Thursday, July 12, 2018

ஓநாய்களிடையே

நாளைய (13 ஜூலை 2018) நற்செய்தி (மத் 10:16-23)

ஓநாய்களிடையே

திபா 23ல் எனக்குப் பிடித்த ஒரு வரி உண்டு:

'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்.'

இந்த வரியை சித்திரமாக வரைகின்ற ஓவியர் நிறைய வெறிநாய்களுக்கு நடுவே சாந்தமான ஒரு பூனைக்குட்டி நடந்து செல்வதாக சித்தரித்திருப்பார்.

நாளைய நற்செய்தியில் வரும் உருவகமும் ஏறக்குறைய இதை ஒத்தே இருக்கின்றது: 'ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி'

ஆட்டுக்குட்டியின் இயல்பு ஓநாயின் இயல்பை மாற்ற முடியாது. ஓநாய் எந்நேரம் எப்படி தாக்கும் என்று தெரியாது. ஆக, முழுமையான கையறுநிலையில்தான் இந்த ஆடும், அந்த பூனைக்குட்டியும் இருக்கும். நம் வாழ்வும் இப்படித்தானே அன்றாடம் நிகழ்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாமல் நாம் நகர்ந்து கொண்டிருக்கும். அடுத்த நிமிடத்தை தன் கையில் வைத்திருக்கும் அந்த இறைவனை நமக்குத் தெரிவதால் அடுத்த நிமிடம் நமக்குப் பயன் தருவதில்லை. இந்த நம்பிக்கையைத்தான் தன் சீடர்கள் வாழ்வில் விதைக்கின்றார் இயேசு.

1 comment:

  1. " நம்பிக்கை" எனும் விஷயத்தை நம்மில் விதையாக மட்டுமல்ல; ஒரு விருட்சமாகவே வளரச்செய்யக்கூடிய சக்தி இந்த " 23" ம் திருப்பாடலுக்கு உண்டு.திருப்பாடல் என்று ஒன்று இருப்பதே எனக்கு உணர்த்தப்பட்டது இந்த திருப்பாடலை வைத்துத் தான்.ஆம்...அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என்ற திசைதெரியா நிலையிலிருக்கும் ஒருவருக்கு " பயம்" என்ற ஒன்று இல்லை எனப்பறைசாற்றுகிறது இந்தத்திருப்பாடல். ஆனால் தந்தை தரும் இந்தப்படத்துடன் கூடிய விளக்கம் "ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி".... புதுமையானது மட்டுமல்ல; இவர் எங்கிருந்து இவ்விஷயங்களை சேகரிக்கிறார் எனும் வியப்பையும் கூடவே தருகிறது.ஆம்! "சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; நீர் என்னோடு இருப்பதால்." வாழ்விற்கு அர்த்தமும்,நம்பிக்கையும் யாரிடமிருந்தும்,எங்கே இருந்தும் வரலாம் என்ற நிதர்சனத்தை உணர்த்திய தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete