இன்றைய (12 செப்டம்பர் 2019) முதல் வாசகம் (கொலோ 3:12-17)
அணிகலன்கள்
இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் (காண். லூக் 6:27-38), இறைமக்களாகிய நாம் அணிந்துகொள்ள வேண்டிய அணிகலன்களைப் பட்டியலிடுகிறது.
நம்முடைய முகத்திற்குப் புன்னகையை விட சிறந்த பொன்நகை இல்லை என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று.
இப்படியே நம்முடைய கிறிஸ்தவ வாழ்விற்கென்று சில செலவில்லாத அணிகலன்கள் உள்ளன. அவை யாவை?
பரிவு - என்னைப் போல அடுத்தவரை நினைப்பது
இரக்கம் - என் கண்களைத் தாழ்த்திப் பார்ப்பது
நல்லெண்ணம் - அடுத்தவரைப் பற்றிய நேர்முக எண்ணம்
மனத்தாழ்மை - பிறர் என்னைவிட மதிப்புக்குரியவர் என்று எண்ணுவது
கனிவு - சொல்லில், உணர்வில் இனிமை
பொறுமை - பரபரப்பு இல்லாத மனம்
மன்னிப்பு - கடந்த காலத்தை உடனே மறப்பது
அன்பு - உணர்வு அல்ல செயல்
இவை இருந்தால் என்ன நடக்கும்?
'கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்தும்!'
நம் வாழ்வின் இலக்கு அமைதி ஒன்றே.
அதை அடைய மேற்காணும் அணிகலன்களை நாமும் அணியலாமே!

எளிமையான... ஆனால் மிகவும் காஸ்ட்லியான ஒரு பதிவு.....தந்தை அணிகலன்களைப்பற்றிப் பேசுவதால்.இன்னும் ஒன்று கூடியிருப்பின் இது “ நவரத்தின” செட்டாக மாறியிருக்கும். ஒவ்வொரு அணிகலனுக்கும் தந்தை கொடுத்திருக்கும் விளக்கம் அருமை.எப்பவுமே பரபரப்பான என் மனநிலைக்குக் காரணம் நான் என்னிடமுள்ள ‘ தைராய்டு’ என்று நினைத்திருக்க ‘ இல்லை..இல்லை’ அதற்குக் காரணம் ‘பொறுமைக்குறைவு’ என்கிறது இன்றைய பதிவு. கிறிஸ்து அருளும் அமைதி என் உள்ளத்தை நெறிப்படுத்த இந்த அணிகலன்கள் தேவையெனில் அணிவதில் தடையென்ன? பயமென்ன? யாரும் வந்து வழிபறி செய்ய முடியாத அணிகலன்கள்.அத்தனையும் ஒரே நேரத்தில் அணிய இயலவில்லை எனினும் ஒவ்வொன்றாக அணியலாமே! ஒரு நகைக்கடை சொந்தக்காரரின் மிடுக்கு தெரிகிறது தந்தையின் பதிவில்.வாழ்த்துக்கள்!!!
ReplyDelete