Tuesday, February 5, 2019

அவரால் செய்ய இயலவில்லை

இன்றைய (6 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 6:1-6)

அவரால் செய்ய இயலவில்லை

இயேசு தன் சொந்த ஊரில் போதிக்கிறார். அவருடைய போதனை அங்கே ஏற்படுத்திய தாக்கத்தை மாற்கு நற்செய்தியாளர் மூன்று வார்த்தைகளில் பதிவு செய்கிறார்:

அ. 'வியப்பில் ஆழ்ந்தனர்'

ஆ. 'தயக்கம் காட்டினர்'

இ. 'நம்பிக்கையின்றி இருந்தனர்'

'வியப்பு' 'தயக்கம்' 'நம்பிக்கையின்மை'

இம்மூன்று உணர்வுகளும், நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவில் வரவும் வாய்ப்பிருக்கின்றது. அவருடைய அரும்பெரும் செயல்கள் நம்மில் முதலில் வியப்பை ஏற்படுத்துகின்றன. பின் சில நாள்கள் கழித்து தயக்கம் காட்டுகிறோம். இறுதியாக, நம்பிக்கையின்மையும் சில நேரங்களில் நம்மைப் பற்றிக்கொள்கிறது.

இதனால்,

'வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை' என்கிறார் மாற்கு.

நம்பிக்கையின்மை கடவுளின் கைகளையே கட்டிவிடுகின்றது

3 comments:

  1. உண்மையை நவின்றீர்...
    என்றும் இறையுறவில் வலுவாய் சங்கமிக்க, உறவுகளுடன் இணைந்து செபிப்போம்.

    ReplyDelete
  2. Ideogram fantastic!
    Sooooper selfie!

    ReplyDelete
  3. பல சமயங்களில் நாம் அனுபவிக்கும் விஷயங்கள் நமக்கு அலாதி உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் வியப்புக்கள் நம் கண்களாலும்,செவிகளாலும்,மனத்தாலும் உணரப்படும்போது மட்டுமே அவை இறைவன் பால் நமக்கு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துகின்றன.இதில் ஒன்று குறைந்திடினும் ,நாளடைவில் நமக்கு ஏற்படும் அலுப்பு நம்மில் தயக்கத்தை ஏற்படுத்தி இறை நம்பிக்கையையும் அழித்து விடுகிறது. இதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.இறை நம்பிக்கை நம்மில் குறையும் போது நாம் ஒரு வெற்று பாத்திரமாகி விடுவதால் அங்கே இறை செயல் நடக்க வழியில்லை எனவும்,நம் நம்பிக்கையின்மை 'அவரின்'கைகளையே கட்டிப்போடுகிறது எனவும் எச்சரிக்கை மணியடிக்கிறார் தந்தை.நம்பிக்கை குன்றியவராய் இராமல்,நம்பிக்கை நிறைந்தவராய் இருக்க இறைத்திருவுளத்திற்கு நம்மையே கையளிப்போம்.
    புகைப்படத்தில் உள்ள அந்தப் பிஞ்சுகளைக் கொத்தாக அள்ளிக் கொஞ்ச வேண்டும் போல் தோன்றுகிறது. தந்தையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete