Sunday, July 15, 2018

ஒருவருடைய பகைவர்

'அமைதியை அல்ல. வாளையே கொணர வந்தேன்' என்று நாளைய நற்செய்தி வாசகத்தில் சொல்லும் இயேசு, ஒருவருடைய பகைவர் யார் என்பதற்கு புதிய வரையறையைத் தருகின்றார்: 'ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.'

சொந்த வீட்டில் உள்ளவர் எப்படி பகைவர் ஆக முடியும்?

ஒருவரைப் பற்றி அதிகம் தெரிவதும் பகைமைக்கு இட்டுச் செல்ல முடியும். இல்லையா?

ஆனால் இயேசு இந்தப் பொருளில் சொல்லவில்லை. மாறாக, இதை உருவகமாக சொல்லியிருக்கலாம்.

என் இதயத்தில் அமைதி களையக் காரணம் எனக்குள் இருக்கும் போராட்டம். உதாரணத்திற்கு, நான் இன்று மாலை திருப்பலிக்குப் போக வேண்டும் என வைத்துக்கொள்வோம். கூட்ட நெரிசல் அதிகமாக இடத்திற்குச் செல்ல வேண்டும். கார் ஓட்டிச் செல்லலாம் என்று என் மனம் ஒரு பக்கம் உற்சாகம் தருகிறது. மற்றொரு பக்கம் அதே மனம், 'வேண்டாம்' என பயம் தருகிறது. ஆக, துணிவுக்கும், பயத்திற்கும் இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. என் துணிவுக்கான எதிரி என்னுள் இருக்கின்ற பயம்தான்.

இவ்வாறாக, இயேசு சொல்லும் வாள் என்பது என்னுள்ளே நிகழும் போராட்டம். பகைவர் என்பவர் என்னுள்ளே எதிர்மறை உணர்வுகளைத் தூண்டி எழுப்புபவர்.

போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அமைதியை விட சில நேரங்களில் வாள்தான் சிறப்பு.

1 comment:

  1. கண்டிப்பாக ஒருவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்வதும் பகைமைக்கு இட்டுச்செல்ல முடியும்."Familiarity brings contempt" என ஒரு முதுமொழியே உள்ளதே. நம்மிடமுள்ள துணிவை மேலே கொண்டுவராமல் பிறந்த இடத்திலேயே அமுக்கி வைப்பதன் காரணம் கூட பயம்தான்.இப்படிப்பட்ட பயத்தோடு வாழ்வதும் கூட ஒரு போராட்டம் தான்.... ஒரு வாளுக்கு சம்ம்தான்.தந்தை சொல்கிறார்.... "போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை; அமைதியை விட வாள்தான் சிறப்பு" என்று.எப்பொழுது? அந்த வாள் நம் கழுத்தை அறுக்கும் கருவியாக இல்லாமல் நம் முதுகை வருடிக்கொடுக்கும் 'விசிறி' யாக இருந்தால் மட்டுமே! இந்த வாரம் இனிய வாரமாகட்டும் தந்தைக்கும்!! அனைவருக்கும்!!!

    ReplyDelete