Wednesday, February 20, 2019

கடிந்துகொண்டார்

இன்றைய (20 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:27-33)

கடிந்துகொண்டார்

ஆங்கிலத்தில் 'டேக்கிங் ஃபார் க்ராண்டட்' என்ற சொலவடை உண்டு. இதற்கு பல பொருள்கள் உண்டு. இவற்றில் ஒன்று, 'இதுல என்ன இருக்கு!' என்று ஒன்றை எடுத்துக் கையாளுவது. இந்த மனப்பான்மை உருவாக வேண்டும் என்றால் இருவருக்கு இடையே உள்ள உறவு அவசியம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என முதலில் கேட்கின்றார். தொடர்ந்து, 'நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?' எனக் கேட்கிறார்.

'நீர் மெசியா' என பேதுரு விடை சொல்லி 'வெரி குட்' வாங்கிக்கொள்கிறார்.

இயேசுவிடம் 'வெரி குட்' வாங்கிவிட்டதால், இனி அவரிடம் தான் என்னவும் சொல்லலாம் என நினைத்து, 'அவர் இயேசுவை டேக் ஃபார் கிராண்டட்' செய்கிறார்.

இயேசு தன்னுடைய பாடுகள் மற்றும் துன்பம் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் பேதுரு, இயேசுவைத் தனியே அழைத்துச் சென்று அவரைக் கடிந்துகொள்ள ஆரம்பிக்கின்றார். இயேசு வெளிப்படையாகச் சொல்கின்றார். ஆனால் பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொள்கின்றார்.

'இப்படியெல்லாம் பேசாதப்பா. உனக்கு எதுவும் நடக்காது. நாங்கள்லாம் இருக்கோம்ல' என்று ஒரு நல்லெண்ணத்தில்தான் பேதுரு இயேசுவுக்கு அறிவுரை கொடுத்திருப்பார்.

ஆனால், இப்படிச் சொன்னதன் வழியாக பேதுரு தன் ப்ரைவஸி வட்டத்திற்குள் வந்துவிட்டதாக எண்ணி பேதுருவைக் கடிந்து கொள்கின்றார். சற்று நேரத்திற்கு முன், 'ஆஹா ஓஹோ' என்று பாராட்டியவர், 'சாத்தானே! அப்பாலே போ!' என்கிறார்.

இங்கே பேதுரு இயேசுவிடம் நிறைய சுதந்திரம் எடுத்துக்கொண்டதுதான்.

மேலும், கடவுளைக் கடவுளாக இருக்கவும் இவர் அனுமதிக்கவில்லை.

இதைத்தான் இயேசு, 'நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்' என்கிறார்.

இன்று கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை எண்ணிப் பார்ப்போம்.

எத்துணை முறை நாம் கடவுளுக்கு ஆலோசனை சொல்பவர்களாக, அல்லது கடவுளின் வரையறைக்குள் நுழைய முயல்பவர்களாக இருக்கிறோம்?

2 comments:

  1. தனது தந்தை தனக்கென்று வரையறுத்த திட்டத்திற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை இயேசு கடிந்து கொள்வதைப் பார்க்கிறோம். இந்த சிக்கலில் பலமுறை மாட்டிக்கொண்டவர் பேதுரு மட்டுமே! இயேசு தன் இறைத்தன்மையில் செய்யும் விஷயங்களில் எல்லாம் அவரது மனித்த்தன்மையின் வலுவின்மையை ஞாபகப்படுத்தி அவரது கடமைக்கு குறுக்கே நிற்பதையும்,அதனால் அவர் இயேசுவினால் கொஞ்சம் கடுமையாக நடத்தப்படுவதையும் பார்க்கையில் பேதுருவின் மீது நமக்கு கொஞ்சம் பரிதாபம் ஏற்படுவது உண்மையே! இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நமக்கு நெருக்கமானவர்கள் மீது அக்கறை என்ற பெயரில் அவர்களின் கடமையை செய்யவிடாமல் குறுக்கே நிற்பவர் குறித்த தந்தையின் வரிகள் கொஞ்சம் கடுமையாகவே இருக்கிறது." நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்." இம்மாதிரி வார்த்தைகள் நமக்கும்,இறைவனுக்கும் இடையே உள்ள உறவில் நுழையாமல் பார்த்துக்கொள்வோம்.இறைவனைச் சார்ந்தவர்களை அவர்கள் போக்கிலேயே வாழவிடுவோம். அழகானதொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றியும்! பாராட்டும்!!!

    ReplyDelete
  2. ஆமென்! ஆமென்!!

    ReplyDelete