடுத்தா என்ன ஆகும்? இதுதான் கடவுளோட பராமரிப்பு. இதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்: 'என் உள் உறுப்புக்களை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!' (திபா 139:13). இப்படி எல்லா மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், இயற்கையையும் பராமரிப்பவர் இறைவன். இந்தப் பராமரிப்பை நாம ஒரு நிமிஷம் நினைச்சோம்னா, இந்தப் பெரிய பிரபஞ்சத்தில நாம ஒன்னுமேயில்லை அப்படிங்கிற சுயஅறிவை நாம் பெற்றுவிடுவோம். ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொள்வோம்.

நாம யாரையும் 'கொசுறு' போல நினைக்கக்கூடாது. நாம சந்திக்கிற ஒவ்வொரு நபருக்கள்ளும் ஏதாவது ஒரு போரட்டம், கண்ணீர், ஏமாற்றம், விரக்தி இருக்கும். அப்படி இருக்கும்போது எதுக்காக நம்மளோட வார்த்தையாலும், செயல்களாலும் அதை அதிகமாக்கணும்? ஒருத்தர் மத்தவர்ட்ட கொஞ்சம் கனிவோட நடந்தால நம்ம மனித குலம் எவ்வளவோ உயர்ந்துடும். வன்முறை, தீவிரவாதம், கோபம், அடிமைத்தனம், போர் இப்படி எதுவுமே இல்லாமல் போய்விடும்.

நாம நம்மள ஒருபோதும் 'கொசுறு' தானேன்னு தாழ்வா மதிப்பிடவே கூடாது. 'உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும்!' என்பதை அடுத்தவர்களுக்குக் கற்றுக்கொடு என்பார் லெனின். நம்மள மத்தவங்க சுயமதிப்பு நிறைந்தவங்கனு நினைக்கனும்னா நாம ஒருநாளும் தாழ்ந்து போகவே கூடாது. எக்காரணத்தக் கொண்டும் தன்மானம் இழக்கவே கூடாது. எப்போ நாம நம்மளயே கொசுறுன்னு நினைக்கிறோமோ, அப்பவே மத்தவங்க நம்மள அதுமாதிரி நடத்த ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் நாம அவங்களுக்கு விக்டிம்ஸ்தான். 'நில்லுன்னா நிக்கணும்! உட்கார்ன்னா உட்காரணும்!'

சிட்டுக்குருவி மிகவும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஜீவன். குயில்போல அதற்குப் பாடத் தெரியாது. மயில்போல ஆடத் தெரியாது. கிளிபோல பேசத் தெரியாது. அதோட இறகுகள் கூட அட்ராக்டிவ் கிடையாது. மிகவும் வலுவற்ற ஜீவன் அது. ஆகையால்தான் நம்ம செல்ஃபோன் கதிரியக்கத்துக்கூட ஈடுகொடுக்க முடியாம வேகமா அழிஞ்சுட்டு வருது.

இன்னைக்கு எங்கயாவது ஒரு குருவியப் பார்த்தீங்கன்னா ஒரு நிமிஷம் நின்னு உங்க மனசுக்குள்ளேயே சொல்லிக்கோங்க:

'நீங்க சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்!'


[உங்களுக்கு டைம் இருந்துச்சுனா 6:41 நிமிஷம் ஓடுற இந்தப் காணொளிப்பாடலைப் பாருங்க:
His Eye is on the Sparrow]




Thursday, June 27, 2013

தலையணை ரேகைகள்


ரேகை ... எனக்குத் தெரிந்து இந்த வார்த்தையை முதலில் நான் கேட்டது 6ஆம் வகுப்பு பழனியம்மா டீச்சரிடம். பூகோளவியல் நடத்திய அவர் பூமத்திய ரேகை பற்றிப் பேசினார். பின் அறிந்தது கைரேகை. குற்றவாளிகள் விடும் தடயம் அறிய கைரேகை. எதிர்காலம் பார்க்க கைரேகை என அறிந்த எனக்கு இப்போது புது இன்ஃபோ. 

கையை மூடிப்பாருங்களேன். ரேகை உள்ள இடங்களில்தான் கையைச் சுருக்க முடியும். நம் கைக்கு ரேகை இருப்பது போல காலுக்கும் ரேகைகள் உண்டு. தோலின் சுருக்கம் ரேகை. என்னதான் மாய்ஸரைசர் போட்டுக் கெட்டியாக வைத்தாலும் நம் முகத்தின் தோலும் சுருங்கி ரேகைகள் விழத் தொடங்கும். 

நம் கையில் இருக்கும் ரேகை நம் வாழ்வைக் காட்டுகிறதோ இல்லையோ நாம் பதிக்கும் கைரேகை கண்டிப்பாக நம் வாழ்வைப் பாதிக்கும். நாம் குற்றவாளி என்றால் நம் விடும் ரேகைக்குப் பெயர் தடயம். நாம் நல்லவர் என்றால் நாம் விடும் ரேகைக்குப் பெயர் தாக்கம்.

நம்மையறியாமலே அன்றாடம் நம் ரேகைகள் பிரதியெடுக்கப்படுகின்றன.

கைபிடிக்கும் பேனாவில்.

டைப்படிக்கும் கீபோர்டில்.

மொபைல் டச்ஸ்கீரின்.

வாழ்க்கை ஸ்டெரஸ் தாங்காமல் வலுவற்று நாம் சாயும் பாத்ரூம் சுவர்.

நெற்றிப் பொட்டு அமைப்பாய் இருக்கா எனப் பார்க்க

ஒற்றைக் கை ஊன்றும் கண்ணாடி.

பேருந்தின் கம்பி.

ஏடிஎம் அட்டை.

வாசிக்கும் புத்தகம்.

விளையாடும் பந்து.

சாப்பிடும் தட்டு.

ஓட்டும் பைக்.

ஓங்கி அறையும் கன்னம்.

கதவின் கைப்பிடி.

கைக்குட்டை.

இவை அனைத்திலும் நம் ரேகைத்தடங்கள்.

இன்று என் தவம் கலைத்தவை என் தலையணை ரேகைகள்.

என் மகிழ்ச்சி

என் தனிமை

என் உடல்நலம்

என் நோய்

என் எல்லா இரவுகளிலும் என் உடன் இருக்கும் துணை என் தலையணை.

என் கண்ணீர்

என் சிரிப்பு

என் ஜொல்லு

என் லொல்லு

அனைத்தையும் அறிந்தவள் அவள்...

இன்று என் உள்ளங்கையின் ரேகை தாங்கிபவள்

நாளை என் கன்னங்களின் ரேகை தாங்குவாள்

தினமும் அவள் சொல்லும் மௌனமொழி இதுதான்:

'உன் ரேகை தடயமா? தாக்கமா?'

Wednesday, June 26, 2013

பொறுமையா? சமரசமா?



போன வாரம் சனிக்கிழமை மாலை எங்கள் பங்கில் ஒரு தம்பதியினரின் திருமண வெள்ளி விழாத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் மறையுரை நேரத்தில் அருட்பணியாளர் தம்பதியினரைப் பார்த்து, 'இந்த 25 ஆண்டு இல்லற வாழ்வின் இரகசியம் என்ன?' என்று கேட்டார். எல்லாரின் கண்களும் மணமக்களை நோக்கியே இருந்தன. மணமக்களும் ஒருவர் ஒருவரை பார்த்துக்கொண்டனர். அருட்பணியாளர் மீண்டும் அதே கேள்வியை அவர்களிடம் கேட்டார். 'லா பாட்சியன்ஸா (பொறுமை)!' என்று பதிலளித்தார் பெண். பலர் சிரித்தனர். சிலர் ஆச்சர்யப்பட்டனர். அருட்பணியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. 'பொறுமை!?' மீண்டும் அவர்களைக் கேட்டார். 'அன்பு', 'தியாகம்' எனச் சொல்வார்கள் என அவர் நினைத்திருப்பார்போல. ஆகையால் தொடர்ந்து பிரசங்கம் வைத்தார்: 'அன்பு பொறுமையுள்ளது!'. திருப்பலி முடிந்தது. எல்லாரும் தம்பதியினரை வாழ்த்தினர். நானும் வாழ்த்தினேன். நல்ல விருந்தும் நடந்து முடிந்தது.

இன்று மாலை அதே பெண்ணை நான் பார்க்கில் சந்திக்க நேர்ந்தது. அவரின் அருகில் சென்று 'நீங்கள் சொன்ன பதிலை யாருமே எதிர்பார்க்கல!' என்றேன். உடனே அப்பெண் அழத்தொடங்கினார். எனக்கு பயமாயிற்று. சுற்றி நின்றவர்கள் எங்களையே பார்க்துக் கொண்டிருந்தனர். அவரை அருகிலிருந்த பெஞ்சில் அமர வைத்து நானும் அருகில் அமர்ந்தேன். 'ஸ்கூஸா சிக்னோரா!' (மன்னிச்சுக்கோங்க மேடம்!) என்றேன். 'நியன்த்தே!' (பரவாயில்லை), என்று பதில் தந்தார். தொடர்ந்து, 'என் வீட்டுக்காரர் மிகவும் கோபக்காரர். அதிகம் குடிப்பார். போதை மருந்துப் பழக்கமும் இருந்தது. ஆகையால் வேலையை இழந்தார். நான் தான் பிள்ளைகளை வளர்த்தேன். எனக்கு அவர் பிரமாணிக்கமாக இருந்ததும் கிடையாது. கையில் கிடைக்கும் பணத்தை குதிரை ரேஸில் பந்தயம் கட்டுவார். அல்லது லாட்டரியில் செலவிடுவார். இப்படிப்பட்ட வாழ்க்கையில் 'பொறுமை' இருந்தததால்தானே 25 வருடங்கள் கடக்க முடிந்தது' என்று அழுது முடித்தார்.

அவரிடம் விடைபெற்று நான் வாக்கிங் கிளம்பினேன். எனக்குள் ஒரு நெருடல். அவரைக் காயப்படுத்திவிட்டோமோ என்று. ஆனால் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அந்த உரிமையில்தான் கேட்டேன். அவரும் அந்த உரிமையிலே பதில் சொன்னார்.

எனக்கு இப்ப எழும் கேள்வி இதுதான்: 'இந்தப் பெண் தன் திருமண வாழ்வில் காட்டியது பொறுமையா? அல்லது சமரசமா?' எனக்கு என்னவோ இவர் 25 வருடங்கள் செய்தது 'சமரசம்' தான் எனத் தோன்றுகிறது.

சமரசத்திற்கு நாம் வைத்திருக்கும் செல்லப்பெயர்தான் பொறுமையா?

'என்ன சார். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பண்ணியிருக்காங்க. நாம எதுவும் செய்ய முடியாதா?' என்று மாணவர்கள் கேட்டதற்கு பேராசிரியர் சொல்கிறார், 'பொறுமையா இருங்க. எல்லாம் சரியாயிடும்!'. இது பொறுமையா? சமரசமா?

'என்ன மேடம் நீங்க இவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. அவன் நன்றியில்லாம நடந்துக்கிறான். நீங்களும் அமைதியா இருக்கீங்க!' இது பொறுமையா? சமரசமா?

நானும் ஃபாதர் ஆகி 4 வருடம் ஆகிறது. 'எதுக்காக இங்க இருக்கிறோம்? நம்மளால யாருக்கு பிரயோசனம்? இவ்வளவு ஹியூமன் ரிசோர்ஸ் வேஸ்ட் ஆகுதே. என்னால ஒன்னும் உருப்படியா செய்ய முடியலயே?' என்று யாரிடம் புலம்பினாலும் அவர்கள் சொல்வது, 'ஃபாதர் எல்லாம் சரியாயிடும். பொறுமையா இருங்க!' இது பொறுமையா? அல்லது என் வெறுமையுடன் நான் செய்து கொள்ளும் சமரசமா?

'எல்லாம் சரியாயிடும்'னு நினைச்சா சரியாயிடுமா? கார் ஓட்டிட்டு போறோம். எதிரில் ஒரு கார் வருது. 'எல்லாம் சரியாயிடும்னு' நினைச்சா மட்டும் சரியாயிடுமா? 'பிரேக் போடனும்னு நினைச்சா மட்டும்' கார் நின்னுடுமா? பிரேக் போடனும்ல! 'விஷிங் எ திங் டஸ் நாட் மேக் எ திங்' என்பார்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செயல்படுத்த வேண்டும். அதுவும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்தானே!

வாக்கிங் முடிஞ்சு எங்க வீட்டுக்குத் திரும்பினேன். எப்பவும் எங்க கோவிலுக்கு வெளியே பிச்சையெடுக்கும் (மன்னிக்கவும்...இந்த வார்த்தையில் எதுவும் ஏளனம் கையாளப்படவில்லை!) ருமேனிய நாட்டுப் பெண் நின்று கொண்டிருந்தாள். வழக்கமாகக் கைக்குழந்தையோடு வரும் அவள் இன்று தனியே நின்றுகொண்டிருந்தாள். 'என்ன ஈவா! உன் குழந்தையை எங்கே?' என்றேன். 'அதற்கு நெற்றியில் அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரில சேர்த்திருக்கிறேன்' என்றாள் கலங்கிய கண்களோடு.

'கவலைப்படாதே! எல்லாம் சரியாயிடும்' என்று சொல்லிவிட்டு கேட்டைச் சாத்தினேன்.

அவள் என்ன நினைத்திருப்பாள்?

'எல்லாம் சரியாயிடுமா? அவள் குழந்தையின் நெற்றி சரியாயிடுமா? அவளின் வறுமை சரியாயிடுமா?'

'இது நான் காக்கும் பொறுமையா? அல்லது என் இயலாமையில் எனக்கு நானே  செய்துகொள்ளும் சமரசமா?'

Tuesday, June 25, 2013

டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?

இன்று என் நண்பி இனியாவுடன் இத்தாலியின் தென்முனைக்குச் சென்றேன். இனியா இத்தாலியப் பெயர் மாதிரி இல்லையேன்னு கேட்காதீங்க. இது அவளது இயற்பெயர் அல்ல. காரணப்பெயர். அப்படி என்ன காரணம்? ஒன்றல்ல, இரண்டு காரணங்கள்:

காரணம் 1: இத்தாலியில் எந்த ஒரு ஆணும், எந்த ஒரு பெண்ணையும் பார்த்து எந்த ஒரு இனிஹிபிஷனும் இல்லாமல் இத்தாலிய மொழியில் 'பெல்லா' என்றும் 'பெல்லெட்சா' (அழகு, அழகி, இனிமை, இனியவள்) என அழைக்கலாம். ஒரு பெண்ணை 'அழகி' என அழைத்தால் இங்கே நமக்குப் பதிலாகக் கிடைப்பது ஒரு பெரிய ஸ்மைல். இதையே நம்ம ஊர்ல கூப்பிட முடியுமா? நாம ரொம்ப குளோஸா இருக்குற ஒரு பொண்ணப்பார்த்து 'ஹாய் அழகி!'ன்னு கூப்பிட்டா என்ன நடக்கும்? அவ பதிலுக்கு நம்மைப் பார்த்து மூனு கேள்வி கேட்பாள்:

கேள்வி 1: 'என்னது, என்ன சொன்ன?' (கேட்கலயாம்!)
கேள்வி 2: 'என்ன கிண்டல் பண்றியா?'
கேள்வி 3: 'என்ன தண்ணிய கிண்ணிய போட்ருக்கியா?'

ஏன்னா நாமதான் அழகுன்னா இப்படித்தான் இருக்கணும்னு டெஃபனிஷன் கொடுத்துட்டோமே. அமலா பாலும், அய்ஸ்வர்யா ராயும்தான் அழகுன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டோம். பொண்ணு அழகா இருக்கணும்னா சிகப்பா இருக்கணும்! ஆண் அழகா இருக்கணும்னா கையை மடக்கி மேலே தூக்கிட்டு சிக்ஸ் பேக்கோட இருக்கணும்! இதத்தான நாம அழகுன்னு நினைக்கிறோம்! ஆனா இத்தாலியில எல்லாரும் அழகுதான். அதனாலதான் இங்க 'மிஸ் இத்தாலியா' அழகிப்போட்டிகூட கிடையாது. எல்லாருக்கும் எப்படிங்க ப்ரைஸ் கொடுக்க முடியும்?

காரணம் 2: என்னோட இனியவளுக்குப் பிடிச்ச இனிய தமிழ்ப்பெயர் 'இனியா'.

இந்த இனியாவோட இன்னைக்குக் காலையில புறப்பட்டேன். என்னைக்கும் லேட்டா வர்ற இனியா இன்னைக்கு இருபது நிமிஷம் முன்னாலயே வந்துட்டா. இருவர் மட்டும் பயணிக்கக் கூடிய ஸ்மார்ட் கார். காரில் ஏறும்போதே உள்ளே சிகரெட் ஸ்மெல். இந்த இனியாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது மூன்று: நல்லா கார் ஓட்டுவா. நல்லா சிகரெட் பிடிப்பா. நல்லா வாய் விட்டுச் சிரிப்பா.

நாம எங்கயாவது போகணும்னு நீண்ட நாள் அடம்பிடிச்சு இன்னைக்குபு; புறப்பட்டோம். ஏறக்குறைய 1200 கிமீ. மேப்பெல்லாம் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்திருந்தா. நாங்க போகப்போற இடம் இத்தாலியின் தெற்கேயுள்ள ஃபுஜ்ஜியா என்ற மாகாணத்தின் மோந்தே சாந்தஞ்சலோ என்ற நகரம். இங்குள்ள மக்களின் நம்பிக்கையின்படி புனித மிக்கேல் அதிதூதர் கிபி 490 ஆண்டு காட்சியளித்தார். அட்ரியாடிக் கடல் தாலாட்டும் பழமையான வளமையான நகரம்.

ரோமிலிருந்து புறப்பட்டு நான்கு மாகாணங்களைக் கடந்து செல்லும் மலைப்பாதையில் புறப்பட்டோம். இத்தாலியின் இருபது மாகாணங்களையும் இணைப்பவை அவைகளின் சாலைகள். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, விபத்துக்கள் குறைந்த பாதைகள் இவை. சூப்பர்ஹைவே எனப்படும் அதிவேக சாலையில் பயணம் தொடங்கும்போது என்னிடம் கேட்டாள் இனியா: 'உங்க இந்தியாவுல இப்படியெல்லாம் ரோடு இருக்குதா?' செம்மண் தார் ரோடாகி, தார் ரோடு தங்க நாற்கரச்சாலையாகி, இப்பத்தான் நான்கு வழிச் சாலைகள் வர ஆரம்பித்திருக்கின்றன நம்ம ஊரில். அதுக்காக அப்படியே உண்மையச் சொல்லிட முடியுமா? நமக்குன்னு ஒரு கெத்து இருக்குல. 'எங்க ஊர்ல இந்த மாதிரி ரோடெல்லாம் இல்ல. நாங்க பக்கத்து ஊருக்குப் போகனும்னாலும் ஹெலிகாப்டர்லதான் போவோம். அதனால இந்த மாதிரி ரோடெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை', என்றேன். நக்கலாகச் சிரித்தாள்!

ஏறக்குறைய 11 மணி. புனித மிக்கேல் அதிதூதர் காட்சி தந்த குகையில் செபம் செய்து விட்டு எதிரில் இருந்த பீச்சில் வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். பேசிக்கொண்டேயிருந்தபோது இனியா கேட்டாள், 'டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?' (வானதூதர்கள் இருக்கிறார்கள் என நம்புகிறாயா?). 'ஆக்சுவல்லி...' என்று நான் பதில் சொல்லத் தொடங்கியபோது அவளின் ஐஃபோன் அடிக்க அதை எடுத்து 'ஒரு நிமிஷம்!' என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

கடற்கரையைப் பார்த்துக்கொண்டே அதே கேள்வியை எனக்கு நானே கேட்டேன்: 'டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?' பைபிளில் நிறைய இடங்கள்ல ஏஞ்சல்ஸ் பற்றிய குறிப்பு இருக்கு. அதிலும் 'மிக்கேல், கபிரியேல், ரஃபேல்' என மூன்று பேரை ஆர்க் ஏஞ்சல்ஸ் (அதிதூதர்கள்) என அழைக்கிறது கத்தோலிக்க மறை. கிறித்தவ மதத்தின் 'ஏஞ்சல்ஸ்' நம்பிக்கை வளர அதன் தாய் மதமான யூத மதமே காரணம். யூதர்களின் சிந்தனையில் 'ஏஞ்சல்ஸ்' வரக் காரணம் அவர்கள் பாபிலோனியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிகழ்வுதான். பாபிலோனியாவிலும் அதைச்சுற்றியிருந்த பாரசீக நாட்டிலும்தான் (ஸோராஸ்ட்டிரிய மதம்) 'வானதூதர்கள்' என்ற கான்சப்ட் முதலில் உருவாகிறது. இசுலாமின் திருக்குரானிலும் ஒன்பது அதிதூதர்களின் பெயர்கள் உள்ளன. இந்து மதத்தில் 'வானதூதர்' என்ற சிந்தனை இல்லையென்றாலும் இராமாயணத்தின் 'ஹனுமாரும்', மகாபாரதத்தின் 'கண்ணனும்' நமக்குத் தூதர்களாகவே தெரிகின்றனர். கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் இருப்பவர்கள்தாம் 'ஏஞ்சல்ஸ்'. இந்த இருவருக்கும் இடையில் உள்ளவர்கள் என்றால் இந்த இருவரின் இயல்பையும் இவர்கள் கொண்டிருக்க வேண்டும். மனிதர்களின் ஐம்புலன்களுக்கும் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதையும் கடந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மனிதர்களைப்போல ரூபிகளாகவும், கடவுளைப்போல அரூபிகளாவும் இருக்க வேண்டும்.

அன்னைக்கு மக்களுக்கு அடிக்கடி காட்சி தந்த வானதூதர்கள் இன்னைக்கு ஏன் வருவதில்லை? பவுலோ கோயலோ மிரகில்ஸ் பற்றி சொல்லும்போது இப்படிச் சொல்வார்: 'மிரகில்ஸ் ஹேப்பன் ஒன்லி டு தோஸ் வூ பிலிவ் இன் த மிரகில்ஸ்!'. அதுபோலத்தான் 'ஏஞ்சல்ஸ் அப்பியர் ஒன்லி டு தோஸ் வூ பிலிவ் இன் தி ஏஞ்சல்ஸ்!'. ஏஞ்சல்ஸ்க்கும் டெவில்ஸ்க்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். அடுத்தவர்களை மட்டும் நினைப்பவர்கள் ஏஞ்சல்ஸ். தன்னை மட்டும் நினைப்பவர்கள் டெவில்ஸ். அப்படியென்றால் 'நாம் நல்லா இருக்க வேண்டும்!' என நினைக்கிற ஏஞ்சல்ஸ் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கிறார்கள்: நம் அப்பா, அம்மா, ஆசிரியர், குழந்தை, நண்பன், நண்பி, காதலன், காதலி, கணவன், மனைவி, மருத்துவர் எனப் பலர் அன்றாடம் நம் நலம் விரும்புகின்றனர். இவங்க எல்லாருமே ஏஞ்சல்ஸ்தானே. இவை தவிர எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்து 'யாரென்று அறியாமல், பேர் கூடத் தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உருவானதே' என்று மதராஸப்பட்டினம் படப் பாடல்வரிகள் போல நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒருவர் ஏஞ்சலாக நம் வாழ்விற்குள் வருகின்றார். இன்றும் வானதூதர்கள் வருகிறார்கள். நம் நண்பர்கள் எல்லாருமே ஏஞ்சல்ஸ்தான். அவர்கள் நம்மைப்போலவும் இருப்பார்கள். நம்மை விட வித்தியாசமாகவும் இருப்பார்கள். ஏஞ்சல்ஸைப்போல நம்மை நம் வாழ்க்கையோடு நம்மை இணைப்பவர்கள் இவர்கள்தாம். ஒருவர் இறக்கும்போது அவர் மட்டுமல்ல அவரோடு இருக்கும் ஏஞ்சல்சும் இறந்துதானே போகிறார்கள்!

மற்றொரு வகையாகப் பார்த்தால், நம்மில் இருக்கும் நம்பிக்கை நம் ஏஞ்சல். நாம் கொண்டிருக்கும் பயம் நம் டெவில்.

ஃபோன் பேசி முடித்துவிட்டு வந்த இனியா 'வா சாப்பிடப் போகலாம்' என்றாள். சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும் போது திடீரெனச் சிரித்தாள்: 'ஏன் சிரிக்கிறாய்?' என்றேன். 'ஒன்னுமில்லை. சாப்பிடு', என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தாள். 'ஏன் மேடம் சிரிக்கிறீங்க?'ன்னு மறுபடியும் கேட்டேன். 'மிக்கேல் அதிதூதருக்கும், உனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. என்ன?' எனக் கேட்டாள். 'தெரியாது', என்றேன். 'அவர் ஆர்க் ஏஞ்சல். நீ டார்க் ஏஞ்சல்!' என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். 'கலாய்ச்சிட்டாரமா!' ன்னு சொன்னேன். 'என்ன சொன்ன?' என்றாள். 'என்ன ஒரு அறிவு!' ன்னு சொன்னேன் என்றேன்.

முன்பின் தெரியாமல், முழுநாளும் என்னோடு இருந்து, இந்த முழுநிலா நாளில் என்னை முழுமையாக வீடு வந்து சேர்த்த என் இனியாவும் ஒரு ஏஞ்சல்தான்!

'டு யூ பிலிவ் இன் ஏஞ்சல்ஸ்?'



Monday, June 24, 2013

எது தர்மம்?



நேற்று இரவு 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் பார்த்தேன். என்ன ஃபாதர் எப்ப பார்த்தாலும் படம் பார்த்துக்கிட்டே இருக்கீங்களேனு கேட்காதீங்க. ஆயிரம் புத்தகங்கள் சொல்ல முடியாததை ஒரு திரைப்படம் சொல்லிவிடும்! எப்புடி?!

சுப்பு (கதாநாயகி) குளித்த தன் தலையை கிளிப்பால் முடியும் காட்சியுடன் தொடங்கும் திரைப்படம் அதே கதாநாயகி தன் கிளிப்பை அவிழ்த்துத் தூக்கி எறிவதோடு முடிகிறது. படம் முழுவதும் அவள் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒரு கிளிப்பின் வழியாகக் காட்டிவிடுகின்றது படம்.

படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் திரையிடப்படும் வார்த்தைகள் இவைதாம்:

'எது தர்மம்?
நாகதத்தன்: விஷ்னுகுப்தா, எது தர்மம்?
விஷ்னுகுப்த சாணக்யன்: எது தேவையோ, அதுவே தர்மம்.'

'எது தேவையோ அதுவே தர்மம்' என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? 'நமக்குத் தேவையானதைப் பெற நாம் எதுவும் செய்யலாம் என்பது தர்மமா', அல்லது 'நமக்குத் தேவையானதே தர்மமா' அல்லது 'நம் தேவைகளே நம் தர்மத்தை நிர்ணயிக்கின்றனவா?'.

'நமக்குத் தேவையானதைப் பெற நாம் எதுவும் செய்யலாம். அதுவே தர்மம்.' இந்த அடிப்படையில்தான் ஓடுகிறது திரையோட்டம்.

சிங்கப்பெருமாளின் தேவை உடல் ஆசை. அதை நிறைவேற்றும் தர்மமாக வருகின்றார் சுப்பு.

அவரின் இரண்டாம் தேவை போதைப்பொருள் விற்பதன் வழியே வரும் பணம். அதை நிறைவேற்ற தன்னுடன் இருந்த பசுபதியை கொல்லத் துணிகின்றார்.

பசுபதியின் தேவை பணமும், கடத்தப்பட்ட தன் மனைவி கஸ்தூரியும். அந்தத் தேவையை நிறைவேற்ற அவர் எடுக்கும் ஆயுதம் வன்முறை.

கஜேந்திரன் மற்றும் அவரது தம்பியின் தேவை அதிகாரம். அவர்கள் கையிலெடுப்பது வன்மம்.

சப்பை என்று வீடியோ கேம் விளையாடும் ஆனால் விவரமான இளைஞனின் தேவை எல்லாமே. கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தர்மமாக்க நினைக்கிறான். திருடுகிறான். சுப்புவோடு உறவு கொள்கிறான்.

ஓடுகின்ற வன்முறைகளுக்கு இடையில் வருகின்ற இரண்டாம் கதாபாத்திரங்கள் காளையனும் அவர் மகன் கொடுக்காப்புளியும். தான் ஒரு ஜமீன்தார் என்று இறந்த காலத்திலேயே வாழும் காளையனின் குடிப்பழக்கத்தையும், ஊதாரித்தனத்தையும், வெகுளித்தனத்தையும் பார்க்கும் போது நமக்கே கோபம் வந்து விடும். இந்தக் காளையனின் தேவை தன் வறுமை அகல வேண்டும். இவர் ரௌடிகளால் பிடித்துச் செல்லப்பட்டபோது அழுகின்ற இவரின் மகன் கொடுக்காப்புளியின் தேவை தன் அப்பா.

அனைவரின் தேவைகள் நிறைவேறிக்கொண்டே வருவதாகத் தெரியும்போது வருவதுதான் கதையின் டுவிஸ்ட். இரத்தம், கண்ணீர், சோகம், ஏமாற்றம், பயம் இவற்றையே அனுபவித்த சுப்பு தன் விவேகத்தால் தன்னை அடிமையாக்கிக் கஷ்டப்படுத்திய சிங்கப்பெருமாளையும், சந்தர்ப்ப சாக்கில் தன் படுக்கையைப் பகிர்ந்த சப்பையையும் கொன்றுவிட்டு பணத்தால் தன் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்.

எது தர்மம்? எது தேவையோ அதுவே தர்மம்.

இந்தக் கேள்விக்கு இப்படத்தைப் பார்க்கின்ற அனைவருமே விடையைத் தங்களுக்குள்தான் கண்டுபிடிக்க வேண்டும். படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஓபன்-என்டட். எல்லார் செயல்களையும் சரி என்றும் சொல்ல முடியும், தவறு என்றும் சொல்ல முடியும். 'பைனரியை' வைத்து விளையாடும் யுத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

இந்தப்படம் வைக்கும் முதல் கருத்து 'பைனரி'. நாம் அனைவருமே இந்த 'பைனரி'யால் இயக்கப்படுபவர்கள்தாம். நமக்குத் தர்மம் எனத் தெரிவது பிறருக்கு அதர்மமாகத் தெரியலாம். தலையில் இருக்கும்போது அழகாகத் தெரிகின்ற தலைமுடி நம் காஃபி கப்புக்குள் கிடந்தால் நம்மை முகம் சுளிக்க வைப்பதில்லையா? 'நன்மையா' 'தீமையா' என்பது நாம் எங்கு நிற்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஒருவருக்கு நாகரீகமாகத் தெரிவது மற்றவருக்கு கிறுக்குத்தனமாகத் தெரியலாம். நாம் வாழும் உலகை இயக்கும் மையம் 'ரெலடிவிட்டி'. நம் ஊரில் விடியும்போது அமெரிக்காவில் இருட்டுகிறது. நம் ஊர் வெளிச்சம் தான் நிஜம் என்று சொல்லிவிடவோ, அமெரிக்காவின் இருட்டு பொய் எனவோ சொல்லிவிட முடியாது. இரண்டும் நிஜம்தான். இரண்டும் பொய்தான். எங்கேயிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே உண்மை சாத்தியமாகிறது.

இரண்டாவதாக, எனக்குப் பிடித்த ஒரு உரையாடல் இதுதான்:

'பசுபதி: உங்க அப்பானா ரொம்ப பிடிக்குமா?
கொடுக்காப்புளி: அப்படியில்ல. ஆனா அவரு எங்க அப்பா!'

தன் அப்பா எவ்வளவு குடிகாரராக இருந்தாலும், தன் வீட்டின் பூர்வீகச் சொத்துக்களையெல்லாம் அழித்திருந்தாலும், தன் படிப்பு பாதியில் நிற்கக் காரணமாக இருந்தாலும், ஊதாரித்தனமாக வாழ்பவராக இருந்தாலும், படிக்காதவராக இருந்தாலும் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் 'அவர் என் அப்பா!' என எடுத்துக்கொள்கிறான். மனித உறவுகளுக்கு இது ஒரு நல்ல பாடம். என் அன்பிற்குரியவர் எப்படி இருந்தாலும் 'அவர் என் அன்பிற்குரியவர்' என என் உள்ளம் பல நேரங்களில் ஏற்க மறுக்கின்றது. 'நீங்க இப்படி இருக்கணும்! அப்படி இருக்கணும்! இதைச் செய்யணும்! அதைச் செய்யக்கூடாது!' என நான் எண்ணற்ற கன்டிஷன் போடுகிறேன். உறவுகள் மட்டுமல்ல, நாம் செய்யும் வேலை, படிக்கும் படிப்பு அனைத்தையும் இருப்பது போல் ஏற்றுக்கொண்டால் எவ்வளவு இனிமை!

மூன்றாவதாக, திரைப்படத்தின் இறுதியில் வரும் சுப்புவின் சுய-உரையாடல்:

'எனக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்ள எனக்கு ஒரு சப்பை தேவைப்பட்டான்.
இன்னைக்கு நான் அவனையே சுட்டுட்டேன்.
அவன்மேல் நான் பாவப்படவில்லை.
ஏன்னா அவனே சொல்லியிருக்கானே...புழு...மீன்...மனிதர்கள்...இந்த மூன்றில் ஒருவர் பிறப்பதே மற்றவர்க்கு உணவாகத்தானே. அதுதானே மனித வாழ்வின் எதார்த்தம்.
என்னைப் பொறுத்த வரையில்...
சப்பையும் ஒரு ஆம்பளதான்.
எல்லா ஆம்பளயும் சப்பைதான்...
தி சீக்ரெட் ஆஃப் பீயிங் எ உமன் இஸ்...இட்ஸ் எ மென்ஸ் வேர்ல்ட்...'

இந்த வார்த்தைகள் சுப்புவின் மேல் நமக்குக் கோபத்தைக் கொண்டுவந்தாலும், அவர் ஒரு சந்தர்ப்பவாதி என நம் மனது தீர்ப்பு எழுதினாலும் அவரின் வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டத்தான் செய்கின்றன.

எந்த ஆணின் மனதில் இருக்கும் வன்முறையும், வக்கிர உணர்வும் சப்பை என்ற அந்த இளைஞனிடமும் இருக்கிறது. அந்த இரண்டிற்கும் அவன் இரை தேடத்தான் செய்கிறான். மற்றொரு பக்கம் என்னதான் வன்முறையும், வக்கிர உணர்வும் இருந்தாலும் ஆண்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது (அவர்கள் சப்பை மேட்டருதான்!) என்ற பெண்ணியமும் விதைக்கப்படுகின்றது.

எது தர்மம்? எது தேவையோ அதுவே தர்மம்!

Saturday, June 22, 2013

இதுதான் நார்மல்



காலை 11.45 மணி. இனியன் எழுந்து கடற்கரைக்குச் சென்றான். அவனுக்குக் கடலில் நீச்சல் அடிக்க ஆசை. நீச்சல் உடைகள் இருந்தாலும் அவனால் அன்று நீந்தியிருக்க முடியாது. கடற்கரை நெடுக இருந்த மேல்தட்டு ஓட்டல்கள் ஃபென்சிங் போட்டு கடற்கரையே தங்களுக்குச் சொந்தம் என்பதுபோல் கொண்டாடிக் கொண்டிருந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் உள்ளே வருகிற அனைவரின் அடையாள அட்டைகளையும் கேட்டுக் கொண்டிருந்தனர். இனியன் தனக்குள் சிரித்துக் கொண்டான். 'இவ்வளவு பெரிய மனிதர்களை நம்பாத இந்த துப்பாக்கிக் காவலர்கள் இத்தனூன்டு அட்டையை நம்புகின்றனரே'. 

எல்லாரும் 'நார்மலாக' டிரஸ் அணிந்திருந்தார்கள். கலர் கலரான சட்டை. அதற்கு மேட்சாக கால் சட்டை. ஹவாய் ஸ்லிப்பர்ஸ். தலையில் பெரிய ரவுண்ட் வெள்ளை நிற தொப்பி. மேல் தட்டு மக்கள் கடலுக்கு வந்தால் இப்படித்தான் வரவேண்டும் என்ற 'நார்மாலிட்டையை' எல்லாரும் கடைப்பிடித்தனர். ஆண்களும், பெண்களும் கறுப்பு கண்ணாடிகள் அணிந்திருந்தனர். பார்வை மங்கியிருந்தாலும், பக்கத்து சேரில் அமர்ந்திருப்பவர் தெரியவில்லையென்றாலும் 'சன் கிளாஸ்' அணிய வேண்டும். ஏனென்றால் அதுதான் நார்மாலிட்டி.

இந்த டிரஸ்கோடின் மற்றொரு முக்கிய அம்சம்: செல்ஃபோன். டெக்ஸ் மெசஜஸ் வந்து கொண்டே இருக்க வேண்டும். நாம் யாரோடவது பேசிக்கொண்டேயிருக்கும் போது செல்ஃபோன் அழைப்பு ஒலித்து அந்தப் பேச்சைத் தடை செய்ய வேண்டும். 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று சொல்லி விட்டு அந்த அழைப்பை நாம் ஏற்க வேண்டும். ஒன்னுக்கும் உதவாத 'காலர் டியூன்' காலாக இருந்தாலும் 'இப்ப நான் பிசியா இருக்கிறேன். மண்டே கூப்பிடுங்களேன்' என்று பொய் சொல்லி விட்டு திரும்ப கான்வர்சேசன் தொடங்க வேண்டும். 'சே எவ்வளவு பெரிய ஆள் இவர்!' என்று எதிரில் இருப்பவர் நினைத்துக் கொண்டிருக்க, அவரது செல்ஃபோனும் அடிக்கும். அவரும் அடிக்கிற வெயிலில், 'நல்ல கிளைமேட்' என்று ஏதாவது பொய் சொல்லிக் கொண்டிருப்பார்.

பத்துப் பேர் மத்தியில நாம இருக்கும்போது நமக்க வர்ற தொலைபேசி அழைப்பு மாதிரி நமக்கு செல்ப் எஸ்டீம் தருவது வேறு எதுவுமில்லை. 'நான் முக்கியமானவன். என்னை யாராவது தேடிக்கொண்டேயிருப்பார்கள்' என்று அப்போதுதான் நம் மனசு மற்றவர்களுக்கு மௌனமாகச் சொல்ல ஆரம்பிக்கும்.

எஸ்.எம்.எஸ். இதில் முதல் 'எஸ்'ஸின் அர்த்தம் 'ஸார்ட்' என்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள் என நினைத்தான் இனியன். 'ஸார்ட்டாக' டைப் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஸார்ட்டாக கீபேடும் இருந்தது. ஆனால் இன்று எல்லா மொபைல்களிலும் கீபேடும் 'குவெர்ட்டி' கீபோர்டாக மாறிவிட்டது. டைப்ரைட்டர் போல வேகமாக அடித்துக் கொண்டிருந்தனர் பலர். மெசஜ் அனுப்பிவிட்டு பதிலுக்குக் காத்திருந்தனர் சிலர். 'ஸாரி நான் தவறாக உங்கள் எண்ணுக்கு அனுப்பிவிட்டேன்' என மன்னிப்பு மெசஜ் அனுப்பிக்கொண்டிருந்தனர் சிலர்.

அந்தக் கடற்கரையில் மட்டுமல்ல. உலகின் பல்வேறு இடங்களிலும் அந்த நேரத்தில் இவ்வாறுதான் எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன: 'குட்மார்னிங் மை லவ். ஐ வோக் அப் திங்கிங் எபவுட் யூ. நைஸ் டு ஹேவ் யூ இன் மை லைஃப்', அல்லது 'இன்னும் பத்து நிமிடங்களில் வீட்டில் இருப்பேன். உணவு தயாரா? லாண்டரிக்கு போட்ட துணிகள் வந்துவிட்டனவா?', அல்லது 'இந்தப் பார்ட்டி ரொம்ப போர் அடிக்குது. நீ எங்க இருக்க?'. வெறும் பத்து செகண்டுகளில் சொல்லப்பட வேண்டிய செய்திகளை ஐந்து நிமிடங்கள் மாய்ந்து மாய்ந்து டைப் செய்துகொள்கின்றனர் நார்மல் மனிதர்கள்.

'ஃபோன் ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. இது ஒரு நம்பிக்கைத் துணுக்கு. நீ தனியாய் இல்லை என நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சுய சமாதானம். நீ எவ்வளவு முக்கியமானவன்(ள்) என்பதைப் பிறருக்குக் காட்டும் வழி,' எங்கோ கேட்டதை மனதுக்குள் நினைத்துக் கொண்டான் இனியன்.

ஒரேயொரு இடத்தில்தான் செல்ஃபோன்கள் அணைத்து வைக்கப்பட வேண்டும். முக்கியமான விருந்துகளில் அல்ல. கடவுளோடு பேசும் கோவில்களில் அல்ல. தேர்வு அறையில் அல்ல. சினிமா தியேட்டரில் அல்ல. மருத்துவமனையில் அல்ல. இசைக் கச்சேரியில் அல்ல. இந்த எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு நபரின் செல்ஃபோன் அடிக்கத்தான் செய்யும். ஒரே இடம் எல்லாரும் தங்கள் செல்ஃபோன் ஆபத்தானது என உணர்வது அவர்கள் ஏரோபிளேனுக்குள் ஏறும்போதுதான். எல்லா ஏர்லைன்சும் சொல்லும் வழக்கான பொய் அங்கேயும் சொல்லப்படும்: 'ஆல் மொபைல் ஃபோன்ஸ் மஸ்ட் பி சுவிட்ச்ட் ஆஃப் பிகாஸ் தேய் மைட் இன்டர்ஃபியர் வித் த ஆன்போர்ட் சிஸ்டம்ஸ்'. நாம் எல்லோரும் இதை நம்புகிறோம். விமானப் பணியாளர்களும் இதை நம்மிடம் செய்யச் சொல்வார்கள்.

இந்தக் கதை உருவானது எப்படியென்றால் விமானத்தின் இருக்கைகளில் உள்ள ஃபோன்களை பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தந்தைப் பயணிகளிடம் உருவாக்குவதற்காகத்தான். அவைகளில் பேசினால் ஒரு நிமிடத்திற்கு பத்து அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டும். உங்களின் கிரடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும். அந்த ஃபோன் இயங்குவதும் நம் மொபைல் ஃபோனின் டெக்னாலஜி போலத்தான். விமான நிறுவனங்களின் இந்த ஏமாற்று வேலை எடுபடவில்லை. ஆனால் பொய் மட்டும் அப்படியே நிலைத்து விட்டது. விமானங்களில் லேப்டாப் பயன்படுத்தலாம். அதிலுள்ள வைஃபை விமான சேவைக்குச் தொந்தரவு கொடுக்காது. ஆனால் மொபைல் ஃபோன் கொடுக்குமாம்!

இப்ப இன்னும் ஒரு படி மேல போய் வளர்ந்த மொபைல் செட்களில் 'பிளைட் மோட்' என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்த ஃபோன்கள் சாதாரண ஃபோன்களை விட ஐந்து மடங்கு விலை அதிகம். யாரும் இது எதற்காக என்று இதுவரை விளக்கம் சொன்னதே கிடையாது. 'பிளைட் மோட்ல போட்டு பாட்டு கேளேன். அப்படியே பிளைட்ல போறது மாதிரி இருக்கும் மச்சி' என்றான் உதவாக்கரை நண்பன். நார்மல் மனிதர்கள் எல்லாம் இப்படி எண்ணற்ற கதைகளை நம்பித்தான் வாழ்கின்றனர்.

கடலில் நீந்தத்தான் முடியாது. நடக்கவாவது செய்வோம் என நடக்க ஆரம்பித்தான் இனியன். காற்றில் அடித்து வரப்பட்ட செய்தித்தாள் பக்கம் காலில் சிக்கியது. சிக்கியதை எடுத்து விரித்தான்:

'கம்ப்யூட்டரும், மொபைல் ஃபோனும் நம் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டன' என்ற வார்த்தைகள் கண்களில் பட்டன.

'இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்', என்றவாறு நடந்தான் இனியன்.

(பவுலோ கோயலோ எழுதிய 'தெ வின்னர் ஸ்டேன்ட்ஸ் அலோன்' என்ற நாவலின் ஒரேயொரு பக்கத்தைத் தழுவிய என் கற்பனை ஓட்டம்)

சூது கவ்வும்


இன்று 'சூது கவ்வும்' திரைப்படம் பார்த்தேன். ரொம்ப நாட்களுக்குப் பின் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு தமிழ்ப்படம். இது ஒரு பின்நவீனத்துவப் படம் (போஸ்ட்மாடர்ன்) என்றே சொல்வேன். பின்நவீனத்துவத்தின் முதல் பண்பு: 'வரம்புகளை மீறுவது'. ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் நிறைய வரம்புகள் வைத்திருக்கிறோம். கதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். முடிவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அனைத்து 'இருக்க வேண்டும்'களையும் மீறுவதுதான் இப்படத்தில் நான் முதலில் கண்டது.

'டெய்லி ஏன் பேப்பர் படிக்கணும். ஒரே செய்தியைத்தான டேட் மாத்தி போடறாங்க' என்ற ஒற்றை வாக்கியம் நம் நாட்டின் இன்றைய நிலையை எதார்த்தமாக எடுத்து வைக்கின்றது.

'ஏன் வேல செய்யணும்?' என்ற கேள்வி ஒரு சிலருக்கு நெருடலைத் தந்தாலும் இது சிந்திக்க வைக்கும் கேள்வி. நம்ம வாழ்க்கையில எதையுமே நாம இன்னைக்காக செய்றதில்லை. சாப்பிடுறோம்? எதுக்கு? உயிர் வாழனும்ல. சம்பாதிக்கிறோம். சேர்த்து வைக்கிறோம். ஏன்? நாளைக்குத் தேவைப்படும்ல. இன்னைக்கு நாம படிக்கிறது நாளைக்கு நாம வேலை பாக்குறதுக்கு. இன்னைக்கு நாம வேலை பார்க்குறது நாளைக்கு நாம நல்லா இருக்குறதுக்கு. டெய்லி நாம வாழறது அடுத்த நாளைக்கு. ஒரு நாள் அந்த அடுத்த நாளும் இல்லாம போயிடும்! எங்க தாத்தா இறந்த போது அவரது எதிர்த்த வீட்டில் இருந்த ஒரு பாட்டி ஒப்பாரி பாடியது என்னில் மிக ஆழமாகவே பதிந்து விட்டது: 'டெய்லி காலைல 5 மணிக்கு கடை திறக்கணும், கடை திறக்கணும்னு ஓடுவியே ... இப்ப எந்த கடைய போயி திறப்ப?!' இந்த வார்த்தைகளில் ஒரு நக்கல் நையாண்டி இருந்தாலும் இதுதான் எதார்த்தம். நாம செய்யற காரியங்களை 'ஏன் செய்றோம்'னு தெரியாமலதான் நிறைய நேரம் செய்றோம். சாப்பிடுவதை சாப்பிடுவதற்காகவும், வேலையை வேலைக்காகவும், பாசத்தை பாசத்திற்காக மட்டும் செய்யும்போதுதான் அதில் நம் முழுத்திறனும் வெளிப்படும்.

என் இ;த்தாலிய நண்பி வலேரியா ஒரு டூரிஸ்ட் ஏஜன்சியில் வேலை செய்கிறாள். இந்தப் புதன்கிழமை அவளை எங்களுக்கு எதிரில் இருக்கும் ஒரு பாரில் (பார் என்றால் இத்தாலியில் டீக்கடை) பார்க்க நேர்ந்தது. 'என்ன வலேரியா வேலைக்குப் போகலயா?' என்றேன். 'திங்கள், செவ்வாய் வேலை பார்த்தேன். அதிக டிக்கட் புக் பண்ணினதுனால அதிக கமிஷன் கிடச்சது. இந்த வீக்என்ட் பார்ட்டிக்கு இது போதும். அதனால மூணுநாள் லீவு போட்டுட்டேன்' என்று சொல்லிவிட்டு காஃபியை சிப் பண்ண ஆரம்பிச்சாள். 'நல்ல பாலிசி!' பாலிசின்னவுடனேயே ஞாபகத்திற்கு வருவது இன்சூரன்ஸ் பாலிசி. நாம போடற லைப் இன்சூரன்ஸ் பாலிசியெல்லாம் எப்படினா...வாயக்கட்டி வயி;த்தக்கட்டி நம்மள ஏழையா வாழ்ந்து பணக்காரனா இறப்பதற்கு நம்மள அழைக்கிறது என்பதுதான் உண்மை.

'சர்ரியலிசம்'. நாம வாழ்க்கையில ஐம்புலன்களால் உணர்வதற்குப் பெயர் 'ரியலிசம்'. ஐம்புலன்களையும் கடந்த நிலை 'சர்ரியலிசம்'. இத்திரைப்படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்த இந்த டெக்னிக்கை பயன்படுத்தியிருக்காங்க. கதாநாயகி கதாநாயகனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் காட்சியாக, அவன் காதுக்கு மட்டுமே கேட்கும் குரலாக, அவன் தொடுதலுக்கு மட்டுமே தெரியும் ஸ்பரிசமாக நிற்கிறாள். இந்தக் கதாநாயகி கதாநாயகனின் அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்கேற்கிறாள்: பாரில் (நம்மூர் சாhரயாக்கடை) அவனோடு அமர்கிறாள். காரில் அவனோடு பயணிக்கிறாள். சண்டை போடுகிறாள். அடிக்கிறாள். திட்டுகிறாள். கிண்டல் பண்ணுகிறாள். சவால் விடுகிறாள். சப்போர்ட் பண்ணுகிறாள். நான் இந்தக் கதாநாயகி வழியாக புரிந்துகொள்வது நம்மோடவே வாழும் நம் 'குட்டி' பெர்சனாலிட்டையத்தான். நாம் எப்போதும் இரண்டு நபர்களாகவே இருக்கிறோம். இதை இப்போதுள்ள சைக்காலஜியில் 'இன்னர் சைல்ட்' என்கிறார்கள். நாம் தனியாக அமர்ந்திருக்கும்போதுதான் அவன்(ள்) நம் கண்ணில் படுவான்(ள்). அவன்(ள்) தான் நம் சக்தி. பெண்ணுக்கு அவள் ஒரு ஆண்மை. ஆணுக்கு அவன் ஒரு பெண்மை. நம்மில் ஆண்மைiயும், பெண்மையையும், அறிவையும், உணர்வையும் சமமாக்கும் ஆற்றலே அது. இது நாம் அன்பு செய்யும் நபராக, நட்பு கொள்ளும் நண்பராக, நண்பியாக, காதலியாக, காதலனாக, கணவனாக, மனைவியாக, தாயாக, தந்தையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். யாரோ ஒருவர் நம் வாழ்வில் நம்மை இயக்குவார். கடவுள் அப்படின்னு சொல்லி பயமுறத்த வேண்டாம்...மனிதர்களை மட்டும் நினைத்துப் பார்க்கலாம். நம் அழுகைக்கும், நம் கண்ணீருக்கும் காரணமாய் நம் வாழ்வில் இருக்கும் அந்த நபரை இந்தக் கதாநாயகி பிரதிபலிக்கிறாள்.

'விளிம்புகள் மையமாவதும், மையம் விளிம்பாவதும்' மற்றொரு பின்நவீனத்துவக் கோட்பாடு;. தந்தையின் அரசியல் வாழ்வு விளிம்பாகி, மகனின் ஏமாற்றும் வாழ்வு அரசியலாகி மையமாகிறது. ஹீரோ வில்லனாக மாறுகிறார். ஹீரோவின் நண்பர் இறுதியில் ஹீரோவாகிறார். சாப்ட்வேர் இன்ஜினியர் சாதாரண நபராகிறார். சாதாரண நபர் சாதிக்கிறார். கிட்னாப்பிங் - ஸ்பெல்லிங் முக்கியமல்ல செய்வதுதான் முக்கியம். எண்ணற்ற புரட்டிப்போடுதல்களை எதார்த்தமாகக் காட்டுகிறது இத்திரைப்படம். அதை அழகாக எடுத்துக்காட்டுகிறது இதன் இறுதிப்பாடல்: 'எல்லாம் கடந்து போகுமடா. இதை அறிந்தவன் என்றும் ஞானியடா!'

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...'

அறம் பிறழ்ந்து அரசியலாகிவிட்டது நம் நாட்டில்...

'தர்மத்தின் வாழ்வுதனை 'சூது கவ்வும்;;'

ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்...'

Friday, June 21, 2013

திங் இட் ஓவர்!


இன்று ஜெர்மன் மொழி கற்கத் தொடங்கினேன். 'ஒருவரின் கனவு எந்த மொழியில் வருகிறதோ அந்த மொழியே அவரது புலமைபெற்ற மொழி' என்பார்கள். நம்மில் பலருக்குக் கனவுகள் நம் தாய்மொழியில் தான் வரும். சின்ன வயசுல இருந்தே ஆங்கிலம் படிக்கிறேன். ஆனால் கனவு ஆங்கிலத்தில் வந்ததேயில்லை. ஆங்கில அறிவு நம்மை தோலளவில் கறுப்பாகவும், மனதளவில் வெள்ளையாகவும் மட்டுமே வைத்திருக்கின்றது.

ஒரு மொழியைக் கற்க பல வழிகள் உண்டு. அந்த மொழி பேசப்படும் நாட்டில் சென்று வாழ்ந்து அம்மொழி பேசும் மக்களோடு பழகி கற்றுக்கொள்ளலாம். ஆனால் நான் 7 ஆண்டுகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தேன். மராத்திய மொழி என் காதுகளுக்கு வந்துவிட்டு காற்றோடு மறைந்துவிட்டது. புத்தகங்கள் வாங்கிக் கற்கலாம். ஆனால் புத்தகங்கள் வழி நான் கற்றதெல்லாம் புத்தகத்தை மூடியவுடனேயே மறந்து விடுகின்றது. ஆகையால் நான் தேர்ந்து கொண்டது 'மிஷல் தாமஸ் மெதட்' என அழைக்கப்படும் வழி. 'உங்கள் தாய்மொழி போல் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்' என்ற வாக்குறுதியோடு மிஷல் தாமஸ் என்ற ஆங்கிலேய மொழி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தது தான் இது. எதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. எதையும் எழுதிப் பார்க்கத் தேவையில்லை. ஓடுகின்ற சவுண்ட் டிராக்கோடு இணைந்து நாம் பயணம் செய்தால் போதும். அந்நிய மொழி நம் இயல்பு அறிவாகவே மாறிவிடுகின்றது.

இந்த ரெக்கார்டிங்கில் மிஷலும் அவருடைய இரண்டு மாணவர்களும் உரையாடுவார்கள். அந்த உரையாடலின் நான்காவது நபர் (அதாவது மூன்றாவது மாணவர்தான்) கற்பவர்.

இந்தக் கற்றலின் முதல் விதிமுறை: திங்க் இட் ஓவர் (சொல்வதற்கு முன் ஒரு செகன்ட் சரியா தவறா என யோசிக்க வேண்டும்). இந்த விதிமுறையைக் கேட்டவுடன் எனக்கு இதில் பெரிய லைப் ஃபிலாஸஃபி இருப்பது போல் தெரிந்தது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தவறான அர்த்தத்தில் இருப்பதற்கும், நாம் தவறான செயல்களில் ஈடுபடுவதற்குக் காரணம் நாம் ஒரு செகண்ட் கூட யோசிப்பதில்லை என்பதுதான்.

'சே...நான் ஒரு செகண்ட் யோசிச்சிருக்கணும்' என்று எத்தனை முறை யோசித்திருக்கிறோம். நாம ஓடுற வாழ்க்கையில யோசிக்கிறதுக்கே இடமில்லை. ஓடிக்கொண்டே இருந்தால்தான் வெற்றி என நினைக்கிறோம். 

ஒரு அப்பா தன் 25 வயது மகனோட ஒரு டிரெயின்ல போயிட்டிருக்கார். மகன் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டு சத்தம் போட்டுக்கிட்டே வர்றான். 'அப்பா, அங்க பாருங்க மரங்கள்;லாம் பின்னால ஓடுது', 'அப்பா, அங்க பாருங்க மேகங்கள்லாம் நம்ம கூடவே வேகமாக வருது' என்று அப்பாவைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே வருகிறான். 'என்ன இது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு!' என்று சக பயணிகள் முணுமுணுத்துக் கொண்டே வருகின்றனர். 'அப்பா அங்க பாருங்க கொக்கு நிக்குது!', 'அப்பா அங்க பாருங்க தண்ணீர்' என்று தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டே வருகிறான். பயணிகளுக்குப் பொறுமையில்லை. அந்த அப்பாவிடம் சொல்கிறார்கள், 'உங்க பையன் இவ்ளோ வளர்ந்திருக்கான். ஆனால் இன்னும் சின்னக் குழந்தை மாதிரி சத்தம் போட்டுக்கிட்டே வர்றானே. அவன ஏதாவது மனநல ஆஸ்பத்திரில சேருங்க!' அவர்களின் எரிச்சலைக் கேட்ட அப்பா சொல்கின்றார்: 'இவனுக்குப் பிறவியிலேயிருந்தே ரெண்டு கண்ணும் தெரியாது. இன்னைக்கு தான் ஆபரஷேன் முடிஞ்சு பார்வையோடு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டுருக்கேன்!'

'ஒரு நிமிடம் யோசிச்சிருந்தா'... நாம நம் வாழ்வின் எவ்வளவோ தர்மசங்கடங்களைத் தவிர்க்கலாம்.

நம்மள யோசிக்க விடாம தடுக்குறது நம்மோட 'அவசரம்'. 'எல்லாமே உடனே' என்ற இன்ஸ்டன்ட் மனநிலை நம்மை யோசிக்க விடுவதில்லை. எதற்காக இவ்வளவு அவசரம்? எஸ். ராமகிருஷ்ணனின் வார்த்கைளில் சொல்ல வேண்டுமென்றால், 'கரும்பைச் சுவைப்பது போல கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துச் சுவைக்கவேண்டிய வாழ்க்கையை, லேகியம் விழுங்குவது போல நாவில் படாமலே விழுங்கிக்கொண்டிருக்கிறோமே, ஏன்?'

Thursday, June 20, 2013

என்ன எழுதன்னு தெரியல!



கல்வி ஆண்டின் இறுதி நாள்.


கீ கொடுத்த பொம்மை மாதிரி ஓடிக்கிட்டே இருந்தோம்.

இப்போ என்ன செய்றதுன்னு தெரியல.


ஒரு ஆண்டு...வெற்றியா? தோல்வியா?

சந்தித்தது என்ன? சாதித்தது என்ன?

எங்கே போறேன்?

ஒன்னுமே புரியல.

மனசு ரொம்ப வெறுமையா இருக்கு.

வெளிநாட்டு வாழ்க்கை...

கேட்வாக்கில் நடந்து வரும் மாடல் பெண்ணின்

தோளில் தொங்கும் கைப்பை போல...

வெளியே பளபளன்னு மின்னும்...

உள்ளே வெறும் பேப்பர்தான் இருக்கும்...

நாளைக்குப் பார்க்கலாம்!


Tuesday, June 18, 2013

'ஆட் மேக்கிங்' முதல் 'ஆடு மேய்க்கிங்' வரை


சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவினர் ஒருவரிடம் இன்று ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன். 'என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டபோது, 'ஆட் மேக்கிங்' என்று பதில் சொன்னாள். 'ஆட் மேக்கிங்' என்றால் 'ஆடு மேய்க்கிங்கா' என்று கேட்டேன். 'ஆடு' அல்ல 'ஆட்' என்று விளக்கம் தந்தாள்.

'ஆட்' 'ஆடு' - இந்த இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்று யோசித்துக்கொண்டே இன்றைய மதிய செய்தி கேட்பதற்காக டிவியைப் போட்டேன். நேற்றைய தினம் போப் பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய ஒரு பிரசங்கத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர் சேனல்காரர்கள். இயேசு சொன்ன 'காணாமற்போன ஆடு' எடுத்துக்காட்டைப் பற்றி போப் இவ்வாறு போதிக்கின்றார்: 'இயேசு சொன்ன எடுத்துக்காட்டில் வருகின்ற ஆடு மேய்ப்பவர் தொலைந்து போன ஒரு ஆட்டைத் தேடுவதற்காக இருக்கின்ற 99 ஆடுகளைவிட்டுப் புறப்படுகின்றார். ஆனால் இன்று திருச்சபைக்குள் இருப்பது ஒரு ஆடு மட்டும்தான். 99 ஆடுகள் தொலைந்து போய்விட்டன. நாம் எப்படி தேடிக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டுவரப்போகிறோம்?' தொடர்ந்து இன்றைய தினத்தில் உள்ள குருக்களின் பணியாக அவர் சொல்வது: 'இன்று குருக்களாகிய, இறைவனின் பணியாளர்களாகிய நாம் ஆடு மேய்க்கும் ஆயனாக இருப்பதற்குப் பதிலாக ஆடுகளுக்கு முடி கத்திரிக்கும் பணியாளர்களாகவே இருக்கிறோம். காணாமற்போன ஆடுகளைத் தேடுவதற்குப் பதிலாக, இருக்கின்ற ஆட்டை முடிவெட்டி அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் (இருக்கின்ற ஆட்டை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் பொருள் மாறிவிடும்!).

மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே 'சமயம்' இறங்குமுகத்தில் இருக்கின்றது. இது கீழை நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக வழிந்தோடிய கோவில்கள் இன்று கேட்பாரற்றுக் கிடக்கின்றன. கோவில்கள் வணிகக் கூடங்களாகவும், கேளிக்கை விடுதிகளாகவும், பொது வளாகங்களாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 'கடவுள் தேவையில்லையா?' அல்லது 'மதம் தேவையில்லையா?' என்ற எண்ணத் தேடல்களும் அதிகமாகவே உள்ளன. 'எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கின்றது', ஆனால் 'மதத்தில் நம்பிக்கை இல்லை' என்று சொல்பவர்கள் இதை ஒரு நாகரீக அடையாளமாகவே பார்க்கின்றனர்.

மதங்கள் விரித்த கட்டமைப்புப் போர்வைகள் மக்களை மூச்சு விடாமல் செய்து விட்டன. 'இது குற்றம், அது குற்றம், நின்றால் குற்றம், செய்தால் குற்றம், செய்யாவிட்டால் குற்றம்' என அனைவரையும் குற்ற உணர்வில் ஆழ்த்திவிட்டதும் மதம்தான். 'கடந்த' கடவுளை எந்தக் கட்டமைப்பும் தன் கட்டுக்குள் அடக்கிவிட முடியாது. கடவுளின் பெயரால், கடவுள் நம்பிக்கை என்ற கட்டமைப்பின் பெயரால் நம் மனித வரலாறு சிந்திய கண்ணீரும், இரத்தமும் நாம் அனைவரும் அறிந்ததே.

பூமியைப் போலவே வாழத் தகுதியுள்ள ஒரு கோளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம் விஞ்ஞானிகள். அங்கே சென்று குடியிருக்கும் மனித இனம் தன்னோடு கடவுளையும் கூட்டிச் செல்லுமா? எந்தக் கடவுளைக் கூட்டிச் செல்லும்? அல்லது அந்தக் கோளத்திற்கும் கடவுளர்கள் அவதாரம் எடுத்து வருவார்களா? அந்தக் கோளத்தில் வாழ்பவர்கள் இறக்கும் போது மோட்சத்திற்குப் போவார்களா? நரகத்திற்குப் போவார்களா? ஏழுமுறை மறுபிறப்பு எடுப்பார்களா? கடவுள் மனித குலத்தின் வரமா? சாபமா?

மற்றொரு பக்கம், நாத்திகம் பேசும் மனிதர்கள் ஆத்திகம் பேசும் மனிதர்களைச் சாடுவதிலேயே தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனரே தவிர, ஆக்கமாக எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

மதம் ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாக அல்லாடுகின்றது. ஓட்டைகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன. 'எல்லா ஓட்டைகளையும் சரி செய்து விடலாம்' என்கின்றனர் சிலர். 'அதோ கரை தெரிகிறது. சீக்கிரம் போய்விடுவோம். கவலை வேண்டாம்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சிலர். 'இங்கே வாருங்கள். நாங்கள் காப்பாற்றுகிறோம்' என்ற விளம்பரங்கள் ஒரு பக்கம். 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று கப்பலைவிட்டு வெளியே கடலில் குதிக்கும் ஒருசிலர். 'எங்கே போகிறோம். என்ன நடக்கிறது' எனத் தெரியாமல் பீதியில் அங்கும் இங்கும் ஓடும் எலிகளாக ஒரு கூட்டம். அந்த எலிகளை முடிந்தவரை வேட்டையாடித் தன் வயிறு நிரப்பும் பூனைகள் கூட்டம் ஒரு புறம். கப்பல் மூழ்கிவிடுமா? கப்பல் கரைசேருமா? இன்னொரு கடவுள் வரவேண்டுமா?

போப் பிரான்சிஸ் சொல்லும் 'ஆடு மேய்க்கும் பணியாளர்களில்' நானும் ஒருவன்தான். என் பணியும் 'முடி கத்திரிக்கும் பணியாகவே' சுருங்கிப் போய்விட்டது. காணாமற்போன 99 ஆடுகளை நான் எப்படித் தேடுவேன்? எப்படிக் கண்டுபிடிப்பேன்? எப்படி மீண்டும் கொட்டில் சேர்ப்பேன்?

ஏதாவது 'ஆட் மேக்கிங்' பண்ணியாவது இந்த 'ஆடு மேய்க்கிங்கை' பண்ணிவிடலாம்!

'தீயா வேல செய்யனும் குமாரு!'

Monday, June 17, 2013

கனவு சுமை



ஒரு ஊர்ல ஒரு அண்ணனும், தம்பியும் இருந்தாங்க. இவங்களோட வீடு 80 ஆவது மாடியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது. ஒருநாள் மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து இரண்டு பேரும் வீட்டிற்கு வந்தாங்க. லிப்ட் வழியா மாடிக்குப் போகலாமென்று பார்த்து லிப்ட் அருகில் செல்கின்றார்கள். அங்கே ஒரு போர்ட் 'லிப்ட் பழுது. தயவு செய்து படிக்கட்டுக்களை உபயோகிக்கவும்.' முனங்கிக் கொண்டே படிகளில் இருவரும் ஏறத் தொடங்குகின்றனர். 20ஆவது மாடிக்கு வந்தவுடன் அவர்கள் சுமந்த வந்த புத்தகப் பைகள் கனமாக இருந்ததால் அதை இறக்கி அங்கேயே வைத்தனர். இன்னும் 60 மாடிகள் ஏற வேண்டுமே. இப்போதே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது. 40 வது மாடிவரை இரண்டுபேருக்குள்ளும் போட்டி – யார் வேகமாக ஏறுகிறார்கள் என்று. 40 வது மாடிக்கு வந்தவுடன் போட்டி சண்டையாகவும், முனுமுனுப்பாகவும் மாறுகிறது. 'இந்த லிப்டே இப்படித்தான், அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடும். இந்தக் குடியிருப்பில் இருக்க வேண்டாம் என்றால் யார் நம்ம பேச்ச கேட்கிறா' என்ற சலசலப்புடன் நடக்க 60வது மாடியும் வந்து விடுகிறது. 80வது மாடிவரை இரண்டுபேருக்குள்ளும் மௌனம். 80வது மாடியும் வந்தாயிற்று. கதவிற்கு முன் நின்றுகொண்டு யார் கதவைத் திறப்பார் என்று ஒருவர் மற்றவரை பார்க்கின்றனர். இரண்டு பேரிடமும் சாவி இல்லை. சாவியை 20வது மாடியில் தாங்கள் 'சுமை' என்று விட்ட ஸ்கூல் பேக்கில் வைத்திருந்தனர். 


80 வயது வரை வாழ்கின்ற நமது வாழ்க்கையும் இப்படித்தான். நமது கனவுகள், எண்ணங்களையெல்லாம் 20வது வயதிலேயே விட்டுவிட்டு, சலனங்கள், சண்டைகள் என்று 60வரை கடந்து யாரிடமும் பேச்சு கொடுக்காமல், நாம், நமது என்ற குறுகிய வட்டத்திற்குள் முடிந்துவிடுகிறது. பின்னால் திரும்பி வரவும் முடியாமல், வீட்டிற்குள் நுழையவும் முடியாமல் - அந்தோ பரிதாபம். 

Sunday, June 16, 2013

எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!


ஒரு குழந்தையின் திருமுழுக்கு விழாவிற்காக செசானோ என்ற மலைக்கிராமத்திற்குச் சென்றிருந்தேன். நகரத்தின் நெருக்குமான அப்பார்ட்மென்ட்களையே பார்த்துவிட்டு மலைச்சரிவுகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகளைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது.

மதிய உணவிற்காக 'கொல்லோ தோர்ட்டோ' என்ற உணவு விடுதிக்குச் சென்றோம். உணவு விடுதியும் ஒரு கிராமப்புற அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. முற்றிலும் மரப்பலகைகளால் வடிவமைக்கப்பட்டு இரண்டு மலைகளுக்கிடையே அந்தரத்தில் தொங்குவதுபோல மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

விடுதிக்கு வருபவர்களை, குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்த கழுதைகளை வைத்திருந்தனர். கழுதை என்றால் துணி துவைப்பவர்கள் பயன்படுத்துவது என்ற கிராமத்தின் எண்ணத்தில் வளர்ந்த எனக்கு கழுதையைக் கழுதையாகப் பார்க்கும் முதல் வாய்ப்பு இதுதான். நாம் பிராணிகள் வளர்ப்பதே அவற்றால் பயன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே: 'நாய் வளர்த்தால் அந்நியர்களின் மேல் பாய வேண்டும் அல்லது குரைக்கவாவது வேண்டும். கிளி வளர்த்தால் பேச வேண்டும். கோழி வளர்த்தால் முட்டையிட வேண்டும். ஆடு வளர்த்தால் வெட்டி விருந்து வைக்க வேண்டும்.' இந்தக் கழுதைகளைச் சுற்றி ஒரே குழந்தைகள் பட்டாளம்தான். குழந்தைகள் கழுதைகளுக்குக் கொடுப்பதற்காக பக்கத்தில் புற்களை வைத்திருந்தார்கள்.

எங்களோடு வந்திருந்த ஒரு குழந்தையின் பெயர் யான். வயது ஒன்றரை இருக்கும். தானும் கழுதைக்கு புல் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்து அவனது அப்பாவை அழைத்துச் சென்றான். நானும் உடன் சென்றேன். மொத்தம் ஆறு கழுதைகள். ஐந்து கழுதைகள் சாலையோரத்திலும், ஒரு கழுதை மட்டும் சற்றுப் பள்ளமான இடத்திலும் மேய்ந்து கொண்டிருந்தது. யானுக்கு தூரத்தில் இருக்கும் கழுதைக்கு புல் கொடுக்க ஆசை. 'அங்கே போ!' என்று அப்பாவை விரட்டுகிறான். அப்பாவிற்கு போக மனமில்லை. மனமில்லையென்பது மட்டுமல்ல. அங்கே இறங்கிச் செல்வது சற்று ஆபத்தும் கூட. கொளுத்தும் வெயில். கிள்ளும் பசி. கோபத்தில் யானிடம் சொல்கின்றார்: 'எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!'

இந்த வார்த்தைகளை இத்தாலிய மொழியில் கேட்டவுடன் என் தாத்தா தான் நினைவிற்கு வந்தார். எங்கள் கிராமத்தில் அவர் பலசரக்கு கடை வைத்திருந்தார். நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது என் அம்மாவுடன் தினமும் அங்கே செல்வது வழக்கம். எல்லாம் வாங்கி முடித்து கால் ரூபாய், அரை ரூபாய் மிஞ்சும் போது, 'உனக்கு ஏதாவது வாங்கிக்கொள்' என்பாள் என் அம்மா. நானும் 'இது வேண்டும், அது வேண்டும்' எனக் கையை நீட்டுவேன். என் தாத்தாவின் கைக்கு எட்டாத ஒன்றை நான் கேட்டு விட்டால் எழுந்து எடுத்துக் கொடுப்பதற்குப்பதில் அருகில் இருக்கும் தின்பண்டத்தை எடுத்துக் கொடுத்து, 'சும்மா இந்த ..யித்தத்தான் தின்னு! எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!' என்பார். 

நான் பதினொன்றாம் வகுப்பு அட்மிசன் போட்டுவிட்டு 'பர்ஸட் குரூப்' கிடைக்கல என்று புலம்பிக் கொண்டிருந்தபோது, 'சும்மா இருக்குறத படி! எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!' என்றார். 'நான் ஃபாதர்க்குப் படிக்கப் பிடிக்கல, கஷ்டமாக இருக்கு. வேறு ஏதாவது படித்து வேலைக்குப் போறேன்' என்று புலம்பியபோதும் 'எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!' என்றார்.

ஐந்து மாதங்களுக்கு முன் நண்பர் பிரபுவும் தன் ஸ்கைப் ஸ்டேஸில், 'ஆல் டாங்கிஸ் ஆர் சேம்' எனப் போட்டிருந்தார். மொழிகளைக் கடந்து பயன்படுத்தப்படும் 'கழுதைச் சொல்லாடல்' இன்று என்னைச் சிந்திக்க வைக்கிறது.

நம் குழந்தை யான் சற்று பெரியவனாயிருந்தால், 'அது எப்படி டாடி எல்லாக் கழுதையும் ஒன்னாகும். அது அங்க இருக்கு. இது இங்க இருக்கு எனச் சொல்லியிருப்பான்.'

எல்லாக் கழுதையும் ஒன்னா!

இதில் ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவம் இருப்பாதவே எனக்குத் தோன்றுகின்றது. இந்தியத் தரிசனத்தில் (மெய்யியல்) உள்ள பெரும்பிரிவு 'அத்வைதம்' (பேதமற்ற நிலை!). பிரிவுகளைக் கடந்து சிந்திக்கும் மனம்தான் 'அத்வைதம்' அடைய முடியும். கடலின் நீர்த்துளிகளைப் பார்த்து 'எவ்வளவு தண்ணீர்த் துளிகள்' என்று வியந்தவர்களிடம் 'மொத்தக் கடலும் ஒரே நீர்த்துளிதான்' என்று சொன்னவர் கலீல் கிப்ரான். 

நம் வாழ்வின் பிரச்சினைகளுக்குக் காரணமே பேதம்தானே: இது-அது, மேல்-கீழ், நல்லது-கெட்டது, ஆண்-பெண், பகல்-இரவு, வெளிச்சம்-இருட்டு, எனது-உனது என்று பிரித்துப் பார்க்கும் மனம், ஒப்பீடு என்ற அடுத்த கட்டத்திற்குப் பறக்கின்றது. ஒப்பீடு செய்யும் மனம் பொறாமைப்படுகின்றது, போட்டி போடுகின்றது, தாழ்வு மனப்பான்மை கொள்கின்றது.

ஒரு சினிமா தியேட்டரில் ஒரு புரொஜக்டருக்குப் பதில் 10 புரொஜக்டரில் 10 படங்களைக் காட்டினால் என்ன ஒரு குழப்பம் ஒருக்கும்? பத்திலிருந்து ஒன்றிற்கு, ஒன்றிலிருந்து இல்லாமைக்கு எனக் கடந்து செல்வதே நம் ஆன்மீகப்பயணத்தின் இலக்காகும்.

பயணம் முடித்துவிட்டு மெட்ரோ எடுத்து வீடு திரும்பினேன். ஒரு கையில் அடுத்த பரீட்சைக்குப் படிக்க வேண்டிய புத்தகம். மறு கையில் குறிப்பெடுக்கப் பென்சில். 'மன்சோனி' என்ற நிறுத்தத்தில் ஸ்லீவ்லெசும், அரை டிராயருமாக ஒரு இளநங்கை ஏறினாள். இருக்கின்ற வெற்று இருக்கைகளையெல்லாம் ஏளனமாகப் பார்த்துவிட்டு பெட்டியின் நடுவில் இருக்கும் கம்பியில் போய் சாய்ந்து கொண்டு, 'எல்லோரும் என்னையே பாருங்க!' என்பது போல நின்றாள். புத்தகத்தில் பதிந்திருந்த என் கண்களும் அவளை நோக்கியே சென்றன!

அப்போ யாரோ தூரத்தில ஃபோன்ல போடுற சத்தம் காதில் விழுந்தது:

'எல்லாக் கழுதையும் ஒன்னுதான்!'

கண்ணீர் பொம்மை

ஒருமுறை ஒரு கணவர் தன் மனைவியின் பிறந்தநாளன்று அவருக்கு அழகியதொரு காரை பரிசளித்தார். முதலில் கார் சாவிகளைக் கொடுத்தார். பின் அவரது மனைவியின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காரின் முக்கிய ஆவணங்களை ஒரு ஃபைலில் வைத்துக் கொடுத்தார். கொடுத்துவிட்டு அன்பாக ஒரு புன்சிரிப்பையும் கொடுத்தார். அன்றைய தினம் குழந்தைகளை தான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு புதிய காரை ஓட்டிப் பார்த்து வருமாறு மனைவியை அனுப்புகின்றார். மனைவியும் நன்றி சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்படுகின்றார். ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் சென்றதுதான் தாமதம் காரை வேகமாக சாலையின் குறுக்குச் சுவற்றில் போய் இடிக்கின்றார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் காரின் முன்பகுதி மிகவும் பாதிக்கபட்டுவிடுகிறது. 'கணவரிடம் என்ன சொல்வேன்?

'நான் சொல்வதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?' என்று மனதுக்குள் குற்ற உணர்வுடன் புலம்புகிறார். விபத்து நடந்த இடத்திற்கு போலீஸ் உடனடியாக வந்துவிட்டார்கள். 'உங்க டிரைவிங் லைசன்ஸ் ப்ளீஸ்!' கேட்கிறார்கள் போலீஸார். நடுங்கிய கைகளுடன் தன் கணவர் கொடுத்த ஃபைலைத் திறக்கின்றார். கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது. ஃபைலைத் திறந்தவுடன் உள்ளே கணவரின் கையெழுத்துடன் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது: 'அன்பே, ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. நான் அன்பு செய்வது உன்னை. காரை அல்ல. அன்புடன், ஹென்றி.' (நன்றி: T.T. Ranga Rajan, Unposted Letter, Frozen Thoughts:Chennai, 2009)

மனிதர்களை அன்பு செய்யவும் பொருள்களை பயன்படுத்தவும் வேண்டும். பொருள்களை அன்பு செய்து மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று கற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்.

காரில் ஏற்படுகின்ற ஒரு கோடு நமது இரத்த அழுத்தத்தை உயர்த்துகிற அளவிற்கு பல நேரங்களில் நமது மனத்தில் இருக்கின்ற கோட்டை நாம் கண்டுகொள்வதில்லை. ஒருவர் ஒருநாள் தான் வைத்திருந்த 18 ஆண்டுகள் பழமையான கண்ணாடி தாஜ்மஹால் ஒன்றை வேண்டுமென்று கீழே போட்டு உடைக்கின்றார். அதைப் பார்த்தவர்கள், 'ஐயோ, ஏன் இப்படிச் செய்றீங்க?' என்று கேட்டபோது அவர் சொல்கின்றார்: '18 வருடங்களாக கீழே விழுந்துவிடுமோ, உடைந்துவிடுமோ என இது எனக்கு பலமுறை டென்ஷன் தந்தது. நான் இன்றுதான் முடிவெடுத்தேன், என்னை ஆளப்பிறந்து அல்ல இது, நான்தான் இதை ஆளப்பிறந்தவன். உடைத்தேன். நிம்மதியாயிருக்கின்றேன்'. மற்றொரு நபர் தான் புதிதாக வாங்கிய மெர்சிடெஸ் பென்ஸ் கார் விபத்தில் ஒன்றுமில்லாமல் ஆனபோது தன் நண்பர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்தாராம். விருந்திற்கு முன் அவர் சொன்னது: 'கார் முழுவதும் உடைந்து போனாலும் உள்ளேயிருந்த எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் நன்றாக இருப்பதால் என்னால் இன்னொரு கார் வாங்க முடியும். ஆனால் கார் நன்றாக இருந்து நான் இல்லாமல் போயிருந்தால் எப்படியிருக்கும்?'

நமது வாழ்க்கையை நாம் சிறுவயதில் தொடங்கும்போது வெறும் 60 ரூபாய் பொம்மை காரோடு தொடங்கினோம். அது உடைந்தபோது நாம் அழுதோம். அதிலிருந்து கொஞ்சம் வளர்ந்து 2000 ரூபாய்க்கு கார் ரிமோட்-கண்ட்ரோல் கார் வாங்கினோம். அது உடைந்தபோதும் நாம் அழுதோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின் நமது பிறந்தநாளுக்கு 20000 ரூபாய் மதிப்புள்ள பேட்டரியில் இயங்குகின்ற கார் நமக்கு பரிசாகக் கிடைத்தது. அது ஒருநாள் பழுதானபோது நாம் ரொம்பவே நொந்து போனோம். அதற்கு பிற்பாடு 4 இலட்சம், 22 இலட்சம், 86 இலட்சம் என்று கார் வந்தாலும், அதில் ஒரு கிறுக்கல் ஏற்பட்டாலோ, பெயின்ட் உரிந்தாலோ, லைட் உடைந்தாலோ, கண்ணாடியில் கறைபட்டாலோ, உள்புறம் ஏதோ சிந்தினாலோ என்று நமது கவலைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் இருந்தது. நமது பொம்மையின் மதிப்பு வளர்ந்தது. ஆனால், நாம் வளரவில்லை. நாம் எதற்காக அழுதோமோ, அது மாறிவிட்டது. ஆனால் நமது அழுகையும், கண்ணீரும் மாறவில்லை. நமது அழுகைக்கு நாம் கோபம், ஏமாற்றம், விரக்தி, அழுத்தம், கவலை என மேன்மையான பெயர்களையும் சூட்டிக் கொண்டோம்.

பொம்மைகள் நமது பொழுதுபோக்கிற்கானவை. நாம் வைத்திருப்பதன் ஒரே நோக்கம்: அவைகளைப் பயன்படுத்த. நாம் வசிக்கின்ற நமது கனவு இல்லம் முதல் நாம் வைத்திருக்கின்ற செல்ஃபோன் வரை, நாம் அணிகின்ற ஆடைகள் முதல் கையில் கட்டுகின்ற டைட்டன் வரை அனைத்தும் இருப்பவை நமது வாழ்வை சுகமாக்குவதற்காக. சுமையாக்குவதற்காக அல்ல. நாம் வைத்திருக்கின்ற அனைத்தையும் விட நாம் மேலானவர்கள். நாம் உரிமையாக்கி வைத்துள்ள அனைத்தையும் விட நாம் அதிக மதிப்பு பெற்றவர்கள். நமது வாழ்க்கைக்குள் வருபவைகளைவிட நாம் அதிக முக்கியத்துவம் பெற்றவர்கள்.

பொம்மைகள் பொம்மைகள்தாம். பொம்மைகளை வாங்கி பயன்படுத்தலாம். இன்னும் அதிக பொம்மைகள் வாங்கினாலும் அவைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். அவைகள் நமது பயன்பாட்டிற்கு மட்டும்தான் உள்ளன. அவை நமது சுகத்திற்காக மட்டும்தான். இனியும் நமது விலைமதிப்பற்ற கண்ணீர்த் துளிகளை அவைகளை வீணாக்க வேண்டாம், அவை எவ்வளவு பெரியவையானாலும்!

Friday, June 14, 2013

எப்போ முடியும் எக்ஸாம்?

அஞ்சாம் வகுப்பு படிச்சப்போ எங்க ஊர் ஆரம்பப்பள்ளி வாத்தியார்
1991 மார்ச் மாசம் சொன்னார்
இந்த “முழுஆண்டுத் தோ்வு“ மிக முக்கியமானது.
இதுல படிச்சாதான் நீங்க மேல் வகுப்பு போகமுடியும்.
முக்கி முக்கி படிச்சோம்.
ஆரம்பப் பள்ளி முடிச்சோம்.

அடுத்த வருஷம் பொிய ஸ்கூல்.
எட்டாம் வகுப்பு வாத்தியாரும் அதையே சொன்னார்.
படிச்சோம். பாஸ் ஆனோம்.

பத்தாம் வகுப்பு வந்தோம்.
இந்த மார்க்தான் ரொம்ப முக்கியம்.
நல்லா படிக்கனும்.
படிச்சோம். நல்லா படிச்சோம்னு சொல்ல முடியாது!
பாஸ் ஆனோம்.

பன்னிரண்டாம் வகுப்பு.
பத்தாம் வரை தமிழ் வழிக்கல்வி.
பதினொன்றும் பன்னிரெண்டும் ஆங்கில வழி.
விழி பிதுங்கியது.
கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிாி இருந்துச்சு.


(a+b)2 = a2+b2+2ab
பாடம் சொன்னார் கணக்கு வாத்தியார்.
இந்தக் கணக்கை என் வாழ்க்கையில இதுவரைக்கும்
நான் பயன்படுத்தியதே இல்ல.

பியூரெட், பிப்பெட் உடைத்து
பொட்டாசியம் பொ்மாங்கனேட் நார்மாலிட்டி பார்த்தோம்.
பிங்க் கலரா வந்தா நிறுத்திடனும்.
சொன்னார் கெமிஸ்டிாி வாத்தியார்.
பக்கத்து ஸ்கூல் பிள்ளைங்க யூனிபார்ம் பார்க்கும்போதெல்லாம்
பொட்டாசியம் பொ்மாங்கனேட் ஞாபகமாகவே இருக்கும்.

ஃபிசிக்ஸ் லேப்ல பிராக்டிகல் பண்ண
எனக்கு ஹைட் பத்தலன்னு சொல்லி
வெறும் ரெக்கார்ட் நோட் மட்டும் எழுதச் சொன்னாங்க.

தவளை அறுத்து விலங்கியல் பாிச்சை.
செம்பருத்தி அறுத்து தாவரவியல் பாிட்சை.
எல்லாம் முடிந்தா இனி பாிட்சையே இல்லனு பார்த்தா.

சாமியார் படிப்புக்கு குருத்துவக் கல்லுாாில சேர
இங்கிலீஸ் எக்ஸாம்.
தமிழில புத்தகத்தை பாா்த்துதான நம்ம சாமியாரு வாசிக்கிறாரு
அப்புறம் எதுக்கு இங்கிலீஸ் - கேட்டாங்க அம்மா.

அங்க எக்ஸாம் முடிஞ்சுடும்னு பார்த்தா
அவங்க ரெண்டு வருஷம் எல்லா எக்ஸாமும் வச்சுட்டு
ஒரு டிரெயின்ல ஏற்றி ஃபிலாசபி - தியாலஜி படிக்க புனே அனுப்புனாங்க.
சாி.
அங்க நம்மள படிக்கச் சொல்ல மாட்டாங்கன்னு நம்பி ஏறி உட்கார்ந்தா...
அங்க ஒரு ஏழு வருசம். அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு பாிட்சை வச்சாங்க.

எல்லாத்தையும் முடிச்சு சாமியாா் ஆக்கிடுவாங்கன்னு பார்த்தா
நீங்க படிச்சதெல்லாம் செல்லாது.
செக்குலர் சப்ஜெக்ட் ஏதாவது படிக்கனும்னாங்க.

எல்லாரும் இங்கிலீஷ் படிக்கச் சொல்ல
யார் பேச்சையும் கேக்காம சோசியாலஜி படிச்சேன்.
பின் எம்பி எம்பி எம்.பி.ஏ.

எல்லாம் முடிச்சாலும் இன்னும் ஏதாவது படிக்கலாமே?
படிக்கலாம்...ஆனால் பாிச்சையெல்லாம் எழுத முடியாதே!

ஃபாாின் போனா பாிட்சை கிடையாது.
அங்கே போய் படி.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
பாிட்சை முடியவில்லை.

இத யாா்ட்டயவாத புலம்பலாம்னு போன் பண்ணினா
போன்ல சொல்றாங்க
“ஃபாதர் நீங்க ரொம்ப ஜாலியா இருக்கீங்க!”

கககபோ!

என்று சொல்லிவிட்டுப் பாடப்புத்தகம் தேடினேன்!


whence comest thou? whither goest thou?

In the first year of the Licentiate in Biblicum we study the Book of Judges in its original language Hebrew. One of the common dialogues among the characters when they meet is: 'where do you come from? where do you go?' These expressions are very precise in Hebrew. I thought these expressions to be normal exchange of greetings. But later I learnt these expressions are more than mere exchange of greetings. They are loaded with a deeper meaning.

'Where do you come from' means one's past. It means one's origin. It means one's rootedness. 'Where do you go to' means one's future. It means one's destination. It means one's openness. If these two questions are clear one's journey of life will be clear. 

The Israel often forgot these two questions. They forgot where they came from and how they were miraculously chosen as a nation and redeemed by the house of slavery by the Lord. So they retreated and began to serve other gods, the so-called Baals and their counterparts. They also forgot where they were heading to - the Promised Land flowing with milk and honey. They were distracted by the foreign cult and culture. 

Therefore the Lord had to remind them constantly with these two questions. 

In the fiction The Alice in Wonderland by Charles Lutwidge Dodgson there is a beautiful scene. One evening Alice takes a long walk. As she walks she arrives at a juncture of four roads. Frustrated and anxious she stops there. Lo, there comes a cat. The cat asks, 'Hey Alice! what are you doing here?' Alice replies, 'I don't know which road to take. Look there are four roads!' The cat asks again, 'where do you want to go?' To which Alice says, 'I don't know'. 'Then you may take any road. It will not make any difference!', says and walks off the cat. 




Thursday, June 13, 2013

the winner stands alone


Today I finished reading the fiction 'The Winner Stands Alone' by Paulo Coelho. When I read the cover page I understood the title as this: Anybody who wishes to be winner must have the courage to stand alone. Or it is 'standing apart' and 'not being part of the ordinary' makes one a winner. But when I reached the last page the meaning becomes different. What the author means is 'the winner is left alone' or 'the winner is lonely'.


People think a winner is someone who is loved by everyone. But as you climb the steps of fame, there's always another side to that. People might be fascinated by you, but on the other hand, those who haven't been as successful are bound to view you with a certain bitterness.

The Winner Stands Alone is not about paying a terrible price for your dreams. On the contrary, it is about the gigantic price we pay for allowing ourselves to chase illusions, instead of our true dreams. The fiction is a feather in the cap of my ever favourite author. Hats off!

Some quotes:

“Success is both an addiction and an enslavement...” 

“If you believe in victory, then victory will believe in you.” 

“Life sometimes separates people so that they can realize how much they mean to each other.” 

“Even if you slept with every man on Earth, my love will still survive.” 

“We are all a part of the divine spark. All have a purpose in creation and that purpose is called Love. That love, however, shouldn't be concentrated in just one person, it should be scattered throughout the world, waiting to be discovered. Wake up that love. What is gone cannot return. What is about to arrive needs to be recognized.” 

“Life sometimes separates people so that they can realize how much they mean to each other.” 

“If you love someone, you must be prepared to set them free.” 

“People are never satisfied. If they have a little, they want more. If they have a lot, they want still more. Once they have more, they wish they could be happy with little, but are incapable of making the slightest effort in that direction.” 

“Talent is a universal gift, but it takes a lot of courage to use it. Don't be afraid to be the best.” 

“Whenever someone dies, a part of the universe dies too. Everything a person felt, experience and saw dies with them, like tears in the rain.” 






Wednesday, June 12, 2013

a letter to the canannite mother



Dear Mom,

How are you? How is your possessed daughter?

You may not know me. But I know you very well. I was one of the bystanders who saw you last week when you came to plead for your infirmed daughter to the Jewish rabbi, in your words, ‘Son of David’.

How shall I introduce you? I am anyone who you meet in the road. One who gets into the metro. One who buys ticket in a queue. One who goes to the departmental store. One who is a next-door-neighbor.

Brave you are! If at all somebody were to introduce you to me they would say, ‘a woman, a gentile woman, a mother of a possessed daughter’. You were subjected to a threefold alienation. In a male-dominated society you were a woman. In the elect society of YHWH you were a gentile. In the blessed group of God’s people you were a mother of a possessed daughter. But there awaited another label: ‘the mother of a baby-dog!’ But what strikes me is that you went beyond the labels. You knew who you were. You did not care about labels. But, mom, I am attached to my labels. I am attached to my business card and identity card. I go around with my labels. I identify with my labels. If someone says something against me I create my own label out of it and feel sad for it. My labels give me privileges. My labels pull me down. I am carried away by ‘what others say about me’. If a word of appreciation comes from others I feel on cloud nine. If there is an air of indifference or critique I am easily put down. But the first thing you have taught me is ‘to be a mirror’. A mirror just reflects. It does not take anything it. It does not interpret. You just reflect and go your way. Hats off.

I appreciate your courage that carried you to meet the Jewish rabbi in the public. This shows how much you cared for your daughter. You were considered a nuisance. Your noise irritated them. You were mocked at. Made fun of. But you never gave up your plead. You withstood all. Great. When someone extends his or her love to me I reject it. I get irritated with them. When someone asks for a favor I sometimes give some excuses and quit the place. I too have called others as ‘nuisance’ and ‘noise’. I understand how much I might have hurt them. On the other hand, when I meet with such remarks, I give up. In my journey of priesthood when the sailing is not smooth I think of quitting. I appreciate your perseverance.

You won over the racist bias. Those who stood there with the rabbi may say that he was never a racist, his remark was to test your faith, etc. But I am convinced it was an unexpected, crude remark from the rabbi. But your response was an existential shock to him and the crowd. When you were treated a ‘dog’, with the very word you returned. You never wanted to be a victim. You were the master of the situation. When my color, my race, my vocation is treated ‘not up to the mark’, the first response is ‘I feel victimized’. I brood over. I punish myself. But today I have learnt from you never to be a victim of an oppressive structure. You never gave up your faith in the ‘son of David’ and ‘Lord’. But when I am victimized the byproduct is the loss of faith. I ask, ‘lord where are you when this happens to me?’

You came. You asked. You withstood. You won.

Good that I saw you on the road. It was the road not only your daughter’s healing, but my healing as well.

Thanks Mom for this distant sight of you.

You have made my day.

My wishes to your daughter.

Good day,

Sincerely,

Your Son