Friday, July 6, 2018

பழைய ஆடையில் புதிய துணி

நாளைய (7 ஜூலை 2018) நற்செய்தி (மத் 9:14-17)

பழைய ஆடையில் புதிய துணி

பழையதற்கும் புதியதற்குமான பொருந்துதன்மை குறித்து பேசுகிறது நாளைய நற்செய்தி வாசகம். நோன்பு என்பதை மையப் பொருளாக எடுத்து யோவானுடைய சீடர்களுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும் இடையே நிகழும் உரசலைப் பதிவு செய்கிறார் நற்செய்தியாளர்.

இதில் 'யோவான்' பழைய ஆடை எனவும், 'இயேசு' புதிய ஆடை எனவும்,
'யோவான்' பழைய தோற்பை எனவும், 'இயேசு' புதிய மது எனவும் குறிக்கப்படுகின்றனர்.

இது யோவானுடைய சீPடருக்கும், இயேசுவின் சீடருக்கும் இடையே விளங்கிய 'யார் பெரியவர்?' என்ற போராட்டத்தையே படம்பிடித்துக்காட்டுகிறது என நினைக்கிறேன்.

ஆனால், பொருந்துதன்மை இல்லாமலேயே பல நேரங்களில் நாம் வாழவேண்டியுள்ளது என்பதுதான் எதார்த்தம்.

ஒரு குழுமத்தில் பழைமைதான் வேண்டும் என பிடித்துக்கொள்பவர்களும் உண்டு. புதுமைதான் வேண்டும் என வாதிடுபவர்களும் உண்டு.

இரண்டுபேரும் சரிதான். இரண்டுபேரும் தவறுதான்.

பொருந்தாததன்மை இருந்தாலும் சமூகம் - குழுமம் முன்னேறிச் செல்கிறது. இரண்டிற்கும் சரி என்று சொல்பவர்கள் வாழ்க்கையை நகர்த்துவார்கள். ஒன்றிற்கு 'சரி' என்றும், மற்றதற்கும் 'இல்லை' என்றும் சொல்பவர் ஓரங்கட்டப்படுவர்.


1 comment:

  1. " யார் பெரியவர?" எனும் போராட்டம் இயேசுவின் பிரசன்னத்தின் போதே இருந்ததெனில் இன்று சொல்லவேண்டிய அவசியமில்லை."பொருந்தாத தன்மை இருந்தாலும் சமூகம்- குழுமம் இரண்டிற்கும் சரி சொல்பவர்கள் வாழ்க்கையை நகர்த்துவார்கள்; ஒன்றிற்கு 'சரி' என்றும் மற்றதற்கு 'இல்லை' என,றும் சொல்பவர் ஓரங்கட்டப்படுவர்"....என்கிறார் தந்தை.முன்னது புரிகிறது; பின்னது புரியவில்லை.என்னைப்பொறுத்தவரை 'மந்தை'யின் பெரும்பகுதியோடு சேர்பவரே 'சரி' யான பாதையில் செல்வதாகக் கருதப்படுவர்.பழைய ஆடையோ- புது ஆடையோ; பழைய தோற்பையோ- புதிய மதுவோ எல்லாமே இங்கே " survival of the fittest" தான்! தந்தைக்குத் தெரியாததா என்ன?!

    ReplyDelete