Thursday, August 1, 2019

ஆண்டவரின் மாட்சி

இன்றைய (1 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி

நாம் கடந்த சில வாரங்களாக வாசித்து வந்த விடுதலைப் பயண நூல் இன்று நிறைவுபெறுகிறது.

'ஆண்டவர் கனிவுடன் உங்களைச் சந்திக்க வருவார்' என்ற வார்த்தைகளோடு தொடக்கநூல் நிறைவுபெற்றது.

சீனாய் மலையில் மோசேக்குத் தோன்றி, ஒளிரும் மேகமாய் நகரும் நெருப்புத்தூணாய் இஸ்ரயேல் மக்களோடு வலம் வந்து, சீனாய் மலையில், 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் எம் மக்களாக இருப்பீர்கள்' என்று வாக்களித்த கடவுள், இறுதியில் அவர்களோடு கூடாரம் அடித்துக்கொள்கின்றார்.

கடவுள் இறங்கி வருகின்றார்.
இந்த நிகழ்வு இயேசுவில் நிறைவுபெறுகிறது.

தூரமாய் நின்ற கடவுள் நெருங்கி வருகிறார்.

கடவுளின் பிரசன்னம் அனைத்தையும் நிறைவுபெறச் செய்கிறது. ஏனெனில், உணவு, உடை, உறைவிடம், உறவுகள், சாதனைகள், படிப்பு, வேலை தராத நிறைவை இறைவன் நமக்குத் தருகிறார். அவருடைய திருவுறைவிடத்திற்குள் நுழையும்போதே நாம் அமைதி பெறுகிறோம். இந்த இறைவனைக் காணாத, அனுபவிக்காத இதயங்களுக்கு இறைவனின் பிரசன்னத்தை நம் வழியாக அடையாளப்படுத்துவது நலம்.

இதையே இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில், இதை உணர்ந்தவர்கள், 'புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்' என்கிறார் இயேசு.

எனக்குள் உறையும் இறைவன் எனக்குள் இருப்பவற்றை நல்லவையாக மாற்றி வெளிக்கொணர்கிறார்.

1 comment:

  1. ஆதியில் வாக்களித்த கடவுள் இறுதியில் நம்மோடு கூடாரம் அடித்துக்கொள்கிறார். இதை உணர்பவர்களே வீட்டு உரிமையாளர்களெனில் நாமும் அந்த நிலைக்கு நம்மைத் தகுதியாக்க முன் வருவோம். புதிய, பழையவற்றை வெளிக்கொணர்வது மட்டுமின்றி, இறைவனைக்காணாத,அனுபவிக்காத இதயங்களுக்கு இறைப்பிரசன்னத்தை நம் வழியாக அடையாளப்படுத்துவோம். சீனாய் மலையில் நெருப்புத்தூணாய் மோசேயோடு வலம் வந்த இறைவன் நம் வாழ்விலும் நம் கடவுளாக இருக்க வழிசெய்வோம். சிறிது இடைவெளிக்குப்பின் வந்த அழகான,ஆழமானதொரு பதிவு.தந்தைக்கு வாழ்த்தும்! நன்றியும்!!!

    ReplyDelete