Monday, October 2, 2017

ஓரியூர்

இன்று மதுரை உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர் புனித அருளானந்தரின் திருத்தலத்திற்கு திருயாத்திரை சென்றோம்.

சிவகங்கை மறைமாவட்டத்தின் எல்கைக்குள் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நான் 9ஆம் வகுப்பில் குருமடத்தில் சேர்ந்தபோது ஏற்கனேவே அங்கிருந்த சிவகங்கை மறைமாவட்டத்தின் அருள்சகோதரர்கள் தங்கள் ஊர்களின் பெயர்களைச் சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

தங்கச்சி மடம், அக்கா மடம், செங்குடி, இராஜசிங்க மங்கலம், சிலுகவயல், பச்சேரி, அக்காவயல், அரண்மனை வாசல், அரசனூர் போன்ற ஊர்களிலிருந்து படித்தவர்கள் சொன்ன பெயர்களை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பெயர்கள் தொன்மையானதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும் தெரிந்தன.

இன்று சிவகங்கை, காளையார்கோவில், பள்ளித்தம்மம், புலியடிதம்மம் வழியே கடந்து சென்றபோது இந்தப் பகுதியில் அமைந்திருந்த பழங்கால வீடுகளின் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. குட்டையான சுவர்கள். உயரமான ஓடுகள் வேயப்பட்ட கூரைகள். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் திண்ணைகள் இருந்தன. வீட்டுக்குள்ளேயே உணவுப்பொருள்களை சேமிக்கும் இடங்களும் இருந்தன.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் உண்டு.

எதார்த்தமான எளிமையை இந்த ஊர்களில் காண முடிந்தது.


3 comments:

  1. Soundari10/02/2017

    Fr. Yesu
    எங்க ஊருக்கே உள்ள எளிமையையும் எதார்த்தத்தையும் வரலாற்று சிறப்பையும் ரசிக்கும் உங்கள் மனதை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  2. Fr yesu
    இன்றயபடைப்பு அருமை

    ReplyDelete
  3. புனித அருளானந்தர் திருத்தலம் சென்ற தந்தை ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.திருத்தலமான ஓரியூரையும் தாண்டி சுற்று வட்டாரத்தின் அத்தனை ஊர்களின் பெயர்களையும்,அந்த ஊர்களுக்கே உரித்தான விசேஷமான தன்மைகளையும் அட்சரம் பிசகாமல் ஞாபகம் வைத்து எழுத்தில் வடித்திருப்பதும்,அதை சகோதரி சௌந்தரி போன்றவர்கள் பெருமை கொப்பளிக்கப் பாராட்டுவதும் அழகு.தந்தைக்கு ஒரு வேண்டுகோள்! மதுரை மாவட்டம் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக அந்தந்த ஊர்களின்....மக்களின் சிறப்பையும்,தனித்துவத்தையும் பிற மக்களுக்கு எடுத்துக்கூறலாமே!

    ReplyDelete