Tuesday, August 13, 2019

சிறுபிள்ளை

இன்றைய (13 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 18:1-5, 10, 12-14)

சிறுபிள்ளை

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' என்ற கேள்வி இயேசுவிடம் முன்வைக்கப்படுகின்றது. நம்பிக்கையின் தந்தை ஆபிரகாமையோ, இஸ்ரயேலின் பிதாமகன் யாக்கோபையோ, விடுதலை நாயகன் மோசேவையே, போராளி யோசுவாவையோ, பேரரசர் தாவீதையோ முன்வைக்காத இயேசு, சிறுகுழந்தையை முன்வைக்கின்றார்.

ஆனால், மேற்காணும் நபர்கள் யாவரும் குழந்தை உள்ளம் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

மோசேயின் குழந்தை உள்ளத்தை இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 31:1-8) பார்க்கிறோம். தான் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், தனக்கு வயதாகிறது என்பதையும், தன்னுடைய இடத்திற்கு இன்னொரு ஆள் வந்துவிட்டார் என்பதையும் எந்தவொரு கிளர்ச்சியோ, முணுமுணுப்போ இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார் மோசே.

இந்த மனநிலை மோசேக்கு எப்படி வந்தது?

எவர் ஒருவர் தன்னுடைய வேலைக்கான கனிகளை எதிர்பாராமல் வேலை செய்கிறாரோ, எவர் ஒருவர் தன்னுடைய அடையாளங்களைக் கடந்து நிற்கிறாரோ, எவர் ஒருவர் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்கிறாரே அவருக்கு மட்டுமே இந்த மனநிலை வரும்.

இதுவே குழந்தை மனநிலை.

இந்த மனநிலையை நாம் பெற்றால் நாமும் விண்ணரசில் பெரியவர்களே!

2 comments:

  1. “எவர் ஒருவர் தன்னுடைய வேலைக்காரன் கனிகளை எதிர்பாராமல் வேலை செய்கிறாரோ,எவர் ஒருவர் தன்னுடைய அடையாளங்களைக் கடந்து நிற்கிறாரோ, எவர் ஒருவர் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்கிறாரோ அவருக்கு மட்டுமே குழந்தை உள்ளம் போன்றதொரு மனநிலை வரும்.”....அருமை! என்னாலும் இதைப்பெற முடியுமெனில் முயற்சி செய்யலாமே எனும் உந்துதலைத் தரும் பதிவு. பதிவின் முன்னுரையில் தந்தை குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நபரின் பெயருக்கும் முன்னால் கொடுக்கப் பட்டுள்ள அடைமொழி அருமை! அதிலும் மோசேயைக்குறித்து நாம் வாசிக்கும் அனைத்துமே மனத்தைப் பிசைகிறது.! இன்றைய முதல் வாசகத்தில் வரும் அத்தனை வரிகளுமே மனத்தில் கலக்கத்தையும்,கண்களில் கசிவையும் வரவழைத்தன.எத்தனை அகவைகளைக் கடந்திடினும் ஒருவருக்கு “ குழந்தை மனநிலை” கொண்டு வாழ்வது சாத்தியமே என உணர்த்தும் ஒரு பதிவிற்காகத் தந்தையை வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete
  2. மன்னிக்கவும்........முதல் வரியின் “ வேலைக்காரன்” எனும் வார்த்தைக்காக. “வேலைக்கான” என்பதே சரியான வார்த்தை.

    ReplyDelete